பிரச்சனைகளுக்கு பயப்படாதே

வாழ்வில் பிரச்சனை இல்லாத மனிதர்கள் யார் விரல்விட்டு சொல்லமுடியுமா?
     பணம் இருப்பவர்களுக்கும் பிரச்சனை தான், பணம் இல்லாதவர்களுக்கும் பிரச்சனைதான், மாணவர்களுக்கு படிப்பு பிரச்சனை, வாலிபர்களுக்கு வாழ்க்கை பிரச்சனை, திருமணமானவர்களுக்கு பொருளாதார பிரச்சினை, வயோதிகர்களுக்கு நோய் பிரச்சனை
     இப்படி ஆயிரக்கணக்கான பிரச்சினைகள் மனிதர்கள் வாழ்வில் கூடவே வலம் வந்து கொண்டிருக்கிறது 
     இந்தப் பிரச்சினைகளை சிகரமாய் எண்ணினால் வாழ்வில் சரிந்து போய் பாதாளத்தில் விழுந்து விடுவோம்
     முதலாவது பிரச்சினைகள் எனக்கு மட்டும் அல்ல உலகத்தில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் இவ்வாறான பிரச்சினைகள் இருக்கிறது என பொதுவான கருத்தை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் நம்ப வேண்டும் ஒத்துக்கொள்ள வேண்டும் 
     எல்லோரும் கடந்துசென்ற பிரச்சினைகளின் மேல் தான் நம்முடைய காலடி பாதங்களும் படுகிறது எப்படி 
அப்பிரச்சனைகளை மேற்கொள்ளப் போகிறோம் என்பதுதான் ஒவ்வொருவருக்கும் வித்தியாசப்படுகிறது
     ஒவ்வொருவரும்  பிரச்சனைகளை எப்படி அணுகுகிறார்கள் என்பதுதான் வேறுபடுத்தி காட்டுகிறது
    ஒவ்வொருவருடைய வாழ்விலும் அவரவர்களின் துறை சார்ந்த, குடும்பம் சார்ந்த, வேலை சார்ந்த பிரச்சனைகள் உலகில் இருக்கத்தான் செய்கிறது
    அப்படியென்றால் இப்பிரச்சினைகளுக்கு மத்தியில் எப்படி வாழ்வது, முன்னேற்றம் அடைவது என்பதுதான் நமக்கு தலையாய கேள்வியாக இருக்கிறது 
    பிரச்சினைகள் வருவதற்கு சில நேரம் நாமே காரணமாகி விடுகிறோம், பல நேரங்களில் பலர் காரணமாகி விடுகிறார்கள், சிலநேரம் சூழல்கள் காரணமாகிவிடுகிறது, முன்கூட்டி திட்டமிடாமை கூட  பிரச்சனைக்கு காரணமாகிவிடுகிறது
     நம் வாழ்வில் பிரச்சனை அலைகள் வரும் பொழுது எப்படி சமாளிக்க வேண்டும் எனும் முறைமைகளை நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும் 
   பிரச்சனைகள்தான் வாழ்க்கையில் பயத்தையும், நடுக்கத்தையும்  ஏற்படுத்துகிறது வாழ்வின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்துகிறது மனநோயை உண்டாக்குகிறது
  சரி  நம் வாழ்வில் பிரச்சனைகள் வரும் போது  எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து பார்ப்போம்
1.எதிர்மறையான அனுபவங்களுக்கு செவிசாய்க்க கூடாது 
2.எதிர்மறையான செயல்பாடுகளை அங்கீகரிக்க கூடாது 
3.எதிர்மறையான மனிதர்களுடைய புத்தகங்களை வாசிக்க கூடாது 4.எதிர்மறையான காரியங்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடாது
5.எதிர்மறையாக சிந்திக்கக் கூடாது 
6.உணர்ச்சி வசப்படக் கூடாது அமைதியாக இருக்க வேண்டும்
7.கடவுளிடம் பாரத்தை இறக்கி வைக்க வேண்டும் பிரார்த்தனையில் மனம் லயித்திருக்க வேண்டும்
8.நேர்மறையான சிந்தையை சரிய விடக்கூடாது
9.மீண்டும் தோல்வி ஏற்படும் எனும் மனப்பான்மைக்குள் இருக்கக்கூடாது 
10.எதிர்மறையாய் "அப்பவே சொன்னேன் இல்ல" "என் பேச்சை கேட்கல" "உன்னால முடியாது" என பேசுபவர்களை கண்டால் நூறடி விலகிப் போங்கள்
11.என்னால் முடியும், என்னுடன் இறைவன் இருக்கிறார், மீண்டும் செய்து முடிக்க எனக்குரிய ஆற்றல், ஞானம், புத்தியை இறைவன் தருவார் எனும் நம்பிக்கை மேலோங்க வேண்டும்
12.மனதைத்  ஆற்றும்,தேற்றும்,  நம்பிக்கையூட்டும் தெய்வீக பாடல்கள் கேட்க வேண்டும்
