புத்தகத்தில்:
ஆண்டவராகிய இயேசு ஒரு தச்சராக நல்ல கொள்கைகளைக் கொண்டு தனது அருட்பணியில் அதை எவ்வாறு அப்பியாசப்படுத்தினார் என்பதைப் பற்றிய நுண்ணறிவை ஆசிரியர்களும் தருகிறார்கள்:
1) தரிசனம்:
நல்ல தச்சர்கள், இல்லாத ஒன்றை முன்கூட்டியே கற்பனைக்குள் கொண்டு வருகிறார்கள். அதுபோல தலைவர்களும் இப்போது இல்லாததை ஆனால் எதிர்காலத்தில் உருவாக்க கூடியதை தங்கள் கற்பனையில் கொண்டு வர முடியும். தேவ இராஜ்ஜியத்தை, அவருடைய சீஷர்களால் நிறைவேற்றப்படும் மாபெரும் ஆணையை கர்த்தரால் முன்கூட்டியே பார்க்க முடிந்ததே.
2) மூலப்பொருட்களைப் பற்றிய அறிவு:
மக்களின் அழைப்பை பற்றிய பகுத்தறிவு, திறன், வரம் மற்றும் தாலந்துகள் முக்கியம். நல்ல தலைவர்கள் தங்கள் அணிக்கான பணியாளர்களை சரியான தேர்வு செய்கிறார்கள். பேதுரு ஒரு பாறையைப் போல ஆவான் என்பதைக் கர்த்தராகிய இயேசு கண்டுணர்ந்து, அவனுக்கு கேபா என்று பெயரிட்டார் (யோவான் 1:42).
3) வரவு செலவு:
தச்சர்கள் ஒரு வேலையைத் தொடங்கும் முன்னரே தேவையான மூலப்பொருட்களின் அளவையும், தேவைப்படும் நேரத்தையும் கணக்கிடுகின்றனர். மதிப்பீடு மற்றும் வரவு செலவு திட்டம் ஒரு தலைவரின் இன்றியமையாத பணிகளாகும் (லூக்கா 14:28-30).
4) சரியான திட்டம்:
தச்சர்கள் குறிப்பிட்ட முடிவுகளைத் தயாரிப்பதற்கான திட்டங்களை கவனமாக வரையறுக்கின்றனர். பெரிய திட்டத்தில் சரிசெய்ய, பல சிறிய துண்டுகள் வடிவமைக்கப்பட வேண்டும். உலகையே தலைகீழாக மாற்றிய பன்னிரண்டு பேரின் பயிற்சியில் தேவன் கவனம் செலுத்தினார்.
5) தரநிலைகள்:
தச்சர்கள் தங்கள் பணிகளுக்கு துல்லியமான அளவீட்டு தரங்களைப் பயன்படுத்துகின்றனர். வேதாகமத்தில் வெளிப்படுத்தப்பட்ட சத்தியம் நித்தியமானது மற்றும் கற்பிக்கப்பட வேண்டும், நடைமுறைப்படுத்தப்பட வேண்டும், பிரசங்கிக்கப்பட வேண்டும்.
6) திறன்களை மேம்படுத்துதல்:
ஒரு தச்சன் பலவிதமான கருவிகளைப் பயன்படுத்துவதைக் கற்றுக்கொள்வதற்கும் தேர்ச்சி பெறுவதற்கும் திறமையானவராக இருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக சாமான் பெட்டியில் பல கருவிகள் இருக்க வேண்டும். எல்லா மக்களுக்கும் நற்செய்தியைத் தெரிவிக்க புதிய வழிகளையும் ஆக்கப்பூர்வமான வழிகளையும் சீஷர்கள் கண்டுபிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
7) வாழ்நாள் முழுவதும் கற்பவர்கள் மற்றும் வாழ்நாள் ஆசிரியர்கள்:
தச்சர்கள் வாழ்நாள் முழுவதும் கற்பவர்கள். சமுதாயத்தில் மாற்றங்கள் நிகழும்போது, மாதிரிகள் அல்லது வடிவங்கள் அல்லது புதிய தளபாடங்கள் ஆகியவற்றின் அடிப்படையில், ஒரு தச்சரால் அவற்றை உற்பத்தி செய்ய முடியும். ஒரு சீஷரும் வாழ்நாள் முழுவதும் கற்பவர் மற்றும் சீஷர்களை உருவாக்குபவர்.
8) முடிந்தது:
ஒரு தச்சனுக்கு தன் வேலை எப்போது முடியும் என்று தெரியும். கர்த்தராகிய இயேசு தனது பணி எப்போது முடிந்தது என்பதை அறிந்திருந்தார்; அதனால் "எல்லாம் முடிந்தது" என்று அவர் அறிவித்தார் (யோவான் 19:30). ஒரு சீஷன் இந்த பூமியில் தனது நேரத்தைப் பற்றி அறிந்த நபராக இருப்பது அவசியம், அப்போது தான் அதை சரியாக பயன்படுத்த முடியும்.
என் எஜமான் நாசரேத்தின் தச்சரா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்