ஒரு இளம் போதகர் தனது சாதனைகளைப் பற்றி பெருமிதமாக பேசினார். அவரது யூடியூப் சேனலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை, ஞானஸ்நானம் பெற்றவர்கள், சபை விரிவாக்கம், வெளிநாடுகளில் அவர் கலந்து கொண்ட உலகளாவிய நிகழ்வுகள், அவர் பரிசாகப் பெற்ற புதிய கார் என வளர்ச்சியடைந்ததைக் குறித்து பேசினார். அப்போது ஞானமும் முதிர்ச்சியும் உள்ள நபர் இவ்வாறாக கூறினார்; “மலேரியா பாதித்த பகுதிகளில் உழைக்கும் மிஷனரிகளை பற்றி உங்களுக்குத் தெரியுமா? ஒரு மிஷனரியின் முதல் மகன் மலேரியாவால் பாதிக்கப்பட்டார். இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு மிஷனரி, இந்தியாவில் பணியாற்றியவர், வயிற்றுப்போக்கால் இறந்த, தனது இரண்டு மகன்களையும் தானே அடக்கம் செய்ய வேண்டியிருந்தது. இந்தியாவில் கிறிஸ்துவுக்காக சாட்சியமளித்ததற்காக ஒருவர் தலை மட்டும் வெளியில் தெரியும்படி உடல் புதைக்கப்பட்டது, பின்பு அவர் தலையையும் துண்டித்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட சபைகளை கட்ட தேவன் ஒரு நபரை எப்படி அறிவார் என உங்களுக்கு தெரியுமா? உங்களால் ஒருபோதும் சாதிக்க முடியாத, தியாகம் செய்து சாதித்திருக்கும் இத்தகைய தேவ ஜனங்களுக்காக தேவனுக்கு நன்றி சொல்ல கற்றுக்கொள்ளுங்கள். தேவன் எப்பொழுதும் தனது ஊழியர்களை ஒவ்வொரு கலாச்சாரத்திலும் சரித்திரத்திலும் தனது நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக எழுப்புகிறார். தேவனின் ஒட்டுமொத்த திட்டத்தில் நீங்கள் ஒரு புள்ளி மட்டுமே என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
பவுலின் கண்ணோட்டம்:
பவுல் தனது சாதனைகளைப் பற்றி பெருமை கொள்ளாமல் தாழ்மையுடன் இருந்தார். பவுலும் சீலாவும் சிறையில் தள்ளப்பட்டனர், ஆனால் பிலிப்பி நகரில் ஒரு சபை நிறுவப்பட்டது. அவர் அவர்களுக்கு எழுதியபோது, சபையின் தோற்றத்திற்கு காரணமான அவரது தியாகங்களை பவுல் நினைவில் கொள்ளவில்லை. ஏறக்குறைய முப்பது வருட ஊழியத்தை முடித்த பிறகு அவர் ஒரு பணிவான தாழ்மையான கடிதத்தை எழுதினார். தேவன் ஒரு நோக்கத்திற்காக அல்லது திட்டத்திற்காக பிடித்தார் அல்லது வைத்திருந்தார் அல்லது அபிஷேகம் செய்தார் அல்லது தேர்ந்தெடுத்துள்ளார்; மேலும் அவர் பாடுபடுகிறார் அல்லது அதை நிறைவேற்றுவதற்கான திட்டத்தையும் நோக்கத்தையும் பிடிக்க அல்லது புரிந்துகொண்டு நிறைவேற்ற முயற்சிக்கிறார். அவர் அதைப் பெறவில்லை அல்லது சொந்தமாக்கவில்லை என்று ஒப்புக்கொள்கிறார். தேவனின் நோக்கங்களைச் சரியாக நிறைவேற்றுவதற்குத் தான் போதாதவர் என்றும் அபூரணர் என்றும் பவுல் கூறுகிறார் (பிலிப்பியர் 3:14-16).
தேவனின் பணி:
"தேவன் தனது ஊழியர்களை அடக்கம் செய்கிறார், ஆனால் அவருடைய பணியைத் தொடர்கிறார்". உலகில் நற்செய்தி பணி என்பது அவரது சபையை நிறுவுவதும் மற்றும் தேவ ராஜ்யத்தைக் கட்டுவதும் தேவனின் பணி. அவருடைய சீஷர்கள் அவருடைய பணியைச் செய்யும் தேவ ஊழியர்கள். அவர் தனது பணியைச் செய்வதற்கான வாழ்க்கை, வளங்கள், வாய்ப்புகள், திறமைகள், வரங்கள் மற்றும் திறன்களை வழங்குகிறார். எனவே எல்லா கனமும் புகழும் மகிமையும் தேவன் ஒருவருக்கு மட்டுமே.
தேவனின் அனைத்து பரிசுத்தவான்களாலும் நிறைவேற்றப்பட்ட தேவப் பணியை நினைத்து நான் மகிழ்ச்சியடைகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்