கிறிஸ்தவத் தலைவர்கள் ஏணிப்படிகளாக இருக்க (வேலைக்காரர்கள்) அழைக்கப்படுகிறார்கள்; ஆனால், அவர்கள் தங்களைத் தலைவர்கள், முதலாளிகள், தலைமை நிர்வாக அதிகாரிகளாக ஊகித்துக் கொள்கிறார்கள்... எனவே கிறிஸ்தவ உலகில் பலர் குழம்பியிருக்கிறார்கள் மற்றும் தலைவர்களைக் குழப்புகிறார்கள்.
இஸ்ரவேல் ராஜ்ஜியத்தில் எதிர்காலத்தில் தலைமைப் பொறுப்பிற்காக தேவன் தேர்ந்தெடுத்த தாவீது-க்கு 'ஏணியாக' இருக்கும் வரம் யோனத்தானிடம் இருந்தது. *“அவன் சவுலோடே பேசி முடிந்த பின்பு, யோனத்தானுடைய ஆத்துமா தாவீதின் ஆத்துமாவோடே ஒன்றாய் இசைந்திருந்தது; யோனத்தான் அவனைத் தன் உயிரைப்போலச் சிநேகித்தான். சவுல் அவனை அவன் தகப்பன் வீட்டுக்குத் திரும்பிப்போக ஒட்டாமல், அன்று முதல் தன்னிடத்தில் வைத்துக் கொண்டான். யோனத்தான் தாவீதைத் தன் ஆத்துமாவைப் போலச் சிநேகித்ததினால், அவனும் இவனும் உடன்படிக்கைபண்ணிக் கொண்டார்கள். யோனத்தான் போர்த்துக்கொண்டிருந்த சால்வையைக் கழற்றி, அதையும், தன் வஸ்திரத்தையும், தன் பட்டயத்தையும், தன் வில்லையும், தன் கச்சையையும்கூடத் தாவீதுக்குக் கொடுத்தான்.”* (சாமுவேல் 18: 1-4) சவுல் இராஜா, யோனத்தானின் தந்தை, தாவீது மீது பொறாமை மற்றும் ஐயுறவு கொண்டார், அதேசமயம் யோனத்தான் மகிழ்ச்சியுடன், முழு மனதுடன் தாவீதை ஆதரித்தார்.
யோனத்தான் தனது மேலங்கியை தாவீதுக்கு வழங்குவதன் மூலம், அவரை ஒரு தலைவர், இராணுவ வீரன் மற்றும் அரசியல் ராஜாவாக அங்கீகரித்தார். அவர் தனது வாளை தாவீதுக்கு கொடுத்தார், இது ஒரு பெரிய தியாகச் செயல். இஸ்ரேலில் இரண்டு வாள்கள் மட்டுமே இருந்ததால் இது குறிப்பிடத்தக்கது. ஒன்று சவுலிடமும் மற்றொன்று யோனத்தானிடமும் இருந்தது. (I சாமுவேல் 13:22) யோனத்தான் தனது சொந்த வாளை ஒரு எளிய மற்றும் பாதுகாப்பு இல்லாத மனிதனான தாவீதுக்குக் கொடுத்தார்.
யோனத்தானின் சகாக்கள் அவரை கேலி, கிண்டல் மற்றும் ஏளனம் செய்திருப்பார்கள். அவர் ஒரு முட்டாள் என்று முத்திரை குத்தப்பட்டிருப்பார். அவரது தந்தை கூட தீங்கிழைக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்தி அவரைக் கண்டித்தார். (I சாமுவேல் 20:30) ஆனாலும், தாவீதின் மீது தேவனின் அழைப்பு மற்றும் ஒரு சிறந்த தலைவராக தாவீதை உருவாக்குவதில் பங்கு அவருக்கும் இருப்பதைத் தெரிந்திருந்ததால் அவர் கலங்கவில்லை.
ஏணிகள், மக்கள் தன் மீது ஏறிநடக்க அனுமதிக்கின்றன, இத்தகைய தலைவர்களும் அப்படிப்பட்டவர்களே (சங்கீதம் 66: 12). ஒரு நபர் உயரத்தை அடைந்தவுடன் ஏணிகள் உதைத்துத் தள்ளப்படுகின்றன. ஆமாம், வழிகாட்டிகள் அல்லது உதவியாளர்கள் அல்லது பரோபகாரர்கள் நினைவில் வைக்கப்படுவதில்லை, அதிலும் மோசமாக, அவர்கள் உதைத்துத் தள்ளப்படலாம். ஏணிகளாக இருந்து பல தலைவர்களை உறுதிப்படுத்தி, உருவாக்கிய தலைவர்களுக்காக கர்த்தருக்கு நன்றி!.
நான் ஒரு ஏணிப்படித் தலைவனா?
Author : Rev. Dr. J. N. Manokaran