போலியான அவமானம்

ஒரு உயர்ந்த அரசியல்வாதியின் பேரன் ஒரு சைக்கோ, அவன் பல பெண்களைக் கடத்தி, துன்புறுத்தி, பாலியல் பலாத்காரம் செய்தான், பின்னர் அவர்களை மிரட்டி வீடியோ எடுத்து வைத்துக் கொண்டான்; பாதிக்கப்பட்டவர்கள் எப்போதும் தனக்கு கீழ் பயந்து அவமானத்தோடே‌ இருக்கவும் அப்படி செய்தான்.   ஆனால் எப்படியோ அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.   தந்திரமாக, தனது அரசியல் செல்வாக்கையும் தொடர்புகளையும் பயன்படுத்தி நாட்டை விட்டு தப்பினான்.   இந்த தேசபக்தி கொண்ட அரசியல்வாதி, வீடியோவைக் கசியவிட்ட நபரைக் குற்றம் சாட்டினார் மற்றும் அவரது குடும்பத்தை இழிவுபடுத்தியதற்காக அந்த நபரை கைது செய்ய வேண்டும் என்றும் கோரினார். இந்த அரசியல்வாதியைப் பொறுத்தவரை, பாதிக்கப்பட்டவர்களின் பரிதாபகரமான நிலையை விட தனது குடும்ப கௌரவம், நற்பெயர் மற்றும் புகழ் ஆகியவை முக்கியமானவை.  இவரது அவமானம் தான் இப்படி ஒரு மோசமான குற்றவாளியின் தாத்தா என்பதற்காக அல்ல, ஆனால் தனது பேர் புகழ் இப்படி ஆயிற்றே என்பதே இவரது கவலை.   மரியாதை மற்றும் அவமானம் கலாச்சாரத்தில், உண்மையும் இல்லை அல்லது நீதி நியாயமும் இல்லை.   இதுபோன்ற நபர்களுக்கு கெளரவத்தையும், புகழையும், செல்வத்தையும் தருவதெல்லாம் நல்லது, அது தீயதாக மற்றும் அநீதியான செயலாக இருந்தாலும் சரி.   பிறர் கண்ணில் படும் போது தான் அவமானம், அவரைப் பொறுத்தவரை அதை கவனமாக தவிர்த்து மறைத்திருக்க வேண்டும் என்பது மட்டுமே. உண்மையில், தாங்கள் செய்கிற தீயச்செயல்களுக்காக வெட்கப்பட வேண்டும். ஆனால், அவர்கள் கொஞ்சமும் வெட்கப்படுவதில்லை. தங்கள் பாவங்களுக்காக வெட்கப்படும் அளவிற்கு அவர்களுக்கு போதிய அறிவில்லை (எரேமியா 6:15).

பாவத்தின் விளைவுகள்: 
ஆதாமும் ஏவாளும் தேவனுக்கு கீழ்ப்படியாமல், தடைசெய்யப்பட்ட பழத்தைச் சாப்பிட்டதால், உடனடி விளைவுகள் ஏற்பட்டன (ஆதியாகமம் 3:6-7). முதலில் , அவர்கள் வெட்கப்பட்டு நிர்வாணமாக உணர்ந்தார்கள்.  அவர்கள் தேவ மகிமையை இழந்து, கண்ணியத்தை இழந்தனர். இரண்டாவது, அவர்கள் பயந்தார்கள்.   மாலை நேரத்தில் வழக்கம் போல் தேவனை சந்திக்க அவர்களுக்குத் துணிவில்லை.   மூன்றாவது , அவர்கள் குற்றவாளிகள் மற்றும் அவர்கள் தங்கள் செயலுக்கான தீர்ப்பை சந்திக்க நேரிடும் என்பதை அறிந்திருந்தனர்.  

மற்றவர் மீது குற்றம் சொல்லுதல் 
இந்த சம்பவத்தில், அரசியல்வாதிகள் தங்கள் பாவங்களை வெளிப்படுத்திய நபரை தான் தண்டிக்க விரும்பினர்.     குற்றம் சாட்டுவதில் மூன்று வகை உண்டு.   முதலில் , மற்றவர்களைக் குறை கூறுதல்.   ஆதாம், ஏவாளையும் ஏவாளைக் கொடுத்த தேவனையும் குற்றம் சாட்டினான்.  பிறகு ஏவாள் பாம்பைக் குற்றம் சாட்டினாள்.   இரண்டாவது , சூழல், சூழ்நிலை அல்லது சூழலை மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.   யோசேப்பு புத்திசாலித்தனமாக சூழ்நிலையிலிருந்து ஓடிவிட்டார்.   மூன்றாவது , பாதிக்கப்பட்டவரை குற்றம் சாட்டுதல்.  ஒருவேளை, தாவீது பத்சேபாளுக்கு எதிராக பல மாதங்கள் செய்த குற்றத்தை நியாயப்படுத்தியிருக்கலாம்.   மறைவின்றி திறந்தவெளியில் குளித்ததால் தான் இப்படி ஒரு தவறான செயல் நடந்ததாக தாவீது அவளைக் குற்றம் சாட்டியிருக்கலாம்.  

ஒப்புக் கொள்..வாழ்வு பெறு.. 
வேதாகமம் இப்படியாக கூறுகிறது; ஒருவன் தன் பாவங்களை மறைக்க முயன்றால் அவனால் வெற்றிபெற இயலாது. ஆனால் ஒருவன் தன் பாவங்களுக்கு வருந்தி, தன் பாவங்களை ஒப்புக்கொண்டு தவறு செய்வதை நிறுத்திவிட்டால், தேவனும், மற்ற எல்லா ஜனங்களும் அவனுக்கு இரக்கம் காண்பிப்பார்கள் (நீதிமொழிகள் 28:13).

நான் மனந்திரும்புகிறேனா, குற்றத்தை ஒப்புக்கொள்கிறேனா, மறுவாழ்வு பெறுகிறேனா?  

 Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download