தாமதமான உணர்வு

குஜராத் மாநிலம் தபி மாவட்டத்தைச் சேர்ந்த கணேசும், ரஞ்சனா பத்வியும் திருமணம் செய்து கொள்ள விரும்பினர்.  ஆனால், இவர்களது திருமணத்திற்கு இரு வீட்டாரும் சம்மதிக்கவில்லை.  அவர்கள் எதிர்த்தார்கள், கடுமையான சொற்களால் திட்டினார்கள், அவமானப்படுத்தப்பட்டனர்.  இதனால் மனமுடைந்த இருவரும் பரிதாபமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.  ஒரு வருடம் கழித்து, அவர்களின் குடும்பத்தினர் தாங்கள் நடந்துக் கொண்டது தவறு என்றும் மற்றும் முட்டாள்தனமானது என உணர்ந்தனர். அவர்கள் செய்த தவறுக்கு கைமாறாக அல்லது தங்கள் குற்றமனசாட்சியை அமைதிப்படுத்தும் விதத்திலும் எதையாவது செய்ய விரும்பினர்.  சேர்ந்து வாழ அதிர்ஷ்டம் இல்லாத ஜோடியை இணைக்க குடும்பத்தினர் முடிவு செய்தனர். அவர்களைப் போல ஒத்த சிலைகள் செய்யப்பட்டன.  ஜனவரி 14ம் தேதி 2023 அன்று, அந்த ஜோடி சிலைக்கு திருமணம் முடித்தனர் (Zee news ஜனவரி 19, 2023).

 தெரிவு சுதந்திரம்:
 அடிப்படையில், இளைஞர்களுக்கு தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் வழங்கப்படவில்லை.  ஒரு நாட்டின் குடும்பம் அல்லது கலாச்சார நெறிமுறைகள் அல்லது சட்டங்கள் ஒரு நபருக்கு தேவன் கொடுத்த தேர்வு சுதந்திரத்தைப் பயன்படுத்துவதை இழக்கக்கூடும்.  தேவன் ஆதாமையும் ஏவாளையும் உருவாக்கினார், அவர்களை ஒரு சிறந்த சூழலில் வைத்து, அவர்களுக்கு தெரிவு செய்யும் சுதந்திரத்தை வழங்கினார்.  ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அவர்கள் தடைசெய்யப்பட்ட பழத்தைச் சாப்பிட்டதன் மூலம் தேவனுக்கு கீழ்ப்படியாதவர்கள் ஆனார்கள், தங்கள் சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தத் தெரிவு செய்தனர் (ஆதியாகமம் 3). ஒருவரின் கண்ணியத்தையோ சுதந்திரத்தையோ பறிக்க மனிதர்களுக்கு அதிகாரம் இல்லை.

விரக்தி:
அவர்களது திருமணத்திற்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், இளைஞர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.  இந்த உலகில் நிம்மதியான வாழ்க்கை வாழ்வதற்கான நம்பிக்கை அந்த ஜோடிகளுக்கு தெரியவில்லை.

தற்கொலை:
தேவன் எல்லாவற்றின் ஆக்கியோனும், வாழ்வின் ஆண்டவரும் ஆவார்.  ஒருவரின் உயிரையோ அல்லது இன்னொருவரின் உயிரையோ பறிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை.  பத்துக் கட்டளைகள் 'கொலை செய்யாதிருப்பாயாக' என  கற்பிக்கின்றதே (யாத்திராகமம் 20:13).

 குற்ற மனசாட்சி:
 ஒரு வருடம் கழித்து, உறவினர்கள் தங்கள் தவறை உணர்ந்தனர்.  எதிர்காலம், திறன்கள் மற்றும் கனவுகள் கொண்ட இரண்டு இளைஞர்களின் மரணத்திற்கு அவர்கள் காரணம்.  அவர்களின் மனசாட்சி அவர்களை வேதனைப்படுத்தியது.  "நான் அடக்கிவைத்தமட்டும், நித்தம் என் கதறுதலினாலே என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று" (சங்கீதம் 32:3) என்பதாக தாவீது ராஜா கூட எழுதுகிறான். 

வினோத சடங்கு நினைவகம்:
அவர்களின் மனசாட்சியை சரிபண்ணுவதற்காக, அவர்கள் இறந்த ஆண் மற்றும் பெண் சிலைகளை உருவாக்கி, மரபுகளின்படி சிலைகளுக்கு திருமணத்தை நடத்தினர்.  இது இஸ்ரவேலர்கள் தீர்க்கதரிசிகளைக் கொன்றது போன்றது, பின்னர் அவர்களுக்கு நினைவாக நினைவிடங்கள் கட்டப்பட்டன (லூக்கா 11:47). இது ஒரு பயனற்ற செயலாகும், ஆம், இறந்தவர்களுக்கு ஒருபோதும் நீதி வழங்க முடியாது.

 நான் நல்லதைச் செய்கிறேனா, மற்றும் சரியானது எதோ அதை செய்கிறேனா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download