மத்தேயு 11:28 வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.
சங்கீதம் 55:22 கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு. அவர் உன்னை ஆதரிப்பார். நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்.
1. மிஞ்சின பாரமா?
எண்ணாகமம் 11:14 (1-23) இந்த ஜனங்களெல்லாரையும் நான் ஒருவனாய்த் தாங்கக்கூடாது; எனக்கு இது மிஞ்சின பாரமாயிருக்கிறது.
(சாப்பிடுவதற்கு இறைச்சி கேட்டனர்)
2கொரிந்தியர் 1:8 பிழைப்போம் என்கிற நம்பிக்கை அற்றுபோகத் தக்கதாக, எங்கள் பலத்திற்கு மிஞ்சின அதிக பாரமான வருத்தம்
2கொரிந்தியர் 11:9 எவ்விதத்திலேயும் பாரமாயிராதபடிக்கு ஜாக்கிரதையா யிருந்தேன், இனிமேலும் ஜாக்கிரதையாயிருப்பேன்.
1தெசலோனிக்கேயர் 2:9; ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு, இரவும் பகலும் நாங்கள் வேலைசெய்து...
2தெசலோனிக்கேயர் 3:8 ஒருவனிடத்திலும் இலவசமாய்ச் சாப்பிடா மலும், உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கும்...
2. மிகுதியான பாரமா?
யோபு 6:3 (1-3) அப்பொழுது அது கடற்கரை மணலைப்பார்க்கிலும் பாரமாயிருக்கும்; ஆகையால் என் துக்கம் சொல்லி முடியாது
புலம்பல் 5:5 (1-22) பாரஞ்சுமந்து எங்கள் கழுத்து நோகிறது; நாங்கள் உழைக்கிறோம், எங்களுக்கு இளைப்பாறுதல் இல்லை
3. தாங்கக்கூடாத பாரமா?
சங்கீதம் 38:4 (1-22) என் அக்கிரமங்கள் என் தலைக்கு மேலாகப் பெருகிற்று, அவைகள் பாரச்சுமையைப்போல என்னால் தாங்கக்கூடாத பாரமாயிற்று.
உபாகமம் 1:9,12 (9-15) நான் ஒருவனாக உங்கள் பாரத்தைத் தாங்கக் கூடாது. உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைப் பெருகப்பண்ணினார். உங்கள் வருத்தத்தையும் பிரயாசத்தையும் வழக்குகளையும் நான் ஒருவனாய் தாங்குவது எப்படி?
Author: Rev. M. Arul Doss