13.நம் லட்சியத்திற்கு நேராக நடத்தும் நம்பிக்கையூட்டும் புத்தகங்களை வாசிக்கலாம் வெற்றியாளர்களின் வாழ்க்கை சரித்திரங்களை வாசிக்கலாம் 
14.ஆக்கப்பூர்வமாக ஊக்கமூட்டும் நண்பர்களை சந்திக்கலாம்
15.மீண்டும் திட்டங்களை சரிசெய்யலாம்
16.நம்மை அப்டேட் பண்ணிக் கொள்ளலாம்
17.நம்மைக் குறித்து சுயபச்சாதாப உணர்வுக்கு இடம் கொடுக்கக்கூடாது 
18.மனதுக்குள் என்னென்ன பிரச்சினைகள் இருக்கிறது ஒவ்வொரு பிரச்சினையும் தனித்தனி சீட்டாக எழுதி அப்பிரச்சினைகள் நீங்குவதற்கு என்ன செய்ய வேண்டும் என சிந்திக்க வேண்டும் அவைகளையும் எழுதிக்கொள்ள வேண்டும் 
    எல்லா பிரச்சினைகளையும் ஒரே நேரத்தில் சரி செய்துவிட முடியாது எந்த பிரச்சினை தலையாய பிரச்சனையோ அந்தப் பிரச்சினைக்கு முதலாவது   முக்கியத்துவம் கொடுத்து  அந்த பிரச்சினையை நீக்க தீர்வு காண வேண்டும்
பிறகு மற்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்    
        பிரச்சினைகளின் கொம்புகள் நம்மை முட்டும் பொழுது எதிர்மறையான எண்ணங்கள் நிறைய வரும் அவற்றுக்கு இடம் கொடுக்க கூடாது
         அச்சூழலில் நேர்மறை எண்ணம் உடையவர்களாக இருங்கள் அப்போதுதான் நீங்கள் எனர்ஜி குறையாமல் சாதிக்கும் நோக்கில் லட்சியத்தை அடைய வாழ்வில் தொடர்ந்து  பயணிக்க முடியும் 
   எப்பொழுதும் பிரச்சினைகளின்போது நம் மனம் நேர்மறை சிந்தனை உடையதாய் காணப்படவேண்டும் அப்படி இருக்கும் பொழுது பிரச்சனை என்பது ஒரு பிரச்சனையாகவே தெரியாது 
   "ஒவ்வொரு சிக்கலுக்குள்ளும் அதன் தீர்வுக்கான விதையும் ஒளிந்து இருக்கிறது"
-ஸ்டான்லி அர்னால்ட் -
   ஆகவே பிரச்சினைகளை கண்டு நாம் பயப்படத் தேவையில்லை அதனால் வரும் பயங்களை அகற்றுவதற்கு பிரச்சினைகளுக்கு உள்ளே இருக்கும் தீர்வெனும் விதைகளை நாம் கண்டுபிடிக்க வேண்டும்
    பயத்தை களைவதற்கு  தேவன் கொடுக்கின்ற ஆரோக்கியமான சத்து  மாத்திரைகள்
  "தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்" (2 தீமோத்தேயு1:7)
  "அந்தப்படி திரும்பவும் பயப்படுகிதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப் பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்" (ரோமர் 8:15)
  "நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன்னைப்  பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்" (ஏசாயா 41:10)
  "கர்த்தர் என் பெலனும் என் கீதமுமானவர்"(யாத்15:2) 
  இன்னும் தனிப்பட்ட முறையில் தனித்தனியாய் நபர்களோடும் அவர் பேசியிருக்கிறார் 
  "ஆபிரகாமே நீ பயப்படாதே"(ஆதி15:1) 
  "யாக்கோபே நீ  பயப்படாதே" (எரேமி 30:10)
  "பவுலே பயப்படாதே" (அப் 27:24) 
  "சீயோன் குமாரத்தியே பயப்படாதே" (யோவா12:14)
   "நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன் தேவரீர் என்னோடே கூட இருக்கிறீர்" (சங்கீதம் 23:4) 
   யாக்கோபு, ஆபிரகாம், பவுன் எனும் பெயர் வரும் இடங்களில் உங்களின் பெயரை போட்டு வாய் விட்டு ஒரு பத்து முறை சொல்லிப் பாருங்கள்
    தேவன் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் அவரிடத்தில் பட்சபாதம் இல்லை
ஆபிரகாமின் தேவன் இன்று உங்களின் தேவனாய் இருந்து பயத்தை நீக்கி தொடர்ந்து வாழ்வில் கரங்கோர்த்து வழிநடத்த இடம் கொடுங்கள் 

கவிமுகில் சுரேஷ் 
தர்மபுரி



Topics: Daily Devotions

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download