அநேக ஜனங்கள் பட்டினியால் சாகிறார்கள். சுகாதாரம் போதுமானதாக இல்லை. கிட்டத்தட்ட எல்லாவற்றிலும் பற்றாக்குறை உள்ளது. ஆயினும்கூட, இந்த நாடு உலகின் அனைத்து நாடுகளையும் எச்சரிக்கும் மற்றும் பயமுறுத்தும் நோக்கத்துடன் நீண்ட தூர ஏவுகணைகளை சோதிக்கிறது. ஆயிரக்கணக்கான கிராம மக்கள் பல மைல் தூரம் நடந்து சென்று குடிநீர் எடுக்க வேண்டும். ஆனால் அந்த நாடு செவ்வாய் கிரகத்தில் நீரை ஆராய விரும்புகிறது. உணவு, தண்ணீர், உடை, உறவிடம், கல்வி மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு ஆகிய அடிப்படை தேவைகளை வழங்குவதற்குப் பதிலாக அவர்கள் தங்களுக்கு அல்லது தங்கள் நாட்டிற்கு பெயர், புகழ் மற்றும் அதிகாரத்தை வழங்கும் திட்டங்களைத் தொடர்கின்றனர். "நீதி ஜனத்தை உயர்த்தும்; பாவமோ எந்த ஜனத்துக்கும் இகழ்ச்சி" (நீதிமொழிகள் 14:34) என்று வேதாகமம் போதிக்கிறது.
அதிகாரத்தின் நாட்டம்:
வரலாறு முழுவதும், சில நாடுகள் அதிகாரம், மக்கள் மீதான கட்டுப்பாடு, வளங்கள் மற்றும் இராணுவ வலிமை ஆகியவற்றை கொண்டுள்ளது. அத்தகைய தலைவர்களின் கீழ், மக்கள் ஒடுக்கப்பட்டனர், கீழ்ப்படுத்தப்பட்டனர், சுரண்டப்பட்டனர்.
பெயர் மற்றும் புகழ்:
வரலாற்றில் அடுத்தடுத்த தலைமுறையினரால் நினைவுகூரும் வகையில் விரும்பும் தலைவர்கள் இருந்தனர். அதற்காக பல வருடங்களாக யாராலும் முறியடிக்க முடியாத சாதனைகளைச் செய்ய விரும்பினர். இது மிகப்பெரிய கட்டிடத் திட்டங்களாக இருக்கலாம் அல்லது பிரதேசங்களை விரிவுபடுத்த எல்லைகளை கடந்து வரக்கூடிய திட்டம் எனப் போன்றவை. அவர்கள் தங்களைப் பற்றிய கற்பனையான படங்கள் அல்லது சுயசரிதைகளை உருவாக்க கலைஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் சிற்பிகளை நியமிக்கிறார்கள்.
நீதி, நியாயம்:
தேவ நியமனங்களுக்கு கீழ்ப்படிவதன் மூலமும், வேதாகமத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள தார்மீக மற்றும் நெறிமுறை தரநிலைகளை ஏற்றுக் கொள்வதன் மூலமும் ஒரு தேசம் வளர்ச்சி அடைகிறது. பத்து கட்டளைகள் பொருத்தமானவை, கலாச்சாரத்திற்கு அப்பாற்பட்டவை, நாடுகடந்தவை மற்றும் பல தலைமுறைகளும் பின்பற்ற முடியும். பிரமாணத்தை அமல்படுத்துவதன் முக்கியத்துவத்தை பவுல் எழுதுகிறார் (1 தீமோத்தேயு 1:8-11). ஒரு தேசம் தேவ கட்டளைகளுக்கு கீழ்ப்படியாமல், அவருடைய தார்மீக தராதரங்களை கடைப்பிடிக்காமல், பிரமாணங்களைச் செயல்படுத்தாமல் இருக்கும்போது, அந்த தேசம் தேவனால் நியாயந்தீர்க்கப்படும் (உபாகமம் 28).
மக்களின் கண்ணியம்:
அத்தகைய நாடுகளில், மக்களுக்கு கண்ணியமோ சுயமரியாதையோ இல்லை. ஆட்சியாளர்கள் அவர்களைத் மானுடத்திற்குக் கீழான மனிதர்கள் போல நடத்துகிறார்கள், அவர்களைக் கட்டுப்படுத்துகிறார்கள், ஒடுக்குகிறார்கள். அவர்களின் தேவைகளை வழங்குவது, தளர்ந்த சூழ்நிலையை ஏற்படுத்துவது, வளர்ச்சிக்கான பாதையைக் காட்டுவதற்கு பதிலாக; அவர்கள் மக்களின் திறமைகள், வளங்கள் மற்றும் செல்வங்களை சுயநோக்கத்திற்காக பயன் படுத்துகிறார்கள்.
கிறிஸ்தவ குடிமக்கள்:
அத்தகைய நாடுகள் நல்வழிகளுக்கு திரும்ப தேவ பிள்ளைகள் ஜெபிக்க அழைக்கப்படுகிறார்கள் (2 நாளாகமம் 7:14). அவர்கள் பூமிக்கு உப்பாகவும் உலகத்திற்கு வெளிச்சமாகவும் இருக்க வேண்டும். தேசங்களை மாற்றுவதற்கான கருவியாக திருச்சபை பரிசுத்தவான்களை தகுதிப்படுத்த வேண்டும்.
நான் என் தேசத்தின் மாற்றத்தில் ஒரு கிரியாஊக்கியாக இருக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்