கபட மதவாதம்

வேதபாரகர்கள் வகுத்த பாசாங்குத்தனமான போக்குகளைப் பின்பற்ற வேண்டாம் என்று கர்த்தராகிய ஆண்டவர் தம் சீஷர்களை எச்சரித்தார் (லூக்கா 20:45-47). பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் புளித்தமாவைப் பற்றி சீஷர்கள் எச்சரிக்கப்படுகிறார்கள் (மத்தேயு 16:6). அவர்களெல்லாம் பிளாஸ்டிக் மரங்கள், கனியற்ற ஆனால் ஈர்க்கக்கூடியவர்கள், நடப்பட்ட மரங்களைப் போல அவர்கள் இல்லை (சங்கீதம் 1:1-3).

நீண்ட அங்கிகள்:
வணிகர்கள் உட்பட சாதாரண மக்கள் எளிமையான ஆடைகளை அணிவார்கள், ஆனால் மதத் தலைவர்கள் ஆவிக்குரிய படிநிலையில் தாங்கள் தான் மேலானவர்கள் அல்லது உயர்ந்தவர்கள் எனக் காட்ட நீண்ட ஆடைகளை அணிவார்கள்.  துரதிர்ஷ்டவசமாக, இந்த மதத் தலைவர்கள் தங்கள் புனிதத்தன்மையைக் காட்டிலும் அதாவது பரிசுத்தமான ஜீவியத்தை மாதிரியாக காட்டுவதற்குப் பதிலாக வெளிப்புறத் தோற்றமான ஆடை அலங்காரத்தை தங்கள் ஆவிக்குரிய அடையாளமாகக் கருதினர்.  "தங்கள் கிரியைகளையெல்லாம் மனுஷர் காணவேண்டுமென்று செய்கிறார்கள்; தங்கள் காப்புநாடாக்களை அகலமாக்கி, தங்கள் வஸ்திரங்களின் தொங்கல்களைப் பெரிதாக்குகின்றனர்" (மத்தேயு 23:5).  

பாராட்டுக்களுக்காக ஏங்குதல்:
வேதபாரகர்கள் கனத்திற்காக,  மரியாதைக்காக, மற்றவர்கள் தங்களை புகழ் வேண்டும் என்பதற்காக ஏங்குவார்கள்.  எனவே, அவர்கள் உயர்ந்த மரியாதைக்குரிய இடங்களை விரும்பினர் மற்றும் மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்த வேண்டும், கனப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்த்தனர்.  அவர்கள் பெற்றோரை விட அதிகமாகவோ அல்லது முதன்மையாகவோ மதிக்கப்பட வேண்டும் என்று கற்பித்தார்கள்.  அவர்கள் கோரிய மரியாதை தேவனுடனான சமத்துவம்; அதாவது தேவனுக்கு நிகரான கனம்.  யூத மக்கள் அவர்களை ‘ரபி’ (போதகரே) என்று அழைக்கும்படி அறிவுறுத்தப்பட்டனர்.

நீண்ட கை:
உண்மையில், சந்தேகத்திற்கு இடமில்லாத நபர்களிடமிருந்து திருடுவதற்கு அவர்களுக்கு நீண்ட கை உள்ளது.  பேராசை மற்றும் அடக்குமுறை மனப்பான்மையால் நிரம்பிய அவர்கள், மதத்தை மறைப்பாக அணிந்துகொண்டு குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர்.  அவர்கள் பணக்கார விதவைகளின் நம்பிக்கையைப் பெற்றனர், அதன்மூலம் அவர்களின் செல்வத்தை கொள்ளையடித்தனர் அல்லது பரிசுகளை கோரினர்.  ரபீக்கள் தங்கள் கற்பித்தலுக்கு கட்டணம் வசூலிக்க அனுமதிக்கப்படுவதில்லை.  எனவே, இந்த தலைவர்கள் மறைமுகமாக முறையிட்டனர் அல்லது பணக்கார விதவைகளிடமிருந்து பரிசுகளை கோரினர்.

 நீண்ட ஜெபங்கள்:
 பிறரைக் கவர்வதற்காக  அலங்கரிப்பான வார்த்தைகளால் நீண்ட ஜெபங்களைப் பொது இடங்களில் செய்யும் பழக்கம் அவர்களிடம் இருந்தது.  மாறாக, அந்தரங்கமாகவோ இரகசியமாகவோ ஜெபிக்கும்படி கர்த்தர் தம் சீஷர்களுக்குக் கற்றுக்கொடுத்தார் (மத்தேயு 6:5-6).  வார்த்தைஜாலங்களால் தேவனைக் கவர முடியாது, ஆம் பரிசேயர் ஜெபம் நிராகரிக்கப்பட்டது (லூக்கா 18:9-14). நம் இருதயத்தில் என்ன இருக்கிறது மற்றும் என்ன நாம் பேசப் போகிறோம் என்பதெல்லாம் தேவன் அறிவார் என்பதை வேதம் அழகாக சொல்கிறது.  "என் நாவில் சொல் பிறவாததற்கு முன்னே, இதோ, கர்த்தாவே, அதையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர்" (சங்கீதம் 139:4

 தேவனின் கண்டிப்பு:
 முதலில், அவர்கள் மாய்மாலக்காரர்கள் என்று கண்டிக்கப்படுவார்கள்.  அவர்கள் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைக்கு ஒப்பாயிருக்கிறார்கள் (மத்தேயு 23:27). இரண்டாவதாக, அவர்கள் குருடருக்கு வழிகாட்டுகிற குருடராயிருக்கிறார்கள்; ஆம், மற்றவர்களை தவறாக வழிநடத்துகிறார்கள்.  தாங்கள் குழியில் விழுவது காணாமல் மற்றவர்களையும் விழ வைக்கிறார்கள் (மத்தேயு 15:14). மூன்றாவதாக, அவர்கள் போதகர்கள், எனவே கடுமையான தராதரங்களால் கடுமையான தண்டனை வழங்கப்படும். "என் சகோதரரே, அதிக ஆக்கினையை அடைவோம் என்று அறிந்து, உங்களில் அநேகர் போதகராகாதிருப்பீர்களாக" (யாக்கோபு 3:1).  

 நான் உண்மையான சீஷனா அல்லது கபடக்காரனா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download