மூன்று பேருக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பின்பற்ற வேண்டும் என்று மிகுந்த ஆவல், ஆனால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர் (லூக்கா 9:57-62). இன்றைய காலங்களிலும் தேவராஜ்யத்திற்கான அழைப்பு என்பது ஆபிரகாமை தேவன் எப்படி அழைத்தாரோ அதே போலதான் உள்ளது.
1) சேருமிடம்:
நமக்கான தேவ அழைப்பு என்பது ஒரு இலக்கைப் பற்றியது அல்ல. தேவன் தம்மிடம் சேர நம்மை அழைக்கிறார், அதாவது நாம் அவருடன் இருக்க வேண்டும். சிலர் பரலோகம் தான் நமது இலக்கு போலும் என்று நினைக்கிறார்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினிமித்தம் பரலோகம் ஒரு தகுதியான இடம். ஆபிரகாமை தேவன் அழைத்த போது சேருமிடத்தையோ வழித்திட்டத்தையோ அறிவிக்கவில்லையே அல்லது கையில் வரைபடத்தை கொடுக்கவில்லையே. ஆபிரகாம் தேவனை பின்பற்ற வேண்டும் அவ்வளவுதான். அதுபோல எகிப்தில் இருந்து விடுவிக்கப்பட்ட இஸ்ரவேலர்களிடம் முழுப்புவி இடங்குறிப்பு அமைப்போ அல்லது சாலை வரைபடமோ இல்லை. அவர்கள் மேகஸ்தம்பத்தையும் அக்கினிஸ்தம்பத்தையும் பின்பற்ற வேண்டியிருந்தது. அதாவது, அழைத்தவர் மீதுள்ள விசுவாசம். அதுபோல பவுல் அறிக்கையிட்டார்; "நான் வெட்கப்படுகிறதில்லை; ஏனென்றால், நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னாரென்று அறிவேன்" (2 தீமோத்தேயு 1:12). ஆம் தேவன் உண்மையுள்ளவரும் நம்பகமானவருமானவர் என அறிந்திருந்தார். ஆபிரகாமின் பயணத்தில் காலக்கெடு இல்லை மற்றும் பயண நேரமானது தேவனுடைய கரத்தில் இருந்தது (ஆதியாகமம் 12:1-3).
2) மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும்:
இந்த விசுவாச பயணத்தை கவனச்சிதறல்களாலும் தடைகளாலும் நிறுத்த முடியாது. ஆபிரகாம் மெசொப்பொத்தாமியா நாட்டிலே இருந்தபோது கர்த்தர் அழைத்தார். அவன் அங்கிருந்து பயணம் செய்து காரானூரை அடைந்தான் (அப்போஸ்தலர் 7:2). அங்கே ஆபிரகாமின் தகப்பன் மரித்துப் போனார். ஆபிரகாமின் அழைப்பையும் தேவனளித்த வாக்குத்தத்தையையும் கர்த்தர் நினைப்பூட்டினார், பின்பு ஆபிரகாமின் பயணம் தொடர ஆரம்பித்தது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட நபர் தனது தந்தையுடன் இறுதி நாட்களைக் கழிக்கவும் தனது பரம்பரை உரிமையை கோரவும் விரும்பினான் அல்லது தகப்பனாரின் மரணத்திற்குப் பிறகு, அவரது எலும்புகளை ஒரு எலும்புகளை பாதுகாக்கும் பேழையில் வைத்து பாதுகாக்க விரும்பினாரோ என்னவோ!
3) கலப்பையின் மேல் கை:
தகுதி நீக்கம் செய்யப்பட்ட நபர் திரும்பிச் செல்ல விரும்பினார், அவரது தொடர்புகள் மற்றும் பலமான இணைப்பை மீண்டும் நிறுவி, அவருடைய சீஷத்துவ பரிசோதனை தோல்வியுற்றால் அதைவிட்டு பின்வாங்கலாம் என்பதற்காக தனது எதிர்கால பாதுகாப்பை உறுதிசெய்ய விரும்பினார். இருப்பினும், தேவ அழைப்பு மாற்ற முடியாதது மற்றும் நிரந்தரமானது. தேவனின் அழைப்புக்கு எலிசாவின் மறுமொழி போதனையாக அல்லவா இருக்கிறது, ஆம், "அப்பொழுது அவன் இவனை விட்டுப் போய், ஓர் ஏர்மாடுகளைப் பிடித்து அடித்து, ஏரின் மரமுட்டுகளால் அவைகளின் இறைச்சியைச் சமைத்து ஜனங்களுக்குக் கொடுத்தான்; அவர்கள் சாப்பிட்டபிற்பாடு, அவன் எழுந்து, எலியாவுக்குப் பின்சென்று அவனுக்கு ஊழியஞ்செய்தான்" (1 இராஜாக்கள் 19:21). ஆபிரகாம் தன் குடும்பம், தேசம், மொழி, கலாச்சாரம் மற்றும் அனைத்தையும் விட்டு தேவனைப் பின்பற்றினார்.
சீஷனாகு என்ற தேவனின் அழைப்புக்கு என்னுடைய மறுமொழி என்ன?
Author : Rev. Dr. J. N. Manokaran