ஆபேல் முதல் சகரியா வரை

கர்த்தராகிய இயேசு பிறந்து, தம் மக்களால் நிராகரிக்கப்பட்டு, மரித்து, அடக்கம் செய்யப்பட்டு, உயிர்த்தெழுந்த காலம் என்பது இஸ்ரவேல் தேசத்தின் எல்லா தலைமுறைகளிலும் மிகவும் பாக்கியமானது.  இருப்பினும் நீதிமானாகிய ஆபேலின் இரத்தம்முதல் தேவாலயத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே அவர்கள் கொலைசெய்த பரகியாவின் குமாரனாகிய சகரியாவின் இரத்தம்வரைக்கும், பூமியின்மேல் சிந்தப்பட்ட நீதிமான்களின் இரத்தப்பழிக்கெல்லாம் அவர்கள் மிகவும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்.  சகரியா என்ற பெயரில் அடையாளம் காணக்கூடிய இரண்டு நபர்கள் உள்ளனர், இருவரும் பலிபீடத்திற்கும் ஆலயத்திற்கும் இடையில் கொல்லப்பட்டனர்.

ஆபேல்:
ஆபேல் காயீனை விட சிறந்த மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பலியை செலுத்திய விசுவாசமுள்ள மனிதன்; காயீனின் பலி நிராகரிக்கப்பட்டது (ஆதியாகமம் 4; எபிரெயர் 11:4). ஆபேல் முதற்பேறான ஆட்டுக்குட்டியைக் கொண்டுவந்து இரத்த பலியைச் செலுத்தினான், இது தீர்க்கதரிசனமாக தேவ ஆட்டுக்குட்டியான கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையே சுட்டிக்காட்டியது.  ஆபேல் நேர்மையானவன் அல்லது தன்னை விட மேலானவன் என்று காயீன் பொறாமைப்பட்டான்.  விசுவாசத்தையும் ஆவிக்குரிய வாழ்வையும் அளவிடுவதற்குப் பதிலாக, மனிதகுலத்தின் இரக்கமற்ற முதல் கொலையின் மூலம் ஆபேலை கொன்றகற்றினான்.  பொறாமை, கோபம் மற்றும் கசப்பு ஆகியவை இந்த கொலைக்கு வழிவகுத்தன.

யோய்தாவின் மகன் சகரியா:
நாளாகமத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளபடி பழைய ஏற்பாட்டின் கடைசி நபர் சகரியா.  அகசியாவின் எஞ்சியிருக்கும் ஒரே மகன் யோவாஸ்.  யோவாஸ் ஏழு வயதாக இருந்தபோது அவனை ராஜாவாக்கிய ஆசாரியன் யோய்தா;  ஆசாரியனாகிய யோய்தாவின் நாளெல்லாம் யோவாஸ் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான். ஆசாரியன் இறந்த பிறகு, அவன் வழி விலகினான்.  ஆம்,  "அவர்கள் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்தை விட்டுவிட்டு, தோப்பு விக்கிரகங்களையும் சிலைகளையும் சேவித்தார்கள்; அப்பொழுது தேவனுடைய ஆவி ஆசாரியனாகிய யோய்தாவின் குமாரனான சகரியாவின்மேல் இறங்கினதினால், அவன் ஜனத்திற்கு எதிரே நின்று: நீங்கள் கர்த்தருடைய கற்பனைகளை மீறுகிறது என்ன? இதினால் நீங்கள் சித்திபெறமாட்டீர்கள் என்று தேவன் சொல்லுகிறார்; நீங்கள் கர்த்தரை விட்டுவிட்டதினால் அவர் உங்களைக் கைவிடுவார் என்றான்" (2 நாளாகமம் 24:20). அதனால் கோபமடைந்த ராஜாவாகிய யோவாஸ் அவனுடைய தகப்பனாகிய யோய்தா தனக்குச் செய்த தயையை நினையாமல் அவனுடைய குமாரனைக் கொன்று போட்டான்;  தான் ராஜாவாக அபிஷேகம் செய்யப்பட்ட அதே இடத்தில் சகரியாவை படுகொலை செய்தான் (2 நாளாகமம் 23:10-11; 24).

பரகியாவின் மகன் சகரியா (மத்தேயு 23:35):
புலம்பல் புத்தகத்தின் யூத விளக்கவுரையில், இத்தோவின் மகன் பரகியாவின் மகன் சகரியா, பிரதான ஆசாரியனும் விசுவாசமுள்ள தீர்க்கதரிசியும் பாவநிவாரண நாளில் ஆலயத்தில் கொல்லப்பட்டான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பொறாமை, கோபம், கசப்பு, வன்முறை, நன்றியின்மை, கீழ்ப்படியாமை மற்றும் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் செய்த கலகம் ஆகியவை தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளை நிராகரிப்பதற்கும் தீர்க்கதரிசிகளைக் கொல்வதற்கும் வழிவகுத்தன.  பின்னர் அவர்கள் தேவ குமாரனையே கொல்லுமளவு தகுதி அடைந்தனரே.

 தேவனின் அறிவுரைகளுக்கு நான் எவ்வாறு மறுமொழி அளிக்கிறேன்?

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download