ஒரு ஆலமரம் வளர்கிறது, கிளைகள் வேரூன்றி பூமியை ஊடுருவிச் செல்கின்றன. மரம் தொடர்ந்து கிளைத்து, வேராக மாறி, பரவுகிறது. மாபெரும் கட்டளைக்கு கீழ்ப்படிகிற சபை, மிஷனரிகளை அனுப்புகிறது, அவர்கள் சபைகளை நிறுவுகிறார்கள், அந்த சபைகளும் அருட்பணிக்கு அனுப்புகின்றன, கர்த்தர் வரும் வரை இப்படியாக அருட்பணி தொடர்கிறது (மத்தேயு 28:18-20).
1. ஜான் எலியட் (1604-1690) அமெரிக்காவை தாயகமாக கொண்டவர்களுக்கு சுவிசேஷம் செய்தார். அவர் பூர்வீக அமெரிக்கர்கள் தாய்மொழியில் வேதாகமத்தை மொழிபெயர்த்தார்.
2.டேவிட் பிரைனெர்ட் (1718–1747) ஜான் எலியட்டால் ஈர்க்கப்பட்டு அமெரிக்காவை தாயகமாக கொண்டவர்கள் மத்தியில் ஊழியத்தைத் தொடர்ந்தார், ஆனால் அவர் 29 வயதில் இறந்தார்.
3. ஜொனாதன் எட்வர்ட்ஸ் (1703–1758) டேவிட் பிரைனெர்டின் நாட்குறிப்பு மற்றும் நாட்குறிப்பேடு திருத்தம் செய்யும் பணி செய்தார் மற்றும் அமெரிக்காவை தாயகமாக கொண்டவர்கள் மத்தியில் பணியாற்றினார்.
4.வில்லியம் கேரி (1761–1834) ஜொனாதன் எட்வர்ட்ஸ் எழுதிய மறைந்த மறைதிரு டேவிட் பிரைனெர்டின் வாழ்க்கையின் ஒரு நகலைப் படித்து, 1793 இல் இந்தியாவை அடைந்தார், பின்பதாக புது மாற்றங்களுடன் மற்றும் புது திட்டங்களுடன் அருட்பணிகள் பிறந்தன.
5.சார்லஸ் சிமியோன் (1759-1836) 1802 இல் வில்லியம் கேரியின் சாதனை பற்றி பேசினார், இது ஹென்றி மார்ட்டினை அருட்பணிக்கு தூண்டியது.
6. ஹென்றி மார்ட்டின் (1781-1812) புதிய ஏற்பாட்டை உருது மற்றும் பாரசீக மொழிகளில் மொழிபெயர்த்தார்.
7.அந்தோனி நோரிஸ் க்ரோவ்ஸ் (1795–1853) இந்தியா மற்றும் ஈராக்கில் பணியாற்றிய ஹென்றி மார்ட்டின் வாழ்க்கை வரலாற்றால் ஈர்க்கப்பட்டார்; விசுவாச அருட்பணியின் தந்தையாகக் கருதப்படுகிறார்.
8.ஜார்ஜ் முல்லர் (1805–1898)
1825 இல் நோரிஸ் க்ரோவ்ஸ் கிறிஸ்தவ பயபக்தி என்ற புத்தகத்தை வெளியிட்டார். அந்த புத்தகம் ஜார்ஜ் முல்லரை ஊக்கப்படுத்தியது.
9.ஜேம்ஸ் ஹட்சன் டெய்லர் (1832–1905)
க்ரோவ்ஸின் புத்தகம் ஹட்சனை சீனா உள்நாட்டு அருட்பணி தொடங்குவதற்கான சிந்தனையை வடிவமைத்தது.
10. சி.டி. ஸ்டட் (1860–1931) ஹட்சனின் பிரசங்கம் சி.டி. ஸ்டட் மற்றும் "தி கேம்பிரிட்ஜ் செவன்" என்று அழைக்கப்படும் மற்ற ஆறு மாணவர்கள் வெளிநாட்டு அருட்பணிகளில் பணியாற்ற உந்தியது.
11. டி.எல். மூடி (1837–1899) கேம்பிரிட்ஜ் செவன் வாழ்க்கையானது அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழக மாணவர்களை வெளிநாட்டுப் அருட்பணிகளுக்கான மாணவர் தன்னார்வ இயக்கத்திற்கு (1886 இல் தொடங்கப்பட்டது) வித்திட்டது.
12. ஆர்தர் டி. பியர்சன் (1837–1911) ஜார்ஜ் முல்லரின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார் மற்றும் வெளிநாட்டு மிஷனரிகளுக்கான மாணவர் தன்னார்வ இயக்கத்தில் (SVM - Student Volunteer Movement for Foreign Missions) ஈடுபட்டார்.
13. ஏமி கார்மைக்கேல் (1867-1951), எரிக் லிடெல் (1902-1945), மற்றும் ஜிம் எலியட் (1927-1956): ஹட்சன் டெய்லரின் வாழ்க்கை வரலாறு பிற்காலத்தில் உருவாகிய மிஷனரிகளையும் பாதித்தது, ஈர்த்தது எனலாம்.
எனது பங்கையும் அழைப்பையும் நான் கண்டு கொண்டேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்