உலகத்தை ஆசீர்வதிக்க ஆரோன் போன்ற கிறிஸ்தவர்களை தேவன் அழைத்துள்ளார்.
1) சுத்திகரிப்பு:
ஆரோனும் அவனுடைய மகன்களும் கர்த்தருக்குச் சேவை செய்யத் தகுதியுடையவர்களாகும்படி முதலில் கழுவப்பட்டனர் (லேவியராகமம் 8:6). கிறிஸ்தவர்கள் அவருடைய வார்த்தையால், அவருடைய ஆவியால் சுத்திக்கரிக்கப்படுகிறார்கள் (எபேசியர் 5:26; தீத்து 3:5). இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் சுத்திகரிக்கப்படுவது என்பது விசுவாசத்தினால் பெறப்படுகிறது (வெளிப்படுத்துதல் 1:5).
2) புனிதப்படுத்தப்படல்:
ஆசாரியன் சிறப்பு ஆடைகளை அணிந்திருந்தார் (வெளிப்படுத்துதல் 8:7-8). அவரால் பழைய ஆடைகளை அணிய முடியாது. விசுவாசிகள் இரட்சிப்பு மற்றும் நீதியின் அங்கியை அணிந்துள்ளார்கள்(வெளிப்படுத்துதல் 3:5). ஆசாரியர்களுக்கு ஆடைகள் வழங்கப்பட்டன அல்லது பரிசளிக்கப்பட்டன. அவர்கள் ஒன்றை வாங்கவோ, நெசவவோ அல்லது தயாரிக்கவோ தேவையில்லை, ஆனால் பெற்று அணிய வேண்டும்.
3) அபிஷேகம்:
மோசே அபிஷேகத் தைலத்தை எடுத்து, பலிபீடத்தின் மீதும், பலிபீடப் பாத்திரங்கள் மீதும் ஏழுமுறை தெளித்து, அவற்றைப் பிரதிஷ்டை செய்தார் (லேவியராகமம் 8:10-13). ஆசாரியர்கள் மீது எண்ணெய் ஊற்றப்பட்டது, பொருள்கள் மீது தெளிக்கப்பட்டது. எண்ணெய் பரிசுத்த ஆவியைக் குறிக்கிறது மற்றும் ஒரு புதிய ஏற்பாட்டு விசுவாசி ஆவியில் விசுவாசத்தால் நடக்கிறார் (சங்கீதம் 133:2; 1 யோவான் 2:20).
4) பிரதிஷ்டை:
பிரதிஷ்டை என்றால் அதை புனிதமாக்குவது அல்லது உயர்ந்த நோக்கத்திற்காக அர்ப்பணிப்பதாகும். உதாரணமாக, ஒரு கட்டிடம் திருச்சபையாக மாற வேண்டும். அர்ப்பணம் என்பது மனித பாகம், அதே சமயம் பரிசுத்தம் என்பது தேவனின் பகுதியாகும். தேவன் நம்மை என்ன செய்ய அழைத்திருக்கிறாரோ, அதில் ஆர்வம், கருத்து, கவனம் செலுத்துதல் என்று அர்த்தம். இஸ்ரவேல் தேசம் அல்லது லேவி கோத்திரம் முழுவதும் புனிதப்படுத்தப்படவில்லை. ஆரோன் மட்டுமே ஆசாரியனாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டார் (யாத்திராகமம் 28:1-2 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல் மற்றும் பரமேறுதல் ஆகிய காரணங்களுக்காக தேவனைத் துதியுங்கள், அதனால் இன்று நாம் அனைவரும் ராஜரீகமான ஆசாரியக் கூட்டமாயும் தெரிந்துக் கொள்ளப்பட்ட சந்ததியாயும் இருக்கிறோம் (1 பேதுரு 2:9).
5) தேவ சமூகத்தில் காத்திருத்தல்:
ஆரோன் மற்றும் அவரது மகனின் பிரதிஷ்டை ஏழு நாட்கள் நீடித்தது. ஒவ்வொரு நாளும் பலிகள் ஏறெடுக்கப்பட்டன. ஏழு நாட்களும் ஆரோனும் அவருடைய மகன்களும் கூடாரத்தை விட்டு வெளியே போகக்கூடாது.
6) மக்களுடன் அடையாளம் காணுதல்:
ஆரோனும் ஆசாரியர்களும் தங்கள் தோள்களிலும் மார்பிலும் கோத்திரங்களின் பெயர்களை வைத்திருந்தனர் (யாத்திராகமம் 28:29).
7) பணிவு:
ஆரோன் அல்லது ஆசாரியர்கள் அதே வார்த்தைகளால் மக்களை ஆசீர்வதிக்க வேண்டும் (எண்ணாகமம் 6:24-27). ஜெபங்கள் அவர்களுடைய சொந்த வார்த்தைகளாக இருக்கலாம், ஆனால் ஆசீர்வாதங்கள் தேவனுடைய வார்த்தைகளை திரும்பத் திரும்பச் சொல்வதாக இருக்க வேண்டும்.
மற்றவர்களை ஆசீர்வதிக்கும் பாக்கியத்தை நான் பயன்படுத்துகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்