ஒரு மனிதன் தெருவில் நடந்து சென்றபோது ஒரு தங்க மோதிரத்தைக் கண்டான். அவனுக்கு மிகவும் உற்சாகமானது; மேற்கொண்டு ஒரு யோசனையும் வந்தது, இப்படி பல தங்க நகைகள் மண்ணுக்குள் புதைந்து கிடக்கும் என்று நினைத்தவனாய் சாலைகளில் குனிந்துத் தேடிக் கொண்டே நடந்தான். அதனால் அவன் சரீரத்தோரணை நேராக காணப்படாமல் வளைந்தே காணப்பட்டது. கொடுமை என்னவென்றால், தனது வாழ்நாள் முழுவதும் மற்றொரு தங்க மோதிரத்தைத் தேடி வீணாக்கினான்.
சரியான கவனம்:
தங்க மோதிரங்கள், லாட்டரி அடிப்பதில் சந்தோஷம், ஜாக்பாட் அல்லது புதையல் பானைகளை தோண்டி எடுப்பது போன்றவை வாழ்க்கையின் மையமாக இருக்க முடியாது. மக்கள் தன்னைத் தேட வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார் (ஏசாயா 55:6-7). தேவன் ஒவ்வொரு மனிதனையும் படைத்து, இந்த உலகத்திற்கு ஒரு குறிப்பிட்ட வரலாற்று மற்றும் புவியியல் சூழலில் ஒரு திட்டவட்டமான நோக்கத்துடன் அனுப்பி உள்ளார். படைப்பாளர் மகிழ்ச்சியுடன் வாழ்க்கையில் தமது நோக்கத்தை வெளிப்படுத்தவும் செய்கிறார்.
அவசர உணர்வு:
தேவனைத் தேடுவது பொழுதுபோக்கு அல்ல. இது அனைத்து மனிதர்களுக்கும் அவசர, முக்கியமான, குறிப்பிடத்தக்க மற்றும் கடினமான பணியாகும். அதைத் தாமதப்படுத்தவோ, ஒத்திவைக்கவோ அல்லது நிராகரிக்கவோ முடியாது.
நீதியைத் தேடுங்கள்:
தேவனைத் தேடுவது நீதியைத் தேடுவது போலாகும். ஒரு அநீதியான மனிதன் தனது தீய, குற்ற, சுயநல மற்றும் பாவ எண்ணங்களை கைவிட வேண்டும் (செப்பனியா 2:3-4). தேவன் நீதியுள்ளவர், எல்லா மனிதர்களும் சரியானதைச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். கொர்நேலியு தேவனை அறியாமல் நீதியான செயல்களைச் செய்தபோது, பேதுரு மூலம் நற்செய்தியைக் கேட்க அவனுக்கு உதவ ஒரு தேவதூதன் அவனைச் சந்தித்தார் (அப்போஸ்தலர் 10).
மனந்திரும்புதலுடன் தேடுங்கள்:
தேடுபவர்கள், மனந்திரும்பி, பொல்லாத வழியைக் கைவிட வேண்டும். இது பாவத்தின் விளைவுகளிலிருந்து தப்பிக்க முயற்சிப்பது மட்டுமல்ல, பரிசுத்தமான மற்றும் நீதியான வாழ்க்கையை நடத்துவதற்கான உறுதிப்பாடு ஆகும்.
தாழ்மையுடன் தேடுங்கள்:
தேவனைத் தேடுபவர்கள் இளையக் குமாரனைப் போல் பணிவுடன் தேவனிடம் திரும்ப வேண்டும். அவர் ஒரு அடிமையாக அல்லது வேலைக்காரனாக வைத்துக் கொண்டாலும் பரவாயில்லை, ஆனால் மகிழ்ச்சியுடனும், மனவிருப்பத்துடனும் திரும்பி வர தயாராக இருந்தான் (லூக்கா 15:19).
மிகுந்த மன்னிப்பு:
தேவனைத் தேடுபவர்கள் தாராளமான மன்னிப்பையும், நல் வாழ்வையும் நிச்சயம் பெறுவார்கள் (ஏசாயா 55:7). பாவத்தின் தண்டனையிலிருந்து மன்னிப்பதே ஆரோக்கியமான மறுசீரமைப்பு; பாவம், சோதனைகள், உலகம் மற்றும் சாத்தானை வெல்லும் வல்லமை; மற்றும் பரலோகத்தில் தேவனுடைய பரிசுத்த சமூகத்தில் அவருடன் நித்திய நித்தியமாக ஒரு வாழ்வு.
நான் தேவனை சிரத்தையுடன் தேடுகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்