மனிதர்களை விட செல்லப்பிராணிகள் மேலானதா?!

பிரிட்டனில் உள்ள பணக்காரக் குடும்பம் ஒன்று, தங்களுடைய வேலையாட்களில் ஒருவருக்குச் செலவழித்த பணத்தை விட, தங்கள் செல்ல நாய்க்கு அதிகப் பணத்தைச் செலவழித்தது, அற்பக் கூலியைக் கொடுத்து, வாரத்தில் ஏழு நாட்களும், அதிலும் ஒரு நாளைக்கு 18 மணிநேரம் என வேலை செய்ய வைத்தது.   தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பி வர முடியாதபடி வேலையாட்களின் கடவுச்சீட்டுகள் (passports) பறிமுதல் செய்யப்பட்டன, சுதந்திரம் அற்ற நிலை,  அவர்களின் சம்பளமும் குடும்ப உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டது, வசிக்கும் இடத்தில் செலவு செய்ய பணம் இல்லாதச் சூழ்நிலை காணப்பட்டது.  ஆக, வேலையாட்களின் கடவுச்சீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன, மேலும் அவர்களது ஊதியம் இந்தியாவில் வழங்கப்பட்டதால் அவர்களிடம் செலவழிக்க சுவிஸ் பணம் (பிராங்குகள்) இல்லை, இதைப்போன்ற காரணங்களுக்காக வழக்கறிஞர் அவர்களுக்காக வாதிட்டார் (தி இந்துஸ்தான் டைம்ஸ், ஜூன் 19, 2024). இது நவீன கால அடிமைத்தனம் எனலாம். 

கண்ணியம்:  
தேவன் தனது சாயலில், படைப்பின் கிரீடமாக மனிதர்களைப் படைத்தார், மேலும் அவர்களுக்கு கண்ணியம் அளித்தார் (ஆதியாகமம் 1:27). இருப்பினும், பலர் தங்கள் மத நம்பிக்கைகளின்படி எல்லா உயிர்களின் மதிப்பையும் சமமாக கருதுகின்றனர். எனவே அவர்களுக்கு, எறும்புகள், யானைகள், நாய் போன்ற உயிரினங்களும் மனிதர்களும் ஒரே மதிப்பு. 

நேசிக்கப்படலும் ஒடுக்கப்படலும்: 
இந்தியாவில் இருந்து இடம்பெயர்ந்த இந்த பெரும் பணக்கார குடும்பம் மனிதர்களை விட செல்லப்பிராணிகளை மதிப்புமிக்கதாக கருதியது.  சாதி பற்றிய அவர்களின் உலகக் கண்ணோட்டத்தில், படிநிலைப்படி, கீழ் சாதி மக்கள் விலங்குகளை விடவும் சமமாகவும் குறைவாகவும் நடத்தப்படுகிறார்கள்.  எனவே, ஒரு செல்லப்பிராணி நேசிக்கப்பட்டது, அதே நேரத்தில் மனித தொழிலாளர்கள் ஒடுக்கப்பட்டனர்.     

தொழிலாளர்களின் கண்ணியம்: 
அவர்கள் சிலரை தாழ்ந்தவர்களாகவும், மாசுபட்டவர்களாகவும், இரக்கத்திற்கு தகுதியற்றவர்களாகவும் கருதினர்.  ஒரு தொழிலாளி மதிக்கப்படாதபோது, ​​அவனுடைய பங்களிப்பு அல்லது உழைப்புக்கு எந்த மதிப்பும் இல்லை.   எனவே, அவர்கள் கூலி கொடுக்கலாம் அல்லது கொடுக்கப்படாமலும் இருக்கலாம், அது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. 

சுரண்டப்படல்:  
வேலையாட்கள் உடல் ரீதியாக சுரண்டப்பட்டனர், மேலும் அவர்கள் ஒவ்வொரு நாளும் 18 மணிநேரம் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.   தூக்கமில்லை, ஓய்வில்லை மற்றும் சாப்பிட கூட  நேரமில்லை.   பொருளாதார ரீதியாக, அவர்களின் உழைப்பிற்கான கூலி சுரண்டப்பட்டது, அதாவது அவர்களின் ஊதியம் ஐரோப்பாவில் குறைந்தபட்ச ஊதியத்தை விட குறைவாக இருந்தது.  உணர்வு ரீதியாக, வாய்மொழி துஷ்பிரயோகங்கள், தனிமைப்படுத்தல் மற்றும் ஒதுக்கப்படுவதின் காரணமாக அவர்கள் உணர்வு ரீதியாகவும் பாதிக்கப்பட்டனர்.  மன ரீதியாக, அவர்கள் நொறுக்கப்பட்டு இருந்ததால் அவர்களுக்கு சிறிதளவு கூட நிம்மதியே இல்லை.  சமூக ரீதியாக, அவர்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என எல்லாம் இழந்தனர். 

பிரமாணமீறல்:  
இந்தக் குடும்பம் மிகவும் படித்தவர்களாகவும், செல்வாக்கு மிக்கவர்களாகவும், பணக்காரர்களாகவும் இருந்ததால், அவர்கள் நீதியுள்ள நியாயாதிபதியான தேவனுக்கு அஞ்சவில்லை.   முதலில் , அவர்கள் தார்மீக பிரமாணத்தை மீறினார்கள், இரக்கமோ அன்போ இல்லை.   இரண்டாவது , மனிதாபிமான பிரமாணத்தை மீறினார்கள்.   மூன்றாவது , நாட்டின் நியமனங்களை மீறினார்கள்.

நான் சக மனிதர்களை கண்ணியமாக நடத்துகிறேனா? சிந்திப்போம்

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download