சமூகவியலாளர்களின் கூற்றுப்படி, நான்கு வகையான செல்வங்கள் உள்ளன. எல்லா வகைகளும் ஒரு நித்திய கண்ணோட்டத்தில் கணக்கிடப்பட வேண்டும், மதிப்பிடப்பட வேண்டும் மற்றும் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.
உடைமைகள்:
உங்களிடம் என்ன இருக்கிறது? ஒருவரிடம் நிலங்கள், கட்டிடங்கள், வீடுகள், முதலீடுகள், சேமிப்புகள், தங்கம் அல்லது அதிகமான பணம் இருக்கும் போது ஒருவர் பணக்காரர் என்று மக்கள் கூறுகின்றனர். அதிகமானவர்கள் நல்ல மனப்பான்மையைக் கொண்டிருப்பார்கள். இதில் பெரும்பாலும் பரம்பரையாக பெறப்பட்டது, மேலும் சில சுயமாக சம்பாதித்தவை. ஆனால் அது எல்லா செல்வங்களிலும் மிகக் குறைவானது என்றே சொல்ல வேண்டும். ஆனாலும், அதே செல்வத்தைக் கொண்டு பரலோகத்தில் பொக்கிஷங்களைச் சேமித்து வைப்பதற்கும் பரலோகத்திற்கு நண்பர்களைச் சேர்ப்பதற்கும் பயன்படுத்தப்படலாம் (மத்தேயு 6:19-20; லூக்கா 16:9). அதே சமயம், செல்வம் தீமைக்கும், அடக்குமுறையை நிலைநாட்டவும், மற்றவர்களை அழிக்கவும் பயன்படுத்தப்படலாம். தாலந்துகளின் உவமையில் உள்ள ஒரு தாலந்து வைத்திருந்த மனிதனைப் போல சிலர் அதைப் பயன்படுத்துவதில்லை.
தொழில்:
நீங்கள் என்ன செய்கிறீர்கள்? சமுதாயத்திற்குப் பயனளிக்கக்கூடிய வகையில் திறமைகள், திறன்கள் மற்றும் தாலந்துகளை பயன்படுத்துவது இதில் அடங்கும். ஒரு மருத்துவ நிபுணர் சமூகத்திற்கு சேவை செய்கிறார்; நல்ல வருமானம், புகழ், மனநிறைவு ஆகியவற்றால் அவர் பணக்காரராக இருக்கிறார். துரதிருஷ்டவசமாக, சிலர் ஆடுகள், மாடுகள், கோழிகள் மற்றும் வீடுகளில் திருடுவது அல்லது ஹேக்கிங் மற்றும் வெள்ளை காலர் குற்றங்களைச் செய்வதில் ஈடுபடுவது ஆகியவற்றைத் தங்கள் தொழிலாகக் கொண்டுள்ளனர்.
திறமை:
உங்களுக்கு என்ன தெரியும்? அறிவு என்பது மக்களை ஆசீர்வதிக்கப் பயன்படும் மற்றொரு செல்வம். ஆசிரியர்கள், பேராசிரியர்கள், பயிற்சியாளர்கள், வழிகாட்டிகள், ஆலோசகர்கள், போதகர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் அறிவாலர்கள் அறிவைப் பெறுகிறார்கள் மற்றும் அறிவைப் பகிர்கிறார்கள். சிலருக்கு நன்மை பயக்காத, ஆனால் அழிவுகரமான அறிவு இருக்கிறது (1 கொரிந்தியர் 8:1). அன்பு இல்லாத அறிவு அழிவைத் தரக்கூடியது. சில அறிவு ஒரு நபருக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் தவறான போதனைகளினால் அவரையும் மற்றவர்களையும் அழிக்கக்கூடும். பிரசங்கிகளும் சத்தியத்தை இலாபத்திற்காக விற்க கூடுமே என்று பவுல் எச்சரிக்கிறார் (2 கொரிந்தியர் 2:17).
ஆளுமை:
நீங்கள் என்ன? இதுவே குணச் செல்வம். முதலில் , ஒரு நபர் கடவுளின் பிள்ளையாக மாறுவதன் மூலம் கடவுளுக்கு முன்பாக நீதியுள்ளவராக இருக்க வேண்டும் (யோவான் 1:12). இரண்டாவது , நீதிமான் என அறிவிக்கப்பட்டயாயிற்று. மூன்றாவது , நம்பிக்கையில் பணக்காரராக இருக்க வேண்டும் (யாக்கோபு 2:5). நான்காவது , போதுமென்கின்ற மனதுடன் கூடிய தெய்வபக்தியே ஒரு பெரிய ஆதாயம் (1 தீமோத்தேயு 6:6). ஐந்து கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷப்பட வேண்டும் (பிலிப்பியர் 4:4). ஆறு , பரிசுத்தம், நேர்மை மற்றும் பணிவு கொண்ட வாழ்க்கையை நடத்த வேண்டும். ஏழு , பரலோக ராஜ்யத்தின் குடிமக்களாக தேவனிடம், பரலோகத்தின் நித்திய நம்பிக்கையை பெற்றிருக்க வேண்டும்.
தேவனுக்கு முன்பாக நான் செல்வந்தனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்