கள்ளப் போதகர்கள் மற்றும் கொலைகார மேய்ப்பர்கள்

விசித்திரமாக, கடைசி நாட்களில் கள்ள போதகர்கள், கள்ளத் தீர்க்கதரிசிகள், கள்ள மேய்ப்பர்கள், கள்ளச் சுவிஷேசகர்கள் எண்ணிக்கை பெருகுகிறது.  தன்னை போதகராக அறிவித்துக் கொண்ட விமல் ராஜ், 35 வயதுள்ளவர், தனது மனைவி வைஷாலியை கழுத்தை நெரித்து கொன்றார்.   அதை இயற்கை மரணம் என்று பொய்யாக்கி, தனது கிராமத்தில் அடக்கம் செய்ய முயன்றார்.  பின்பதாக கைது செய்யப்பட்ட அவர், தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார் (டைம்ஸ் ஆஃப் இந்தியா, மே 1, 2024).

சோம்பேறி மற்றும் பைத்தியம்:  
சிலர் சோம்பேறியாக இருக்க போதகர்களாக மாறுகிறார்கள்.   போதகராக இருப்பதற்கு கடினமாக உழைக்க வேண்டிய அவசியம் இல்லை, நிறைய ஓய்வும் அதிக பலன் தரும் பணி என்றும் அவர்கள் கருதுகின்றனர்.   ஆனால், யதார்த்தம் வேறு.   உண்மையான போதகர்கள் கடினமாக உழைக்க வேண்டும், தியாகம் செய்ய வேண்டும், முதலீடு செய்ய வேண்டும் மற்றும் முடிவுகளுக்காக பொறுமையாக இருக்க வேண்டும்.  கிறிஸ்துவுக்காக பணி செய்வது என்பது ஒரு விளையாட்டு வீரர், ஒரு போர்ச்சேவகன் மற்றும் ஒரு விவசாயி என ஒப்பிடுகிறார் பவுல் (2 தீமோத்தேயு 2:3-7).

வரதட்சணை பேய்:  
இந்திய சட்டம் வரதட்சணை கொடுப்பதையோ வாங்குவதையோ தடை செய்கிறது.   இது கிரிமினல் குற்றமாகும்.   துரதிர்ஷ்டவசமாக, பல கிறிஸ்தவர்கள் இந்த நியமனத்தை மீறுவதால் போதகர்கள் மற்றும் பிரசங்கிகள் உட்பட குற்றவாளிகள் ஆகிறார்கள்.   இது எட்டாவது மற்றும் பத்தாவது கட்டளைகளை மீறுகிறது  (யாத்திராகமம் 20:1-17). கணவன் கடவுளாகவும், மனைவி சிஷ்யையாகவும் அடிமையாகவும் இருக்கும் போது வரதட்சணை முதல் தட்சணம் (புனிதமான காணிக்கை) ஆகும்.   இந்த கருத்தை வேதாகமம் கற்பிக்கவில்லை.   மாறாக, வேதாகமம் ஆண் பெண் இருபாலரும் தேவனின் சாயலில் படைக்கப்பட்டவர்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது. 

துஷ்பிரயோகம்:  
இரண்டு மனிதர்கள் ஒன்றாக இணையும் போது (ஈருடல் ஓருயிர்) திருமணம் என்பது பரிசுத்தமான உடன்படிக்கையாகிறது.   வாழ்க்கைத் துணைக்கு தீங்கு விளைவிப்பது என்பது தன்னைத் தானே அழித்துக் கொள்வதற்கு சமம். போதகர் என்று அழைக்கப்படும் விமல் ராஜ் அவருக்கு திருமணம் பற்றிய அடிப்படை புரிதல் இல்லை, உடன்படிக்கை என்ற சொல்லை அறியாதவர் போல, சுய அழிவில் ஈடுபட்டார். 

கொலை:  
கொலையைத் தடுக்கும் ஆறாவது கட்டளையை போதகர் மீறினார்.   அவரது மனைவி அவருடைய மனைவி மட்டுமல்ல, தேவனின் பணியாள் மற்றும் அவரது சரீரம் பரிசுத்த ஆவியின் ஆலயம்.   அதாவது அவர் தேவனின் ஆலயத்தை அழித்தார், நிச்சயமாக தேவனை நிந்தித்தார் எனலாம் (1 கொரிந்தியர் 6:19-20).

 ஆண் குழந்தை:  
 குழந்தைகள், ஆண் அல்லது பெண், அது தேவனளிக்கும் ஈவு மற்றும் வெகுமதி (சங்கீதம் 127:3). சார்பு அல்லது பாரபட்சம் என்பது பாவம், ஏனென்றால் தேவனிடத்தில் பட்சபாதமில்லையே (ரோமர் 2:11). வயதான காலத்தில் கவனித்துக் கொள்ள ஒரு மகன் தேவை என நினைப்பது ஒரு தவறான கலாச்சார யோசனை.  பெற்றோர்கள் பிள்ளைகளுக்குச் சுதந்தரத்தை விட்டுச் செல்ல வேண்டும் என்று வேதாகமம் கற்பிக்கிறது (நீதிமொழிகள் 13:22).

 நான் வேதாகமம் சொல்லாத கருத்துக்களையும் கள்ளப் போதகர்களையும் பின்பற்றுகிறேனா?

 Author: Rev. Dr. J .N. மனோகரன்

 



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download