மோசேயின் பிரமாணம் "தீமைசெய்ய திரளானபேர்களைப் பின்பற்றாதிருப்பாயாக; வழக்கிலே நியாயத்தைப் புரட்ட மிகுதியானவர்களின் பட்சத்தில் சாய்ந்து, உத்தரவு சொல்லாதிருப்பாயாக" (யாத்திராகமம் 23:2) என தெளிவாக எச்சரிக்கிறது. குழு இயக்கவியல் மற்றும் வெகுஜன வெறி கும்பலில் செயல்படுகின்றன.
பொதுவாக, உண்மை கண்டறியப்படுவதற்கு முன்பே சேதம் ஏற்படுத்தப் படுகிறது. தந்திரமான அரசியல்வாதிகள் உட்பட புத்திசாலித்தனமான நபர்கள் இத்தகைய குழுக்களை தங்கள் நலனுக்காக கையாளுகிறார்கள்.
எபேசுவில், சொந்த தொழில் வணிகர்களால் ஒரு கூட்டம் திரட்டப்பட்டது; அவர்கள் இரண்டு மணி நேரம் கோஷங்களை எழுப்பினர், ஆனால் அவர்கள் ஏன் அங்கு கூடியிருந்தனர் என்று தெரியவில்லை. "கூட்டத்தில் அமளியுண்டாகி, சிலர் இப்படியும் சிலர் அப்படியுமாகப் பேசினார்கள்; தாங்கள் கூடிவந்த காரணம் இன்னதென்று அநேகருக்குத் தெரியாதிருந்தது" (அப்போஸ்தலர் 19:32). கும்பல்களின் இந்த துரதிர்ஷ்டவசமான வாழ்க்கை பயணத்தில் நான்கு படிகள் உள்ளன, இது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு எதிராக கூச்சலிட்ட திரளான கூட்டத்தை நினைவூட்டுகிறது (லூக்கா 23:18-21).
எளிமையானது:
எது உண்மை என்பதை அவர்களால் கண்டறிய (பகுத்தறிய) முடியவில்லை. துரதிர்ஷ்டவசமாக, சத்தமாக சொல்லுபவர்கள் அறிவாளிகள், நம்பகமானவர்கள் மற்றும் அதிகாரம் உள்ளவர்கள் என்று அவர்கள் நினைக்கிறார்கள். துன்மார்க்கர்கள் மற்றும் தீய தலைவர்கள் நல்ல புத்திசாலிகள், எப்படியெனில் அவர்கள் கண்ணோட்டத்தில் எது உண்மையோ அந்த பொய்யை நம்பும்படி மற்றவர்களுக்கு எடுத்துரைக்கிறார்கள்.
முட்டாள்:
பொய்ப் பிரச்சாரங்களை நம்பத் தொடங்குகிறார்கள். அவர்கள் கட்டுக்கதைகள், அரைகுறை உண்மைகள், புனைவுகள் மற்றும் சோதிட குறிப்புகள் என நம்புகிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் மற்ற சத்தங்களைக் (உண்மையை) கேட்க மாட்டார்கள். இதனால், எளியவர்கள் முட்டாளாகிறார்கள். யூத மதத்தின் தலைமைக் குருக்களும் மற்ற மதத் தலைவர்களும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு எதிராகப் பொய்களை ஜனங்களிடம் புகுத்தினார்கள்.
பிடிவாதம்:
அவர்கள் தங்கள் தவறான நம்பிக்கையில் வேரூன்றி இருக்க விரும்புகிறார்கள் மற்றும் அவர்களின் நம்பிக்கைக்கு முரணான எதையும் கேட்க விரும்பவில்லை. சத்தமாகவும் வன்முறையாகவும், அவர்கள் சொல்வது சரிதான் என்று அறிவிக்கிறார்கள். இந்த எளியவர்களும் முட்டாள்தனமாக இப்போது பிடிவாதமாகிவிட்டனர். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்திற்காக கூட்டம் போராடியது(கத்தினார்கள்). ஆக அவர்களின் தவறான தேர்வு பரபாஸ். ஆம்; அவர்கள் வெறுப்பைத் தேர்ந்தெடுத்தனர், அன்பை அல்ல; சட்டத்திற்குப் பதிலாக அக்கிரமம்; அமைதிக்குப் பதிலாக வன்முறை, கசப்பு மற்றும் பழிவாங்குதல்.
தந்திர ஆயுதம்:
சில சூழ்ச்சியாளர் அல்லது வியாபாரிகளின் கைகளில் அவை மூலோபாய ஆயுதங்களாக மாறும். கும்பல் சூழ்ச்சியாளர்களுக்கு வன்முறைக் கருவியாக மாறலாம். பல சர்வாதிகாரிகள் வெகுஜன வெறியைத் தூண்டிவிட்டு, பகுத்தறிவற்ற வன்முறையின் தீய நோக்கங்களுக்காக தங்கள் ஆற்றலைச் செலுத்தியுள்ளனர். "நீங்கள் உங்கள் அவயவங்களை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடாமல், உங்களை மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, உங்கள் அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள்" (ரோமர் 6:13).
அடங்காத கூட்டத்தைப் பின்தொடர்வதில் எனக்கும் முட்டாள்தனமும் பிடிவாதமும் உள்ளதா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்