கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள் மற்றொரு அதிர்ச்சியை அனுபவித்தனர். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்த அதிர்ச்சியே பெரும் அதிர்ச்சி, எப்படியோ அந்த அதிர்ச்சியில் இருந்து வெளியே வந்தனர், உயிர்த்தெழுந்த கர்த்தராகிய ஆண்டவர் இயேசுவையும் கண்டார்கள். அவரைப் பார்க்க வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அவருடைய பிரசன்னத்தைக் குறித்து அவர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள். பின்பு ஒலிவ மலையில் ஒன்று கூடும்படி ஆண்டவர் கட்டளையிட்டார்; "அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே உயர எடுத்துக்கொள்ளப்பட்டார்; அவர்கள் கண்களுக்கு மறைவாக ஒரு மேகம் அவரை எடுத்துக்கொண்டது. அவர் போகிறபோது சீஷர்கள் வானத்தை அண்ணாந்துபார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, வெண்மையான வஸ்திரந்தரித்தவர்கள் இரண்டுபேர் அவர்களருகே நின்று: கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்?" (அப்போஸ்தலர் 1:9 -11) என்றார்கள்.
ஊழியம் செய்:
வானத்தைப் பார்த்து நட்சத்திரத்தைக் கணக்கிடுபவர்களாக அல்லது பறவைகளை கவனிப்பவர்களாக அல்லது மேகத்தை நோக்குகிறவர்களாக ஆக வேண்டாம் என்று தேவதூதர்கள் சீஷர்களுக்கு ஆலோசனை கூறுமளவிற்கு அவர்கள் கண்களைக் கூட இமைக்காமல், சிலையைப் போல நின்றனர் ஆனால் அவர்களின் எண்ண திசையை மாற்ற வேண்டும். பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான் ஆகிய மூன்று சீஷர்களும் மறுரூப மலையில் இருக்க விரும்பினர், ஆனால் உலகை எதிர்கொள்ள, ஊழியம் செய்ய இறங்க வேண்டியிருந்தது.
வயல்நிலங்களைப் பார்:
முன்பு கற்பித்தபடி, சீஷர்கள் அறுப்புக்கு விளைந்திருக்கும் வயல்நிலங்களைப் பார்க்க வேண்டும் (யோவான் 4:35). அறுவடையின் உண்மைகளையும் சவால்களையும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டும். எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும் கர்த்தராகிய ஆண்டவருக்கு சாட்சிகளாக இருக்கும் படி தேவன் தம்முடைய சீஷர்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறார் (அப்போஸ்தலர் 1:8).
நகர்ந்து கொண்டேயிரு:
வாழ்க்கை ஒரு விசுவாச யாத்திரை (பயணம்); இது இலக்கை நோக்கி ஒரு நிலையான நகர்வு. வாழ்க்கை ஒரு ஓட்டப்பந்தயம், இறுதிக் கோட்டை நோக்கி நம் கவனம் இருக்க வேண்டும். இராணுவம் நின்றால் மட்டும் வெற்றி பெற முடியாது, அணிவகுத்து வேக நடை போட வேண்டும். ஆம், சீஷர்களும் எப்போதும் சிலையைப் போல அமர்ந்திருப்பதாலோ அல்லது நிற்பதனாலோ உட்கார்ந்து அல்லது சும்மா இருப்பதாலோ வெற்றி பெற முடியாது, கர்த்தருடைய திராட்சைத் தோட்டத்தில் போய் பணி செய்ய வேண்டும். தேவராஜ்யம் ஒரு சீஷரின் முன்னுரிமை (மத்தேயு 6:33).
எதிர்பாருங்கள்:
அவர்கள் வேலை செய்யும் போது, எந்த நேரத்திலும் நடக்கக்கூடிய கிறிஸ்துவின் வருகையை அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். முட்டாள் கன்னிப்பெண்கள் சரியான இடத்தில், சரியான நேரத்தில், சரியான நபர்களுடன் இருந்தனர், மேலும் விளக்குகளையும் வைத்திருந்தார்கள். ஆனால் அவர்கள் தயாராக இல்லை மற்றும் அனுமதி மறுக்கப்பட்டது (மத்தேயு 25:1-13) சீஷர்கள் சுறுசுறுப்பாகவும் சிரத்தையுடனும் ஊழியம் செய்ய வேண்டும், ஆனால் அவர் வருகையைக் குறித்து ஒருபோதும் தளர்ந்து விடக் கூடாது.
நான் தேவராஜ்ய பணியில் மகிழ்ச்சியுடன் ஈடுபடுகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்