வியத்தகு அற்புதங்களா? அல்லது அதிர்ச்சிகரமான அதிசயங்களா?

ஒரு விசுவாசியின் ஸ்மார்ட்போன் கீழே விழுந்ததில் அதன் தொடுதிரை கீறல் ஏற்பட்டு தெளிவற்றுக் காணப்பட்டது. மங்கலான திரையை மட்டுமே பார்க்க முடிந்தது, வருத்தமடைந்த அவர், தனது ஸ்மார்ட்போன் மிக அதிசயமாக அற்புதமாக சரிசெய்யப்பட வேண்டும் என ஆண்டவரிடம் ஜெபித்து விட்டு, சட்டைப் பையில் போனை வைத்துக் கொண்டு அதிசயத்திற்காக காத்திருந்தார், ஆனால் எதுவும் நடக்கவில்லை.

வியத்தகு அற்புதங்கள்:
உலகில் பலர் வியத்தகு அற்புதங்களை அனுபவித்திருக்கிறார்கள்.  ஒரு 17 வயது இளைஞன் மருத்துவ நிபுணர்களால் கைவிடப்பட்டான், ஆனால் கர்த்தராகிய இயேசுவைக் கண்டான், அவர் அவனிடம் பேசி அவனுக்கு உயிர் கொடுத்தார்.  இப்போது திருமணமாகி குழந்தைகளுடன் இருக்கிறான்.  அதுபோல ஒரு மாற்றுத்திறனாளி பெண், எப்போதும் மற்றவர்களைச் சார்ந்து இருக்க வேண்டிய சூழ்நிலை, ஒருநாள் தேவ தரிசனத்தைப் பெற்று, ஆரோக்கியமாக வாழ்கிறாள்.

அதிர்ச்சிகரமான அற்புதங்கள்:
யோசேப்பு போர்த்திபரின் வீட்டில் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை கிடைக்க வேண்டுமே என ஜெபித்திருக்கலாம், ஆனால் அதற்கு பதிலாக சிறையில் அடைக்கப்பட்டான்.  யோசேப்பிற்கு இது ஒரு தற்காலிக அதிர்ச்சி, ஆயினும்கூட, இது ஒரு பெரிய வியத்தகு அதிசயத்திற்கு வழிவகுத்தது. ஆம், எகிப்தில் பார்வோனுக்கு அடுத்து யோசேப்பு தான் எல்லாம் என்ற அந்தஸ்து கிடைத்தது. அதுபோல யோபு தன் மனைவியையும் ஜீவனையும் தவிர; தொடர்ச்சியாக சொத்துக்கள், குழந்தைகள், நண்பர்கள், வேலையாட்கள் என எல்லாம் இழந்தான். யோபுவிற்கு ஒரு அதிர்ச்சிகரமான அதிசயம் நடந்தது, இறுதியில், தேவன் அவனுக்கு இழந்த எல்லாவற்றிலும் இரட்டிப்பாக திரும்பக் கொடுத்தார்.  அவன் தனது முட்டாள்தனமான மற்றும் துயர்மிக்க நண்பர்களுக்காக ஜெபம் செய்வதின் மூலம் ஒரு உயர் ஆசாரிய பாத்திரத்தை வகித்தான்.  பவுல் தனது ‘மாம்சத்தில் உள்ள முள்ளிலிருந்து’ ஒரு வியத்தகு விடுதலையை விரும்பினான்.  ஆனால் ஒரு அதிர்ச்சிகரமான அதிசயம் அவனுக்கு வழங்கப்பட்டது.  ஆம், அந்த முள் என்னும் துன்பத்தை கடந்து செல்லும் படியான, சரீரம், உணர்வு, உளவியல் மற்றும் ஆவிக்குரிய வாழ்வு என தேவையான கிருபையை தேவன் அளித்தார்; ஆம், தேவ பணியைச் செய்ய அவருடைய கிருபை போதுமே (2 கொரிந்தியர் 12:8-9), பவுலும் அதை உணர்ந்து அனுபவித்தான். 

முரண்பாடு:
விசுவாச மக்களுக்கு இரண்டு வகை மகிமையான நுழைவாயில் உள்ளது. ஒரு தொகுதி மக்கள் வியத்தகு அற்புதங்களை அனுபவித்தனர், மற்றவர்கள் அதிர்ச்சிகரமான அற்புதங்களைச் சகித்தார்கள்.  சித்திரவதைக்கு உட்பட்டு, கேலி, கிண்டல் செய்யப்பட்டு, கசையடிகள், சங்கிலியால் பிணைக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு, கல்லெறியப்பட்டு, துண்டு துண்டாக வெட்டப்பட்டு, வாளால் குத்தப்பட்டு என உபத்திரவத்தையும் துன்பத்தையும் அனுபவித்தார்கள் (எபிரெயர் 11:35-38).

சிலுவை:
கர்த்தராகிய இயேசு தம் சீஷர்களுக்கு சிலுவையைக் கொடுத்துள்ளார்.  'வியத்தகு அற்புதங்களுக்காக' தேவனைப் பின்பற்றுவது என்பது சிலுவையை எடுக்க விருப்பமில்லாததைக் குறிக்கும்.  அதிர்ச்சிகரமான சம்பவங்களுக்கு மத்தியிலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுவது என்பது ஒரு உண்மையான சாகசமாகும்.  வலி, நோய், தோல்வி, இழப்பு, துன்பம், பசி, தாகம், கேலி, தொல்லை, துரோகம் மற்றும் துஷ்பிரயோகம் ஆகியவை அவருடைய நாமத்தினிமித்தம் தாங்க வேண்டிய சிலுவையாக அது இருக்கலாம்.

அதிர்ச்சிகரமான ஆச்சரியமான நேரங்களிலும் நான் தேவனை முழு மனதாய் நம்புகிறேனா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download