13 வயது சிறுவன் தனது மொபைல் போனில் ஆபாச படங்களைப் பார்த்துவிட்டு தூங்கிக் கொண்டிருந்த தனது ஒன்பது வயது சகோதரியை பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் அவளைக் கொலையும் செய்து விட்டான். அவனது தாயார் மற்றும் இரண்டு மூத்த சகோதரிகள் (17 மற்றும் 18 வயது) மறைக்க உதவினர் பின்னர் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர் (NDTV ஜூலை 28, 2024). சோதோம் மற்றும் கொமோரா மீதான தீர்ப்பிலிருந்து தப்பிய பிறகு, லோத்தின் மகள்கள் சோவாருக்கு அருகிலுள்ள ஒரு குகையில் வசித்து வந்தனர். இந்த பெண்கள் தன் தகப்பனை குடிக்க வைத்து, பின்னர் ஒழுக்கக்கேடான உறவின் மூலம் மகன்களைப் பெற்றெடுத்தனர். அந்த மகன்கள் தான் மோவாப் மற்றும் பென்னம்மி, அவர்களின் சந்ததியினர் மோவாபியர்கள் மற்றும் அம்மோனியர்கள் (ஆதியாகமம் 19:30-38). சோதோமும் கொமோராவும் பாலியல், பொறாமை, பேராசை, அடக்குமுறை மற்றும் ஒழுக்கக்கேடான பாவங்களால் நிறைந்த நகரங்கள். லோத்து நீதிமானாகக் கருதப்பட்டாலும், அவர் மகள்கள் மீது கலாச்சார செல்வாக்கு இருந்தது தெளிவாகத் தெரிகிறது (2 பேதுரு 2:7). நோவா மற்றும் லோத்தின் நாட்களில் இருந்ததைப் போல சீர்கெட்ட கலாச்சாரம் உலகை மூழ்கடிக்கும் (லூக்கா 17:26-30).
ஸ்மார்ட் போன்:
ஒரு நபரை புத்திசாலியாகவோ அல்லது பரிசுத்தவானாகவோ அல்லது பாவியாகவோ மாற்றக்கூடிய ஒரு கருவி மக்கள் கைகளில் காணப்படுகிறது. முட்டாள் பெற்றோர்கள் 13 வயது சிறுவனை ஸ்மார்ட்போன் பயன்படுத்தவும், ஆபாசத்தைப் பார்க்கவும் அனுமதித்தனர்.
ஆபாசம்:
ஊடகங்கள், சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர்கள் மற்றும் ஆலோசகர்கள் கூட உடல் உறவை சாதாரண, விளையாட்டுத்தனமான, மகிழ்ச்சியான மற்றும் யாருடன் வேண்டுமானாலும் சித்தரிக்கிறார்கள். கணவன்-மனைவி உறவில் பாலுறவு புனிதமானது, வெளித் தொடர்புகள் பாவம் என்ற வேதாகமக் கண்ணோட்டம் ஒரு பழங்கால யோசனையாகக் கருதப்படுகிறது. மோசமான விளைவு என்னவென்றால், ஆபாசமானது குழந்தைகளுக்கு கூட இயல்பாகி விட்டது.
கற்பழிப்பு:
“மூத்த பெண்களைத் தாயாகக் கருது. வயது குறைந்த பெண்களை சகோதரிகளாக நினை. அவர்களை எப்பொழுதும் நல்ல முறையில் நடத்து”
என்பதாக இளம் தீமோத்தேயுவுக்கு பவுல் எழுதினார் (1 தீமோத்தேயு 5:2). வருந்த வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த பதின்ம வயது சிறுவன் தன் சொந்த சகோதரி உட்பட எல்லாப் பெண்களையும் ஒரு விபச்சாரியாகப் பார்த்தான் என்பதும், ஒரு மிருகத்தைப் போல, அவன் அவளை கற்பழிக்க முடிகிறதே மற்றும் உடன்பிறந்த உறவுகளின் புனிதம் மீறப்பட்டது.
கொலை:
தன் தாய்க்கு முன்னால், தான் கற்பழித்த தன் சகோதரியைக் கொன்றான். தன் மகனே தனக்கு முக்கியம் என்றும், ஒரு மகன் என்ன செய்தாலும் அது ஏற்றுக் கொள்ள கூடியது என்றும் நினைத்த அந்த பொல்லாத தாய், தன் சொந்த மகளையே கொலை செய்ய அனுமதித்தாள்.
மறைத்தல்:
விசித்திரமாக, இரண்டு மூத்த சகோதரிகளும் இந்த கொடூரமான செயலை மறைக்க தாயுடன் சேர்ந்து கொண்டனர்.
கலாச்சாரத்தால் நான் விழுங்கப்பட்டேனா அல்லது வேதவாக்கியங்களைக் கொண்டு அவற்றையெல்லாம் மீட்டுக்கொள்வேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்