அனைவருக்கும் குணமாகுமா?

ஒரு மனிதன் தனது சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தான்.   அவர் பிரசங்கத்தை உன்னிப்பாகக் கேட்டார் மற்றும் விசுவாசம் கொண்டிருந்தார், அவருடைய உறவினர்களும் விசுவாச ஜனங்களும் பிரசங்கியாரின் ஜெபத்தால் குணமடைவார் என்று எதிர்பார்த்தார்கள்.  மூன்று நாட்கள் கூட்டங்கள் நடந்தன, ஆனால் அவர் குணமடையவில்லை.   ஏமாற்றத்துடனும் வருத்தத்துடனும் வீட்டிற்குத் திரும்பினர்.   அவரைப் பொறுத்தவரை, அனைத்து நோயாளிகளும் குணமடைவார்கள் என்று பிரசங்கியார் உறுதியளித்தாரே.   ஆனால் அது நடக்கவில்லையே என வருத்தம்.   அனைவரும் குணமடைவதாக வேதாகமம் உறுதியளிக்கிறதா அல்லது அது பொய்யான வாக்குறுதியா? 

தேவ திட்டம்: 
முடங்கிப்போயிருந்த மனிதன் எருசலேம் ஆலயத்தின் அலங்கார வாசலில் அமர்ந்திருந்தான்.   கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அவருடைய ஊழியத்தின் போது ஆலயத்திற்கும் அதன் சுற்றுப்புறத்திற்கும் பலமுறை அடிக்கடி வந்திருந்தார்.   ஆனாலும், கர்த்தர் அவனைக் குணமாக்கவில்லை.   பின்னர், அவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் பேதுரு மற்றும் யோவானால் குணமாக்கப்பட்டார் (அப்போஸ்தலர் 3:1-10). முப்பத்தெட்டு வருடங்களாக முடங்கிப்போய் பெதஸ்தா குளத்தின் அருகே கிடந்த ஒரு மனிதன் கர்த்தரால் குணமானான் (யோவான் 5:1-15). குணமடைவதை எதிர்பார்த்த அங்கிருந்த மற்றவர்கள் குணமடையவில்லை. மருத்துவமனை அல்லது மருத்துவக் கல்லூரியைத் தொடங்குவது தேவனின் திட்டமாக இருக்கவில்லை. மனித குலத்தை மீட்பதே அவரது நோக்கம். இந்த அற்புதங்கள் அவருடைய தெய்வீகத்தை உறுதிப்படுத்தும் அடையாளங்களாகும்.

விசுவாசமின்மை: 
அவநம்பிக்கையின் காரணமாக கர்த்தராகிய ஆண்டவர் தனது சொந்த ஊரான நாசரேத்தில் அற்புதங்களைச் செய்யவில்லை (மத்தேயு 13:58, மாற்கு 6:4-13). விசுவாசம் என்பது தேவனை நம்புவதும், அவரைத் தேடுபவர்களுக்கு பலன் அளிப்பார் என விசுவாசிப்பதும் ஆகும்.

தேவ வல்லமையின் வெளிப்பாடு 
தேவன் ஒரு சிலரின் வாழ்க்கையில் சரீர பலவீனங்களை அனுமதித்தார்.   பவுலுக்கு ‘சரீரத்தில் முள்’ இருந்தது, அது அவரைத் தொந்தரவு செய்யும் மற்றும் எரிச்சலூட்டும்.   ஆனாலும், கர்த்தர் அவரைக் குணப்படுத்தவில்லை, ஆனால் நோயினால் ஏற்பட்ட பலவீனத்தில் அவருடைய வல்லமை வெளிப்படும் என்று உறுதியளித்தார்.   பவுல் பலவீனம் தான் தன்னை தாழ்மையாக வைத்திருக்க செய்கிறது என்று நினைத்தான்.  தேவனுடைய வல்லமை குணப்படுத்தலாம் அல்லது தேவனின் உயர் நோக்கங்களுக்காக அதைப் பயன்படுத்துவதற்கான இரக்கம், திறன்கள் மற்றும் தாலந்துகளை வழங்க முடியும் (2 கொரிந்தியர் 12:7-10). ஆறாவது வயதில் கண்பார்வை இழந்த ஃபேன்னி க்ராஸ்பி, இரண்டு நூற்றாண்டுகளாக உலகெங்கிலும் உள்ள சபைகளில் பாடும்படியாக 8000 பாடல்களை எழுதியுள்ளாரே. 

தேவனின் திட்டம், நோக்கம் மற்றும் வல்லமையை நான் என் வாழ்க்கையில் உணர்ந்தேனா? 

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download