தேவன் வேதாகமத்தில் ஒரு சிலரை மாத்திரம் இரண்டு முறை மீண்டும் மீண்டுமாக பெயர் சொல்லி அழைத்தார். முதலாவதாக , தனிநபர்களின் உடனடி கவனத்தை ஈர்ப்பதற்காக; இரண்டாவதாக , தாமதிக்காமல் உடனடியாக செய்ய வேண்டிய அல்லது நிறுத்தப்பட வேண்டிய முக்கியமான ஒன்றைப் பற்றி தேவன் சொல்வதற்காக; மூன்றாவதாக , சிலருக்கு உயர்ந்த பொறுப்பை வழங்குவதற்காக; நான்காவதாக , அது தேவனோடான நெருங்கிய அன்பின் வெளிப்பாடு.
1. ஆபிரகாம்:
தேவன் ஆபிரகாமை "ஆபிரகாமே, ஆபிரகாமே என்று கூப்பிட்டார்" அவன் பல நாடுகளின் தந்தை ஆனான் (ஆதியாகமம் 22:11-13). அவன் தனது நாடு, மக்கள், மொழி, கலாச்சாரம், இனம், குடும்பம் ஆகியவற்றை விட்டுவிட்டு தேவனைப் பின்பற்றினான். அவன் தனது மகனான ஈசாக்கையும் பலியிட துணிந்து, விசுவாச பரீட்சையில் வெற்றியும் பெற்றான்.
2. யாக்கோபு:
தேவன் யாக்கோபை "யாக்கோபே, யாக்கோபே என்று கூப்பிட்டார்" அவன் பன்னிரண்டு கோத்திரங்களைக் கொண்ட பெரிய ஜாதியானான் (ஆதியாகமம் 46:1-4).
3. மோசே:
தேவன் மோசேயை முட்செடியின் நடுவிலிருந்து "மோசே, மோசே என்று கூப்பிட்டார்"; அவனை இஸ்ரவேலரை எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பவராக நியமித்தார் (யாத்திராகமம் 3:1-10).
4. சாமுவேல்:
சாமுவேல் சிறுபையனாகவோ அல்லது இளம் வாலிபனாகவோ இருந்திருக்கலாம், கர்த்தர் அவனை "சாமுவேலே சாமுவேலே என்று கூப்பிட்டார்"; கர்த்தர் அவனை ஆசாரியனாகவும், தீர்க்கதரிசியாகவும், நியாயாதிபதியாகவும் சிறப்பாகப் பயன்படுத்தினார் (1 சாமுவேல் 3:10).
5. மார்த்தாள்:
பல விஷயங்களைப் பற்றி வருத்தப்படாமல், நித்தியமானதைத் தேர்ந்தெடுக்கவும், அவளிடமிருந்து எதுவும் பறிக்கப்படாமல் இருக்கவும் ஆண்டவராகிய இயேசு "மார்த்தாளே, மார்த்தாளே" என்றழைத்து தேவை எது என்பதைப் பற்றிக் கற்பித்தார் (லூக்கா 10:38-42).
6. சீமோன் பேதுரு:
அதிவேக, சுறுசுறுப்பான, துருதுருவென இருக்கும் சீஷன் தன்னை அல்ல, தேவனை நம்பக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று உணர "சீமோனே சீமோனே" என்றழைத்தார் (லூக்கா 22:31-32). பெந்தேகொஸ்தே நாளில் கர்த்தர் அவனை முதல் பிரசங்கியாகவும், தீர்க்கதரிசியாகவும், போதகராகவும் பயன்படுத்தினார் (அப்போஸ்தலர் 2).
7. எலோயீ! எலோயீ!:
பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவி என திரியேக தேவனுடனான நெருக்கத்தின் வெளிப்பாடாக பிதாவாகிய தேவனிடம் கர்த்தராகிய இயேசு உரையாற்றினார்.
8. சவுல்:
சபையை இரக்கமற்ற முறையில் துன்புறுத்திய சவுலை, புறஜாதிகளுக்கு அனுப்பவும், அவருடைய நாமத்திற்காக பெரும் துன்பங்களைச் சுமக்கவும் கர்த்தர் "சவுலே, சவுலே" என்றழைத்தார் (அப்போஸ்தலர் 9:4).
9. எருசலேம்:
இந்த நகரம் தேவனைக் காட்டிலும் மிகவும் முக்கியத்துவமானது, "எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளும்வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று" (மத்தேயு 23:37) என்ற நியாத்தீர்ப்பின் இரட்சிப்பை அறிவித்தார்.
10.கர்த்தாவே, கர்த்தாவே:
கள்ள போதகர்களும் தீர்க்கதரிசிகளும் "கர்த்தாவே, கர்த்தாவே" என்றழைப்பார்கள்; ஆனால் தேவன் அவர்களை உங்களை ஒருக்காலும் அறியவில்லை என்பார். ஏனெனில் அவர்கள் உதடுகளால் உரையாற்றுகிறார்கள், ஆனால் அவர்களின் இதயங்களோ வெகு தொலைவில் உள்ளன (மத்தேயு 7:21-22; லூக்கா 6:46; 13:25).
ஆண்டவர் என்னை அறிந்து, என் பெயரைச் சொல்லி அழைப்பதால் நான் மகிழ்ச்சியடைகிறேனா? (யோவான் 10:14
Author: Rev. Dr. J .N. மனோகரன்