வஸ்திரங்கள்

ஆள்பாதி ஆடைபாதி' என ஒரு தமிழ் பழமொழி உண்டு. உடலுக்கான மற்றும் ஆவிக்குரிய வஸ்திரத்தைப் பற்றி வேதாகமம் கற்பிக்கிறது.

1) மகிமையின் வஸ்திரம்:
தேவன் ஆதாமையும் ஏவாளையும் தம் சாயலில் படைத்தார். அவர்கள் மகிமை அல்லது ஔியை அணிந்திருந்தார்கள் (சங்கீதம் 104:2; மத்தேயு 17:2).

2) நிர்வாணம்:
அவர்கள் பாவம் செய்தபோது தங்கள் மகிமையை இழந்தார்கள் (ரோமர் 3:23). 

3) அத்தி இலைகள்:
ஆதாமும் ஏவாளும் தங்கள் ஆவிக்குரிய மற்றும் உடல் ரீதியான நிர்வாணத்தை மறைக்க முயல்கின்றனர். இலைகளைத் தைத்து ஆடைகளாகப் போடும் அளவுக்கு அவர்கள் புத்திசாலிகளாக இருந்தாலும், அரிப்புகளை உண்டாக்கும் என்பதால், இது ஒரு மோசமான தேர்வாக இருந்தது.

4) தோல் வஸ்திரம்:
தேவன் பாவநிவிர்த்திக்காக ஒரு மிருகத்தைப் பலியிட்டு, அந்த மிருகத்தின் தோலை அவர்களுக்கு ஆடையாகக் கொடுத்தார். "நியாயப்பிரமாணத்தின்படி கொஞ்சங்குறைய எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும்; இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது" (எபிரெயர் 9:22). 

5) அழுக்கான கந்தை:
ஆதாமும் ஏவாளும் அத்திப்பழத்தின் இலைகளை உடுத்த முயற்சித்ததுபோல, ​​மக்கள் தாங்கள் நினைப்பதை நீதியான செயல்களாக எண்ணி தொடர்ந்து செய்து வந்தனர்.  இத்தகைய செயல்கள் அழுக்கான கந்தையாகும் (ஏசாயா 64:6). 

6) கல்லறையின் வஸ்திரம்:
லாசரு இறந்து அடக்கம் செய்யப்பட்டான், ஆனால் கர்த்தராகிய இயேசு அவனை அழைத்தபோது, ​​அவன் மரித்தோரிலிருந்து எழுந்தான்.  இருப்பினும், அவன் அடக்கம் செய்யப்பட்ட வஸ்திரங்களால் கட்டப்பட்டிருந்தான். அது போலவே, சில விசுவாசிகளின் வாழ்க்கையும் மரபுகள், கலாச்சாரம் மற்றும் சடங்குகளால் கட்டப்பட்டுள்ளது (யோவான் 11).

7) திருமண வஸ்திரம்:
கலியாண உவமையில், மூன்று விதமான அழைப்புகள் நடந்தன. முதல் இரண்டு பேர் 
விசேஷமாக அழைக்கப்பட்டிருந்தனர்; ஆனால் அவர்கள் மறுத்துவிட்டார்கள், எனவே எஜமானர் அதிக அளவில் ஆட்களை அனுப்பி ஆட்களை வரவழைத்தார்.  அவர்கள் உள்ளே நுழைவதற்குத் தகுதியான ஆடைகளை அவர்களுக்கு வழங்க வேண்டியிருந்தது.  இருப்பினும், ஒருவர் கலியாண வஸ்திரமின்றி காணப்பட்டார், அவர் தூக்கி எறியப்பட்டார் (மத்தேயு 22:1-14). 

8) இரட்சிப்பின் வஸ்திரம்:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் மனந்திரும்புதலுடனும் விசுவாசத்துடனும் வருபவர்கள் இரட்சிப்பின் வஸ்திரத்தை அணிவார்கள் (ஏசாயா 61:10). 

9) நீதியின் சால்வை:
மீட்கப்பட்ட ஜனங்களுக்கு தேவன் நீதியின் சால்வையை அருளுகிறார்.  அதனால் அவர்கள் நற்செயல்களைச் செய்கிறார்கள் (வெளிப்படுத்துதல் 19:8). 

10) துதியின் ஆடை:
இரட்டு உடுத்தி சாம்பலில் அமர்வது என்பது துக்கம், துயரம், அவமானம், மனந்திரும்புதல் மற்றும் உபவாசம் என்பதற்கான அடையாளமாக இருந்தது (யோனா 3:6; எஸ்தர் 4:1). துதியின் ஆடை அதற்கு நேர்மாறானது; மகிழ்ச்சியும், சமாதானமும் ஆகும். தேவ  ஜனங்கள் நன்றியுணர்வு அல்லது துதியின் ஆடைகளால் நிறைந்து காணப்பட வேண்டும் (ஏசாயா 61:3). 

நான் எப்போதும் இரட்சிப்பு, நீதி மற்றும் துதியின் வஸ்திரங்களை அணிகிறேனா?

Author: Rev. Dr. J. N. Manokaran



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download