இந்த உவமையில், ஒரு மனிதனுக்கு நன்றாக விளைந்த நிலம் இருந்தது, அதில் வரும் தானியங்களைச் சேர்த்து வைக்க, களஞ்சியங்களை இடித்து, பெரிதாகக் கட்டி, தனக்கு விளைந்த தானியத்தையும் பொருள்களையும் அங்கே சேர்த்துவைத்து, நீண்ட காலம் வாழ்க்கையை அனுபவிக்கலாம் என்று நினைத்தான். இருப்பினும், அவன் இறந்துவிடின், அவன் சம்பாதித்த அனைத்தும் வேறொருவருக்காக அல்லவா பயன்படும்? (லூக்கா 12:13-21).
முதல் தவறு:
அவன் தவறான கேள்வியைக் கேட்டான்; "ஆண்டவரே நான் என்ன செய்ய வேண்டும் என்று நீர் விரும்புகிறீர்?" என்று கேட்பதற்குப் பதிலாக; நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான். ஆம், வாழ்க்கையில் நாம் கேட்கும் பல கேள்விகள் சுயத்தை மையமாகக் கொண்டவை, தேவனை மையமாகக் கொண்டவையோ அல்லது தேவனை மகிமைப்படுத்துவதாகவோ இல்லை. மனிதர்கள் தங்கள் சொந்த வாழ்க்கைக்கு மத்தியஸ்தர்கள் அல்ல.
இரண்டாவது தவறு:
வாழ்க்கையின் தவறான அணுகுமுறை; அது 'என் பயிர்கள்' அல்லது 'என் கனிகள் அல்லது 'என் தானியங்கள்' என்று அவன் கூறினான். ஒவ்வொரு விதையிலும் சூரிய ஒளி, நீர், கனிமங்கள் ஆகியவை தேவ கிருபையால் கிடைக்கப் பெறுவதால் அதன் பலன் பன்மடங்கு வளர்ந்து பெருகும். மகத்தான அறுவடைக்கு தனக்கு பெருமையை தேடிக் கொள்வது தவறு.
மூன்றாவது தவறு:
தவறான வாழ்க்கைத் தத்துவம்; அடுத்த பத்து தலைமுறைகளுக்குப் போதுமானதாக இருக்கும் என்று அவன் நினைத்தான். வாழ்க்கையை அனுபவிக்க அவன் முன்கூட்டியே ஓய்வு பெறுகிறான். கொடுக்கப்பட்ட வாழ்க்கை சும்மா இருக்கவும், ஓய்வெடுக்கவும், இளைப்பாறவும் அல்ல. தேவன் நம்மை ஆசீர்வதிக்க வேண்டுமெனில் நாம் கடினமாகவும் அநுதினமும் உழைப்பவர்களாக இருக்க வேண்டும். எளிமையான வாழ்க்கை முறை தத்துவத்தில் மூன்று வார்த்தைகள் மட்டுமே; அதாவது சாப்பிடுவது, குடிப்பது மற்றும் மகிழ்ச்சியாக இருப்பது. உழைப்பிற்கான கண்ணியமோ அல்லது பணிக்கான அர்த்தமோ இல்லை. தேவனோடான உறவைக் காட்டிலும் தனது செல்வத்தால் மகிழ்ச்சியடைந்து கொண்டாடலாம் என்று பணக்காரன் நினைத்தான்.
நான்காவது தவறு:
தேவனைப் பற்றிய தவறான புரிதல்; வேதாகமத்தின் படி தேவனையோ அவருடைய பிரசன்னத்தையோ நம்பாதவர்கள் ‘முட்டாள்’ என அழைக்கப்படுகிறார்கள். இந்த பணக்காரன் தேவனை மதிக்கவில்லை எனலாம்; ஏனென்றால் அவன் வாழ்க்கை முறையை அப்படி தான் வைத்திருந்தான். ஆம், தேவன் அவனுடைய எண்ணங்களிலோ, வாழ்க்கை முறையிலோ, முடிவுகளிலோ இல்லை. அவன் உலகத் தரங்களின்படி புத்திசாலியாகவும், ஞானமுள்ளவனாகவும் இருந்தான், ஆனால் தேவனுடைய கண்ணோட்டத்தில் அல்லது தராதரங்களில் ஏழையாகவும், நிர்வாணமாகவும், வெளிப்படுத்தப்பட்டவனாகவும் மற்றும் கண்டனம் செய்யப்பட்டவனாகவும் இருந்தான். துரதிர்ஷ்டவசமாக, அவனுடைய செல்வம் அனைத்தும் வேறொருவரால் அனுபவிக்கப்படும்.
பணக்காரன் புத்திசாலி, மூலோபாயம், எதிர்காலம் மற்றும் வெற்றியை நோக்கமாகக் கொண்டவன். இருப்பினும், தேவனின் பார்வையில், அவன் ஒரு முழுமையாக தோல்வியடைந்தவன் மற்றும் பரிதாபத்திற்குரியவன் என்றே சொல்ல வேண்டும்.
நான் ஞானவானா அல்லது விசுவாசத்தில் செல்வந்தனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்