நசரேய விரதம் ஒரு மறுபரிசீலனை

1980களின் பிற்பகுதியில், ஒரு இளம் மிஷனரியாக, புது டில்லியில் ஒரு வயதான மனிதரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர் உண்மையில் வாக்கிங் ஸ்டிக்கைப் பயன்படுத்தும் ஒரு முதியவராக இருந்தார் மற்றும் அவரது தலைமுடியை மறைக்கும் தலைப்பாகை வைத்திருந்தார். அவர் பொதுவாக ஆங்கில ஆராதனைகளிலே கலந்துகொள்வது வழக்கம்.  அந்த நபர் தான் எப்படி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சீஷரானார் என்று தனது சுவாரஸ்யமான அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.  “நான் ஒரு சீக்கியன் ஆனால் சத்தியத்திற்கான தேடலைக் கொண்டிருந்தேன். பின்னர் நான் ஒரு வேதாகமத்தை வாங்கி என் வீட்டில் வைத்திருந்து அநுதினமும் படிக்க ஆரம்பித்தேன்.  கர்த்தராகிய இயேசு கிறிஸ்துதான் உண்மையான நித்திய குரு, இரட்சகர் மற்றும் கடவுள் என்று நான் உறுதியாக நம்பினேன்.  பின்னர் நான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சீஷராக மாற முடிவு செய்தேன்.  எனவே, நான் சபைக்களுக்கு செல்ல ஆரம்பித்தேன், ஞானஸ்நானம் பெற விரும்பினேன்.  இருப்பினும், நான் எங்கு சென்றாலும் போதகர்கள் எனது நீண்ட தலைமுடியைக் கண்டவுடன் ஞானஸ்நானம் கொடுக்க மறுத்துவிட்டனர்.  தலைமுடியை வெட்டிவிட்டு ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் என்றார்கள். இது எனது கலாச்சார அடையாளம், நான் பிறந்ததிலிருந்து எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக முடி வெட்டவில்லை.  அதற்குப் பின்பதாக, ரோமன் கத்தோலிக்க பாதிரியாரை அணுகினேன்.  அவர் எனக்கு வேதாகமத்திலிருந்து ஒரு பகுதியைப் படித்தார், அது நசரேய விரதம் பற்றியது (எண்ணாகமம் 6:1-21). எனது கலாச்சார அடையாளத்தை தேவனுக்கு அர்ப்பணிப்பதாகவும் அதை மீண்டும் உருவாக்கும்படியும் (வடிவமைக்க) அவர் என்னிடம் கேட்டார்.  நான் அவ்வாறு செய்ய முடிவு செய்தேன், நான் முழுக்கு ஞானஸ்நானம் பெற்றேன்.

இருப்பினும், அவரது ஞானஸ்நானம் செல்லாது என்று கூறி, ஞானஸ்நானம் பெறுவதற்கான அவரது கோரிக்கையை நிராகரித்த வைராக்கியமான போதகர்கள் இருந்தனர்.  நீண்ட முடிகள் கொண்ட அவரது கலாச்சார அடையாளத்துடன் அவரை மீண்டும் ஞானஸ்நானம் செய்ய கூறினர்.  ஆனால் அவர் மறுத்துவிட்டார்.

பவுல் கொரிந்துவில் தங்கியிருந்து விட்டு அங்கிருந்து செல்லும் போது  பிரிஸ்கில்லா மற்றும் ஆக்கில்லாவுடன் தனது இரண்டாவது மிஷனரி பயணத்தை தொடர்ந்தார் (அப்போஸ்தலர் 18:18-21). அவர்கள் சீரியா தேசத்துக்குச் செல்ல கப்பலில் சென்றனர்.  பின்பு செசரியாவில், பவுல் ஒரு விரதம் மேற்கொண்டார்; ஒருவேளை அது நசரேய விரதமாக இருக்கலாம் (எண்ணாகமம் 6). அவர் தனது தலைமுடியை வெட்டினார், இப்போது புதிய முடி வளரும்.  பின்னர் அவர் எருசலேம் ஆலயத்தில் விரதத்தை நிறைவேற்றுவார்.  பவுல் இந்த யூத நடைமுறையை ஆண்டவருக்காக அர்ப்பணித்தார்.

ஒவ்வொரு கலாச்சாரத்திலும் சில கலாச்சார நடைமுறைகள் உள்ளன, அவை நம் தேவனுக்காக மறுவடிவமைக்கப்பட்டு அர்ப்பணிக்கப்படலாம்.

 நான் எனது கலாச்சார நடைமுறைகளை மீண்டும் வடிவமைத்து தேவனுக்காக அர்ப்பணிக்கிறேனா?

 Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download