தேவன் தேசங்களை நியாயந்தீர்க்கிறார்!

 "நீதி ஜனத்தை உயர்த்தும்; பாவமோ எந்த ஜனத்துக்கும் இகழ்ச்சி" (நீதிமொழிகள் 14:34). எகிப்து அவர்களின் அநீதியான செயல்களுக்காக நியாயந்தீர்க்கப்பட்டது.  முதலில், அவர்கள் யோசேப்புக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கவில்லை.  இரண்டாவதாக, அவர்கள் இஸ்ரவேல் புத்திரரை ஒடுக்கினார்கள்.  மூன்றாவதாக, அவர்கள் எபிரேயரின் ஆண் குழந்தைகளைக் கொன்றனர். நான்காவதாக, தேவன் தம் மக்களை அனுப்பிவிட மோசே மூலம் பேசியபோது, ​​பார்வோன் மறுத்து தேவனைக் கேள்வி கேட்டான். ஆபிரகாமின் சந்ததியினர் சுமார் நானூறு ஆண்டுகள் அடிமைகளாக இருப்பார்கள் என்று தேவன் முன்னறிவித்திருந்தார்; அவர் தேசத்தை நியாயந்தீர்ப்பார் (ஆதியாகமம் 15:14). 

1) போலியான தெய்வங்கள்:
எகிப்தின் போலியான தெய்வங்கள் நியாயந்தீர்க்கப்பட்டன (யாத்திராகமம் 12:12). எகிப்தியர்கள் நைல் நதி, பார்வோன் உட்பட இன்னும் பலரை தங்கள் தெய்வங்களாக வணங்கினர்.  உதவியற்ற மற்றும் அதிர்ஷடமற்ற அவர்களுக்கு தவறான பாதுகாப்பு உணர்வை தான் அவைகள் வழங்கின. 

 2) விவசாயம்:
 கொள்ளை நோய் ஏற்பட்டதில் அவர்களின் பயிர்களும், பச்சை மரங்களும் அழிந்தது. யோசேப்பு எகிப்தை அத்தகைய பஞ்சத்திலிருந்து காப்பாற்றியிருந்தான், ஆனால் இப்போது தேவன் எகிப்தை உணவு பற்றாக்குறையுடன் நியாயந்தீர்த்தார்.

3) பொருளாதாரம்:
எகிப்தின் கால்நடைகளும் அழிக்கப்பட்டன. பண்டைய பொருளாதாரத்திற்கு கால்நடைகள் முக்கியமானவை.

4) உடல்நலம் மற்றும் சுகாதாரம்:
மக்களின் ஆரோக்கியம் மற்றும் பொது சுகாதாரம் ஆகியவை பிரச்சனைக்குரியதாக இருந்தன.  வண்டுகள், தவளைகள் மற்றும் கல்மழை போன்ற தொல்லைகள் ஆரோக்கியத்தை அச்சுறுத்தின. இறந்த தவளைகளின் குவியல்கள் துர்நாற்றம் வீசியது மற்றும் சுகாதார கேடும் ஏற்பட்டது.

5) வாழ்வாதாரம்:
எகிப்தியர்கள் இஸ்ரவேல் புத்திரரின் இலவச சேவையை அனுபவித்தனர்.  தாங்களும் உழைக்க வேண்டுமே என்ற எண்ணமே இல்லாதிருந்தனர். திடீரென்று, இஸ்ரவேலர்கள் வெளியேறியபோது, ​​அவர்கள் பழக்கமில்லாத வேலை செய்ய வேண்டியிருந்தது. மேலும், அவர்களுக்கு அனுபவமோ நிபுணத்துவமோ (சிறந்த திறன்) இல்லை.

6) ராணுவம்:
பிரதானமான அறுநூறு இரதங்களும் செங்கடலில் மூழ்கின (யாத்திராகமம் 14:7,8, 28). அதற்கு முன்னதாக எகிப்தியர்கள் அனைவரும் தங்கள் முதல் பிறப்பை இழந்திருந்தனர் (யாத்திராகமம் 12:29). எவ்வளவு இழப்புகள்? 

7) பார்வோன்:
எகிப்தியர்கள் பார்வோன் தான் கடவுள் என்று நம்பினர். எனவே, கடவுள் யார் என்று மோசேயிடம் கேட்கும் தைரியம் அவனுக்கு இருந்தது. ஆனால் பார்வோன்; "நான் இஸ்ரவேலைப் போகவிடக் கர்த்தரின் வார்த்தையைக் கேட்கிறதற்கு அவர் யார்? நான் கர்த்தரை அறியேன்; நான் இஸ்ரவேலைப் போக விடுவதில்லை என்றான்" (யாத்திராகமம் 5:2). பார்வோனின் அரசியல் தலைமையும் செங்கடலில் மூழ்கியதால் முடிந்தது.

தேவன் தனிநபர்களை மட்டுமல்ல, சமூகங்களையும் தேசங்களையும் நியாயந்தீர்க்கிறார்.

தேவனின் இறையாண்மை அதிகாரம் எனக்கு தெரிகிறதா அல்லது நான் உணர்கிறேனா ?

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download