ஒரு சிறிய நாடு கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக உள்நாட்டுப் போரை அனுபவித்து வருகிறது. நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமாக உள்ளது, பலரும் உணவில்லாமல் பசி பட்டினியால் வாடும் நிலை, பள்ளிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன, வேலையின்மை அதிகமாக உள்ளது மற்றும் அந்நாட்டு குடிமக்கள் பசுமையான மேய்ச்சல் நிலங்களுக்கு தப்பி ஓடுகிறார்கள். ஆனாலும், மக்கள் கூட்டம் அலைமோதும், கஜானாவை நிரப்பும் மத வழிபாட்டு இடம் உள்ளது. செல்வங்களான பணம், தங்கம் மற்றும் பிற விலையேறப்பெற்ற பொருட்கள் அரசாங்க கருவூலங்களை விட அதிகமாக காணப்படுகிறது. நிஜத்தில் மதத் தலைவர்கள் நாட்டின் பொருளாதாரத்தை மாற்றி மக்களுக்கு நன்மை செய்ய முடியும், இருப்பினும், அவர்கள் மத ஸ்தலத்தின் உடைமைகள், கௌரவம் மற்றும் பெருமைகளைப் பாதுகாக்கிறார்கள். மத அதிகாரிகள் கூட செல்வத்திற்கு அரசாங்கத்திடம் பாதுகாப்பு கோருகிறார்கள், ஆனால் அதற்காக ஆகும் செலவை கொடுக்க மறுக்கிறார்கள்.
உக்கிராணத்துவம்:
தாலந்துகளின் உவமையில், ஒரு தாலந்து கொடுக்கப்பட்ட மனிதன் புத்திசாலி அல்ல, அவன் ஒரு முட்டாள். அவன் தனது தாலந்தைப் புதைக்க, ஒரு பொருத்தமான இடத்தைக் கண்டுபிடிப்பதற்காக இரவில் திறந்தவெளிகளில் ஆராயும் கடினமான வேலைகளைச் செய்தான். அநேகமாக, அவன் பல இரவுகளை அந்த தாலந்தை டெபாசிட் செய்யவும் மற்றும் அதனை விழிப்புடன் காக்கவும் கழித்தான். துரதிர்ஷ்டவசமாக, அவன் நிராகரிக்கப்பட்டான், தண்டிக்கப்பட்டான் மற்றும் அவனிடம் இருந்ததும் பறிபோனது (மத்தேயு 25:14-30). அதுபோல அந்த தேசத்தின் மதத் தலைவர்களும் தேசத்தின் மக்களின் செல்வத்தை மனிதர்களின் கண்கள் பார்க்கவோ அல்லது தொடவோ அல்லது பயன்படுத்தவோ முடியாதபடி புதைத்தனர்.
வேதம்:
வேதாகமத்தைப் போல, பெரும்பாலான மத இலக்கியங்கள் சமத்துவம், சகோதரத்துவம், மனித கண்ணியம், பெருந்தன்மை போன்ற நற்குணங்களையோ மற்றும் கைவிடப்பட்ட, ஒதுக்கப்பட்ட, புலம்பெயர்ந்தோர் மற்றும் ஏழைகளுக்கான அக்கறையையோ கற்பிக்கவில்லை. பெரும்பாலும், மக்களுக்குப் பயனளிக்காத சடங்குகள் மற்றும் மரபுகளை ஊக்குவிக்கிறது, மேலும் சொல்லப்போனால் இது ஒரு குற்றவியல் வீணாகும்.
பரிசுத்தவான்கள்:
மற்றவர்களை ஆசீர்வதிப்பதும், பிணைக்கப்பட்டவர்களை விடுவிப்பதும், கட்டுண்டவர்களின் விடுதலைக்கு உதவுவதும், காயப்பட்டவர்களுக்கு மருந்தளிப்பதும், நோயாளிகளைப் பராமரிப்பதும், அனாதைகளைக் கவனிப்பதும், விதவைகள் மேல் அக்கறை செலுத்துவதும், குரலற்றவர்களுக்காகப் பேசுவதும், பிறர் துன்பங்களைப் போக்குவதும், குழந்தைகளுக்குக் கல்வி கற்பிப்பதும், தொடர்ந்து சமுதாயத்திற்கு நல்ல செயல்களைச் செய்வதுமே பரிசுத்தவான்களின் கடமை என்று வேதாகமம் போதிக்கிறது (2 தீமோத்தேயு 3:16-17).
சமாரியர்கள்:
நல்லவர், பெரியவர் மற்றும் தெய்வீகமான சமாரியனைப் போலவே, கிறிஸ்தவர்களும் ஆபத்தில் உள்ளவர்கள், பாதிக்கப்படக்கூடியவர்கள், அடிக்கப்பட்டவர்கள், கொள்ளையடிக்கப்பட்டவர்கள் மற்றும் கைவிடப்பட்டவர்களுடன் உறவாடிட, அன்பு செலுத்திட அழைக்கப்படுகிறார்கள். ஆக, உலகில் உள்ள பல நாடுகளில் உள்ள கோடிக்கணக்கானவர்களுக்கு திருச்சபை எவ்வாறு வெளிச்சத்தையும், உதவி மற்றும் மாற்றத்தையும் கொண்டு வந்தது என்பதற்கான கணக்குகளால் வரலாறு நிரம்பியுள்ளது.
அனைத்து நற்காரியங்களையும் செய்ய நான் தகுதியுள்ள நபரா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்