உயிர் காக்கும் சேவையா அல்லது உயிரைப் பறிக்கும் தொழிலா?

ராஜஸ்தான் மாநிலம் துங்கர்பூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மருத்துவம் படிக்கும் மாணவி, கடும் வெயிலுக்கு மத்தியில் 300-க்கும் மேற்பட்ட தண்டால் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.  இதனால் மாணவியின் சிறுநீரக செயல்பாடு பாதிக்கப்பட்டு டயாலிசிஸ் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.  இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் ஏழு பேர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது (தி எகனாமிக் டைம்ஸ்,  ஜூன் 27, 2024). மருத்துவ வல்லுநர்கள், நோய்வாய்ப்பட்டவர்களை மரணத்தின் பிடியிலிருந்து காப்பாற்றும் தேவதூதர்களைப் போலக் கருதப்படுகிறார்கள். இருப்பினும், மருத்துவ வல்லுநர்களாக ஆவதற்குத் தயாராகும் மாணவர்கள் கிட்டத்தட்ட ஒரு நபரின் உயிரைப் பறித்து அவரை நிரந்தரமாக காயப்படுத்தினர். 

ஈனச்செயல்:  
கடைசி நாட்களில், மக்கள் கொடூரமானவர்களாக, இதயமற்றவர்களாக, இரக்கமற்றவர்களாக இருப்பார்கள் (2 தீமோத்தேயு 3:1-5) என வேதாகமம் போதிக்கிறது. உன்னை நேசிப்பது போல பிறனையும் நேசி என்று வீடுகளிலோ அல்லது கல்விக் கூடங்களிலோ கற்பிக்கப்படவில்லை போலும் (மத்தேயு 22:37-38). மாறாக, பொறாமையும் வெறுப்பும் மக்களின் மனதை ஆள்கின்றன.  இந்த உள்நோக்கிய இருள் வெளிப்புற அசாதாரண நடத்தையில் வெளிப்படுகிறது. 

கொடுமையில் இன்பம்: 
சில குழந்தைகள் உடன்பிறந்தவர்களையோ அல்லது பள்ளித் தோழர்களையோ துன்புறுத்தும்போது குறும்புத்தனமான மகிழ்ச்சியுடன் வளர்கின்றனர். இதை பெற்றோர்களும் ஆசிரியர்களும் கண்டிக்காவிட்டால் வாழ்நாள் முழுவதும் தொடரும்.  அத்தகைய இளைஞர்கள் கொடுமைப்படுத்துபவர்களாகவும், திருமணமானால் மனைவி மற்றும் குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்பவர்களாகவும் மாறுகிறார்கள், நாம் கண்டுகொள்ளாமல் விட்டால் அழவைத்து மகிழ்பவர்களாக மாறுவார்கள். 

நோய்வாய்ப்பட்ட மனநிலை: 
‘என்னை அடிச்சாங்க’, ‘என்னையும் கொடுமைபடுத்தினாங்க’, ‘நானும் காயப்பட்டேன்’,  அதனால் நானும் மற்றவர்களை காயப்படுத்துவேன் என்பதான மனநிலை. அவர்கள் பகடிவதை (ragging) தீங்கினால் பாதிக்கப்பட்டவர்கள், நீதிக்காக போராடுவதற்கும், அவர்களை துன்புறுத்தியவர்களுக்கு பாடம் கற்பிப்பதற்கும் பதிலாக, அவர்களின் கோபம் புதிய நபர்கள் மீது, மற்றும் பலியாட்கள் மீது திரும்புகிறது. இந்நிலையில், மருத்துவப் படிப்பில் புதிதாக சேருபவர்களுக்கு,  மன்னிக்கவும், மற்றவர்களிடம் இரக்கம் காட்டவும் ஆவிக்குரிய பலம் இல்லாததால், அவர்கள் பயங்கரமான வேதனையாளர்களாக மாறுகிறார்கள். 

அலட்சியமான நிறுவனங்கள்:  
மாணவர்களுக்கு நீதி, உண்மை, அன்பு, கண்ணியமான நடத்தை, இரக்கம் காட்டுதல், உதவிக் கரம் நீட்டுதல் போன்றவற்றில் மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கும் ஆர்வமும் திறனும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு இல்லை. வகுப்பு நேரத்திற்குப் பிறகு மாணவர்களின் வாழ்க்கை மற்றும் நடத்தை ஆகியவற்றைப் பற்றி கல்வி நிறுவனங்களுக்கு கவலை இல்லை.   மாணவர்களை நெறிப்படுத்தவும் வழிகாட்டவும் பேராசிரியர்கள் தங்களின் தார்மீக அதிகாரத்தையும் சட்ட அதிகாரத்தையும் பயன்படுத்துவதில்லை.  இப்படி ஏதேனும் சங்கதி நடந்தால் மட்டுமே, அவர்கள் ஊடக நாட்டாமை செய்ய முயற்சிக்கிறார்கள், ஆனால் நிறுவனத்தில் எவ்வித மாற்றத்தையும் காண முடியவில்லை. 

தூங்கும் சமூகம்:  
துரதிர்ஷ்டவசமாக, பகடிவதை (ragging) சமூகத்தில் ஒரு விதிமுறையாகக் கருதப்படுகிறது, மேலும் அது மௌனமாக அங்கீகரிக்கப்படுகிறது.   பிற்காலத்தில் இந்த முரடர்கள் சமூக மற்றும் அரசியல் அதிகாரத்தைப் பெறுவார்கள், அது எந்த நாகரீக தேசத்திற்கும் ஆபத்தானது.

என் வாழ்வில் ஆதிக்கம் செலுத்துகிறது அன்பா? வம்பா? 

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download