குழந்தைகளைப் பராமரிப்பதன் மூலம் ஆண்டவருக்குச் சேவை செய்ய விரும்பும் பல இளைஞர்கள் உள்ளனர். ஒருமுறை ஒரு இறையியல் கல்லூரியில் ஒரு இளம் மாணவன் வந்து, அவனுக்கு வருங்காலங்களில் ஊழியத்தில் பல திட்டங்கள் இருப்பதாக கூறினான், அதற்கான நிதி தேவைகளைக் குறித்தும் அதற்கு உதவும் நபர்களை ஏற்பாடு செய்யவும் பேராசிரியரிடம் வினவினான். அது என்ன திட்டங்கள் என்றும் அவன் என்ன செய்ய விரும்புகிறான் என்பதையும் விளக்குமாறு பேராசிரியர் அந்த இளைஞனிடம் கேட்டார்.
அதற்கு அவன் சொன்னான்! அவன் குழந்தைகளை மிகவும் நேசிப்பதால் அனாதைகளுக்காக (குறைந்தது 25 குழந்தைகள்) குழந்தைகள் இல்லம் தொடங்க விரும்புவதாக தெரிவித்தான். பேராசிரியர் அவனது தரிசனம், பணி மற்றும் நோக்க உணர்வுக்காக அவனை வெகுவாக பாராட்டினார். பின்னர் அவனிடம் பேராசிரியர் கேட்டார், உண்மையில் அநாதையாக இருக்கும் குழந்தைகள் மீது கரிசனை உள்ளதா? என்று கேட்டார். அதற்கு அவன் "ஆம்" என்று கடுமையாக பதிலளித்தான். "நீங்கள் ஒரு திட்டத்தை பற்றி யோசிக்கிறீர்கள். அதற்கு தங்குமிடம், ஆலயம் மற்றும் வார்டன்களுக்கான தங்குமிடம் மற்றும் உங்களுக்காக ஒரு வீடு என நல்ல வளாகம் தேவைப்படும் அல்லவா. இதற்கு மிகப் பெரிய தொகை செலவாகுமே", என்றார் பேராசிரியர். அவன் ஆம் என்று யோசனையோடு தலையசைத்தான். பேராசிரியர் தொடர்ந்தார்; "நீங்கள் உண்மையில் குழந்தைகளுக்கு உதவ விரும்பினால், 25 கிறிஸ்தவ குடும்பங்களைக் கண்டுபிடித்து, ஒவ்வொரு குழந்தையையும் தத்தெடுக்க அவர்களுக்கு ஒரு தரிசனத்தை ஏற்படுத்துங்கள். ஒவ்வொரு குழந்தையும் ஒரு நிறுவனத்தின் செயற்கை சூழலுக்குப் பதிலாக ஒரு அழகான வீட்டில் இயல்பான குடும்பங்கள் போல வளரும். இந்த திட்டத்தை நீங்கள் ஒரு வருடத்தில் முடிக்கலாம் (ஒவ்வொரு மாதமும் இரண்டு குழந்தைகளை தத்தெடுக்கும் இரண்டு குடும்பங்கள்). இதை 20 வருடங்களில் நீங்கள் செய்தால் 500 குழந்தைகளுக்கு எளிதாக வீடு கொடுக்கலாம். அதாவது உங்கள் தரிசனம் 20 மடங்கு பெருகி, 20 திட்டங்களை நிறைவு செய்யும்”, என்றார் பேராசிரியர். அந்த இளைஞன் அதிர்ச்சியும் திகைப்பும் அடைந்தான். அவன் எவ்வித பதிலும் அளிக்கவில்லை. அநேகமாக அவனுக்கு கோபம் ஏற்பட்டிருக்கும். மேலும் எஸ்தர் மொர்தெகாயின் வளர்ப்பு மகள் என்பதை பேராசிரியர் நினைவூட்டினார், அவள் இஸ்ரவேல் தேசத்தை பாதுகாக்கும் ராணியாக ஆனாரே (எஸ்தர் 2: 5-7).
ஒரு குழந்தையை தத்தெடுத்து தங்கள் குழந்தையாக வளர்க்க விரும்பாத கிறிஸ்தவ தம்பதிகள் அநேகர் உள்ளனர். காலங்கள் போன பின்பு ஐயோ வாய்ப்பை இழந்து விட்டோமே, தற்போது வயதாகி விட்டதே என பரிதவிப்பதும் உண்டு, அதை உணரவே பல ஆண்டுகள் ஆகின்றது. காலங்காலமாக தவறான புரிதலாலும் மற்றும் கட்டுக்கதைகளாலும் இரத்த உறவுகளை மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியும் என்று நினைக்கிறார்கள் மற்றும் கைவிடப்பட்ட அல்லது அனாதைகள் அல்லது ஆதரவற்ற மக்களை தத்தெடுக்க விரும்புவதில்லை. தொற்றுநோய் காலங்களில், அநேக குழந்தைகளைத் தத்தெடுத்து கிறிஸ்துவின் அன்பை நிரூபிக்க முடியும். அனாதைகளை தத்தெடுத்து பராமரிப்பது உண்மையான தேவ பக்தி. "திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது" (யாக்கோபு 1:27).
நான் தேவ பக்திக்கான காரியங்களை பயிற்சி செய்கிறேனா?
Author : Rev. Dr. J. N. Manokaran