1. பேதுருவின் பெயரும், பொருளும்
புனித பேதுரு அல்லது புனித ராயப்பர் (நஹண்ய்ற் டங்ற்ங்ழ்) என்பவர் இயேசு கிறிஸ்து ஏற்படுத்திய பன்னிரு சீடர்களுள் (அப்போஸ்தலர்) தலைமை யானவர். இவரது இயற்பெயர் சீமோன் (நண்ம்ர்ய்) ஆகும். இவரைத் தம் சீடராக அழைத்த இயேசு பேதுரு என்னும் சிறப்புப் பெயரை அவருக்கு அளித்தார். இப்பெயரின் தமிழ் வடிவம் இராயப்பர் என்பதாகும். ராய் என்னும் தெலுங்குச் சொல்லுக்குப் பாறை (கல்) என்று பொருள்.
அரமேயில்- கேபா; கிரேக்கத்தில்- பெட்ரோஸ்; இலத்தீனில்- பெட்ரஸ்; ஆங்கிலத்தில்- பீட்டர் (டங்ற்ங்ழ்); இந்தியில்- பத்ரஸ் என்றும் பொருளுண்டு
2. பேதுருவின் பிறப்பும், இறப்பும்
இவருடைய பிறப்பு தெரியவில்லை; இறப்பின் காலம் கி:பி. 64 ரோம்
இவர் கப்பர்நகூமில் வாழ்ந்து வந்தார்;
மாற்கு 1:29-31 இவருடைய மாமி ஜøரமாய் இருக்கும் இயேசு அருகில் சென்று கையைப் பிடித்து தூக்கினார்; காய்ச்சல் அவளைவிட்டு நீங்கிற்று.
இவரை திறவுகோல்கள்; தலைகீழாக சிலுவையில் அறையப்பட்ட மனிதர்; திருச்சபையின் முதல் திருத்தந்தை என்றும் அழைப்பர்
3. பேதுருவின் அழைப்பும், உழைப்பும்
மத்தேயு 4:18-19 இயேசு முதன்முதலாக சீடராக அழைத்தது பேதுருவையே
மத்தேயு 18:21; மாற்கு 8:9; லூக்கா 12:41; யோவான் 6:67-69 இயேசு கேள்வி கேட்டபொழுதெல்லாம் சீடர்களுக்கு பதிலாக பதில் கூறுபவர் பேதுருவே
மத்தேயு 10:2; மாற்கு 3:16-19; லூக்கா 6:12-16 சீடர்களின் பெயர் பட்டியலில் முதல் பெயர் பேதுருவே
யோவான் 18:10 இயேசுவைப் பிடிக்க வரும்போது பட்டயத்தினால் பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனின் காதற வெட்டினவன் பேதுருவே
4. பேதுருவின் மறுப்பும், பொறுப்பும்
யோவான் 18:15-27பேதுரு இயேசுவை மறுத்தல்
யோவான் 13:33-38 பேதுரு மறுப்பதை இயேசு முன்னமே கூறுதல்
யோவான் 21:1-19பேதுருவுக்கு பொறுப்பு அளிக்கும் இயேசு
(என் ஆடுகளை, ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக)
அப்போஸ்தலர் 1:15; 2:14,37-38; 3:1-12; 4:8,13,19; 5:1-29; 8:14,20; 9:32-40; 10:1-47; 11:1-13; 12:1-18; 1பேதுரு, 2 பேதுரு பேதுருவின் பொறுப்புகள்
Author: Rev. M. Arul Doss