கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒரு விதவை ஆலயத்தில் தன்னிடம் இருந்த அனைத்தையும் காணிக்கையாக செலுத்துவதைக் கண்டார் (மாற்கு 12:41-44 மற்றும் லூக்கா 21:1-4).
மிகுதியும் வறுமையும்:
மற்றவர்கள் அனைவரும் தங்கள் உடைமைகளில் இருந்து ஒரு பகுதியை கொடுக்க முடியும் என்றாலும், அவர்கள் மிகுதியில் இருந்து கொடுத்தார்கள். ஆனால் ஏழை விதவை மிகுதியில் இருந்து கொடுக்கவில்லை, ஏழ்மையில் இருந்து கொடுத்தாள். மற்றவர்களும் மற்றும் அந்த விதவையும் தங்களுக்காக என்ன வைத்துக் கொண்டு கொடுக்கிறார்கள் என்பதை தேவன் பார்க்கிறார். பணக்காரர்கள் தங்களுக்காக நிறைய வைத்திருந்தார்கள், விதவை தனக்காக எதையும் வைத்துக் கொள்ளவில்லை.
விகிதாசாரப்படி வழங்குதல்:
செல்வந்தர்கள் முன்னரே தசமபாகம் என்னும் தீர்மானிக்கப்பட்ட விகிதத்தைக் கொண்டிருந்தனர். இருப்பினும், ஏழை விதவை நூறு சதவிகிதத்தையும் கொடுத்தாள்; அது விதவையின் தரப்பிலிருந்து அன்பு, தியாகம் மற்றும் விசுவாசமாக கொடுத்தல் என்பதைக் காட்டுகிறது.
உந்துதல், எண்ணம் மற்றும் இதயம்:
தேவன் உள்ளான மனுஷனை மதிப்பிடுகிறார். அந்த விதவை தேவன் மீதான அன்பினால் தூண்டப்பட்டாள், நிர்பந்தமாகவோ அல்லது கடமையாகவோ அல்லது மதக் கடமையை நிறைவேற்றும் நோக்கத்தினால் அல்ல. மேலும் அவளுடைய நோக்கம் பார்வையாளர்களிடமிருந்து கைதட்டலைப் பெறுவதற்கும் அல்ல, தேவனுக்கு மகிமை சேர்ப்பதாகும். முணுமுணுப்பு இதயத்துடன் அல்ல, மகிழ்ச்சியான இதயத்துடன் அவள் கொடுத்ததை ஆண்டவர் இயேசுவால் பார்க்க முடிந்தது. "உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்" (2 கொரிந்தியர் 9:6-8). அவள் அதைக் கொடுப்பதற்கான ஒரு பாக்கியமாகவும் வாய்ப்பாகவும் கருதினாள்.
செலவு:
தேவன் ஒரு தெய்வீக கண்ணோட்டத்தில் செலவை மதிப்பிடுகிறார். விதவை கொடுத்தது டெனாரியஸில் (தினாரியு: இது ரோம வெள்ளிக் காசு) 1 சதவீதமாக இருக்கலாம். ஒரு டெனாரியஸ் என்பது ஒரு சராசரி தொழிலாளிக்கு ஒரு நாள் ஊதியம். காசு அல்லது துட்டு என்ற வார்த்தையின் அர்த்தம் அது மிகவும் குறைவான மதிப்புடையது. தனக்கென ஒன்றை வைத்துக்கொள்ள அவள் தேர்வு செய்திருக்கலாம் ஆனால் இரண்டையும் கொடுத்துவிட்டாள். மதிப்பீடு என்பது ஒரு நபர் எவ்வளவாய் கொடுக்கிறார் என்பதைக் குறித்து தீர்மானிக்கப்படுகிறது ஆனால் அதை பணத்தை மட்டும் அல்ல, அன்பும் பிரயாசமும் தேவனிடம் மதிப்பைக் கொண்டு சேர்க்கும். "இலவசமாய் வாங்கி, என் தேவனாகிய கர்த்தருக்கு சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தாமல், அதை உன் கையிலே விலைக்கிரயமாய் வாங்குவேன் என்று சொல்லி, தாவீது அந்தக் களத்தையும் மாடுகளையும் ஐம்பது சேக்கல் நிறை வெள்ளிக்குக் கொண்டான்" (2 சாமுவேல் 24:24).
தேவனுடைய வெகுமதி:
ஏழை முதல் பணக்காரன் வரை யாராக இருந்தாலும் தேவனைப் பிரியப்படுத்தலாம், ஏழை விதவை அவர்கள் அனைவரையும் விட அதிகமாக கொடுத்தாள் என்று தேவன் கூறினார். ஆனால் விதவைக்கு உடனடியாக வெகுமதி வழங்கப்படவில்லை. ஆனாலும், அவள் நித்திய வெகுமதிகளை அறுவடை செய்வாள். விதவையின் பரிசைப் புறக்கணிக்க தேவன் நியாயமற்றவரோ அல்லது மறந்தவரோ அல்ல. ஆம், "தமது நாமத்திற்குக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே" (எபிரெயர் 6:10).
இந்த ஏழை விதவையைப் போல நான் தாராளமாகக் கொடுக்கும் நபரா?
Author: Rev. Dr. J. N. Manokaran