நற்செய்தியின் மாற்றமும் தாராளகுணமும்

"சீஷர்கள் இயேசுவை நோக்கி: ரபீ, இவன் குருடனாய்ப் பிறந்தது யார் செய்த பாவம், இவன்செய்த பாவமோ, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ என்று கேட்டார்கள். இயேசு பிரதியுத்தரமாக: அது இவன் செய்த பாவமுமல்ல, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமுமல்ல, தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும் பொருட்டு இப்படிப் பிறந்தான்" (யோவான் 9:1-3). சபை வரலாறு என்றாலே துன்பத்திலும் துயரத்திலும் அல்லது மனக்கலக்கத்திலும் உள்ள ஜனங்களை ஆற்றித் தேற்றி அரவணைத்து தேவ நாம மகிமைக்காக எப்படி தொண்டாற்றினார்கள் என்பதற்கான மாதிரிகளும் எடுத்துக்காட்டுகளும் நிறைந்தவை அல்லவா.  தொழுநோயாளிகள், பார்வையற்றவர்கள், மனவளர்ச்சி குன்றியவர்கள் என நலிந்தோருக்கு அடைக்கலம் கொடுத்து மிஷனரிகள் பற்பல உதவிகள் செய்தனர்.

டாக்டர் பால் வில்சன் பிராண்ட் (1914-2003) சிறந்த மிஷனரி மருத்துவர்களில் ஒருவர் ஆவார். தொழுநோயாளிகளுக்கு வலி பற்றிய சொரணை இல்லாததால் தங்களை அறியாமலே காயங்களை ஏற்படுத்தி விடுவார்கள், வலியின் உணர்வற்ற தன்மைக்கு சிகிச்சையளிப்பதில் அவர் முன்னோடியாக இருந்தார். அவரது பங்களிப்பு உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டது மற்றும் நிலையான சிகிச்சையாகவும் மாறியது. வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் பணியாற்றி வந்தார். பால் பிராண்ட், பிலிப் யான்சியுடன் இணைந்து வலி: யாரும் விரும்பாத பரிசு (Pain: The Gift Nobody wants) என்ற புத்தகத்தை எழுதினார். அவரது வாழ்க்கை வரலாறு தேவனுக்கு பத்து விரல்கள் (Ten Fingers for God) என டோரதி கிளார்க் வில்சன் என்பவரால் எழுதப்பட்டது.

மற்றொரு மிஷனரி கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் (1941-1999). அவர் மயூர்பஞ்ச் தொழுநோய் இல்லத்தில் பணியாற்றினார். ஜனவரி 22, 1999 அன்று, கிரஹாம் மற்றும் அவரது இரண்டு மகன்கள் பிலிப் மற்றும் தீமோத்தி ஆகியோர் உயிருடன் எரிக்கப்பட்டனர். தி லீஸ்ட் ஆஃப் திஸ்(The Least of These) என்பது கிரஹாம் ஸ்டெய்ன்ஸ், கிளாடிஸ் மற்றும் மூன்று குழந்தைகளின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிப்பதற்காக எடுக்கப்பட்ட திரைப்படம். இந்த மாதிரியான நபர்களைப் மாதிரிகளாகப் பின்பற்றி, இந்தியாவைச் சேர்ந்த அநேக கிறிஸ்தவ மருத்துவர்களும் தேவ நாம மகிமைக்காக சேவைகள் செய்கின்றனர்.

ஹைதராபாத் நகரின் புறநகரில் ஒரு சபை உள்ளது. இந்த மோசமான நோயிலிருந்து புனர்வாழ்வளிக்கப்பட்ட மக்களின் சபையாக அது காணப்படுகிறது. தங்களின் சொந்த முனைப்பில் பணம் செலவழித்து ஒரு இடம் வாங்கி அழகான சபையைக் கட்டியுள்ளனர். வழிபாடு தெலுங்கில் நடக்கிறது, இருப்பினும், அங்கு பல இளைஞர்கள் ஆங்கில வேதாகமத்தைப் பின்பற்றுகின்றனர் (ஜூன் 11, 2017 அன்று அச்சபையில் செய்தி அளித்துள்ளேன்)

கொடியவாதம் தொழுநோயாளிகளை பிச்சைக்காரர்களாக ஆக்கியது, சுவிசேஷம் அவர்களை சீஷர்களாக மாற்றியது. இந்த சீஷர்கள் தங்கள் சொந்த பணத்தில் சபையைக் கட்டியெழுப்ப பங்களிக்க தாராள மனப்பான்மையைக் கொண்டிருந்தனர். உண்மையில், அவர்கள் தேவனின் மிஷனரி பணி, தேவ வார்த்தை மற்றும் மாற்றத்தைத் தரும் பரிசுத்த ஆவியின் வல்லமை ஆகியவற்றின் வரங்களைப் பெற்றனர். அவர்களிடத்தில் விசாரிப்பவர்களுக்கு விசுவாசத்துடன் பதிலளித்தனர், ஆவிக்குரிய பக்குவத்திலும், கொடுப்பதிலும் மற்றும் அருட்பணிகளிலும் வளர்ந்தனர். பெறுவதை விட கொடுப்பதே மேலானது என்பதையும் அறிந்து கொண்டார்கள் (அப்போஸ்தலர் 20:35). 

சுவிசேஷம் என் வாழ்க்கையை எப்படி மாற்றியுள்ளது?

Author : Rev. Dr. J. N. Manokaran



Topics: Daily Devotions Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download