அந்தியோகியாவில் உள்ள கிறிஸ்துவின் சீஷர்களை 'கிறிஸ்தவர்கள்' என்று புனைப்பெயர் அல்லது பட்டப்பெயர் வைத்து அழைத்தனர். அதாவது இவர்கள் மாத்திரம் வித்தியாசமாக இருப்பதைக் கவனித்தனர். அவர்களை வரையறுக்க அல்லது முத்திரை குத்த, தேடி அலைந்தபோது அவர்கள் கிறிஸ்துவைப் பின்பற்றுவதைக் கண்டறிந்தனர், எனவே அவர்களை கிறிஸ்தவர்கள் என்று அழைத்தனர் (அப்போஸ்தலர் 11:26). உண்மையில், அவர்கள் அந்தியோக்கியா நகரத்திற்கு ஒரு ஆசீர்வாதமாக இருந்தனர். துரதிர்ஷ்டவசமாக, இன்று கிறிஸ்தவர்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஒளியையும் சத்தியத்தையும் உலகில் பிரதிபலிக்கவில்லை. பல நேரங்களில், அவர்கள் வேதத்தை விட கலாச்சாரத்தை அல்லவா பின்பற்றுகிறார்கள்.
ஈடுபாடு:
அந்தியோகியாவிலுள்ள சீஷர்கள் கர்த்தரை நேசித்தார்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மீது அவர்கள் கொண்டிருந்த அன்பு அவர்களுடைய குடும்பங்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மீதான அவர்களின் அன்பு வெறுப்பாகத் தோன்றியது (லூக்கா 14:26).
அர்ப்பணிப்பு:
சீஷர்களின் முன்னுரிமை தேவ ராஜ்யமும் தேவநீதியும், ஆம், "முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்" (மத்தேயு 6:33). இந்த அர்ப்பணிப்புப் பாதையிலிருந்து கவனச்சிதறல்கள் அல்லது விலகல்கள் எதுவும் இல்லை.
திசை:
உலகில், மக்கள் தங்கள் இலக்கை அறியாமல் வெவ்வேறு திசைகளில் ஓடுகிறார்கள். இயேசுவே வழி என்பதை சீஷர்கள் அறிவார்கள், அவரைப் பின்தொடர்ந்தால் நித்திய இலக்கான பரலோகத்திற்குச் செல்லலாம் (யோவான் 14:6).
மகிழ்ச்சி:
இரவும் பகலும் தேவனுடைய வார்த்தையை வாசிப்பதிலும், தியானிப்பதிலும், பிரயோகிப்பதிலும் சீஷர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள் (சங்கீதம் 1:1-3).
பரிமாணம்:
உலகில் உள்ள மக்கள் இரண்டு அல்லது மூன்று பரிமாணங்களை ஆராய்ந்து கொண்டிருக்கும் போது, சீஷர்கள் நித்தியத்தின் பரிமாணத்தை உணர்கிறார்கள். எனவே அவர்களின் எண்ணங்கள், குறிக்கோள்கள், குணங்கள், வாழ்க்கை முறை மற்றும் நோக்கம் மற்றவர்களை விட உயர்ந்ததாகவும் உன்னதமானதாகவும் இருக்கும்.
சிரத்தை:
சீஷர்கள் ஆண்டவருக்கு செய்வது போல் தாங்கள் செய்யும் எல்லாவற்றிலும் சிறந்து விளங்குகிறார்கள். உக்கிராணக்காரர்கள் வளங்கள், நேரம், திறமைகள், வரங்கள் மற்றும் வாய்ப்புகளை வீணாக்க மாட்டார்கள்.
ஆரோக்கியம்:
ஒரு சீஷனின் உரையாடல்களும், வார்த்தைகளும், பேச்சுகளும் எப்பொழுதும் கண்ணியமானதாகவும், புத்துணர்ச்சியூட்டுவதாகவும், மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாகவும் இருக்கும். அவர்களின் வார்த்தைகளில் புண்படுத்துதலோ, இழிவுபடுத்துதலோ, சபித்தலோ என எதுவும் இல்லை.
கண்ணியம்:
அவர்கள் தேவனின் பிள்ளை என்ற உறுதியைக் கொண்டிருப்பதால், அவர்கள் எப்போதும் சுயமரியாதையும் கண்ணியமும் கொண்டுள்ளனர் (யோவான் 1:12).
நடத்தை:
அவர்களின் அனைத்து நடத்தைகளிலும், வீடு, பணியிடம் மற்றும் பொது இடங்கள் என எல்லாவற்றிலும் அவர்கள் கண்ணியத்தையும் நல்நடக்கையையும் வெளிப்படுத்துகிறார்கள். அவர்களின் உணர்வின் அடிப்படையிலும் ஆவிக்குரிய பக்குவத்தின் காரணமாகவும் அவர்கள் தங்கள் நடக்கையை காத்துக் கொள்கிறார்கள்.
கடமை:
அவர்கள் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்வதற்கும், சேவை செய்யப்படாதவர்களுக்குச் சேவை செய்வதற்கும், உலகில் சமாதானத்தை உருவாக்குபவர்களாகவும் செயல்பட்டு தங்கள் அழைப்பையும் கடமையையும் நிறைவேற்றுகிறார்கள் (மத்தேயு 28:18-20).
உலகிற்கு நான் ஆசீர்வாதமான நபரா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்