ஒரு பார்வையற்ற காவலாளி

ஒரு வங்கியில், இரவு நேர காவலுக்காக ஒருவரை நியமித்தனர்.   ஆனால் கண்புரை காரணமாக அவருக்கு சரியாகப் பார்க்க முடியவில்லை. ஒருநாள் இரவில் கொள்ளையர்கள் வந்தனர், அங்கு ஒரு ஆபத்து நிகழப்போகிறது என்பதை உணர்ந்தார். அவர் அவர்களை பயமுறுத்துவதற்காக டார்ச்சை இயக்கினார், ஆனால் அந்த டார்ச் வெளிச்சம் கொள்ளையர்களுக்கு தெளிவாக பார்க்கவும் இன்னும் சரியாக இயக்கவும் உதவியது. பார்வையற்ற காவலாளனை மறித்து கொள்ளையர்கள் வங்கியை சூறையாடினர்.  ஏசாயா தீர்க்கதரிசி இஸ்ரவேலின் தலைவர்களைக் கண்டனம் செய்தார், அதாவது அவர்கள் குறைபாடுகள், உக்கிராணத்துவம் இல்லாமை,  மூடநம்பிக்கை, சோம்பேறித்தனம், நித்திரை இன்பம் மற்றும் பாவங்களுக்கு காவலர்களாக இருப்பதைக் குறித்து கண்டித்தார் (ஏசாயா 56:10-12). கர்த்தருடைய எல்லா சீஷர்களும் காவலாளிகளே, தங்களின், குடும்பம், நண்பர்கள், சக விசுவாசிகள், சமூகம் மற்றும் தேசத்தை கவனித்துக்கொள்கிறார்கள். 

குருட்டு:  
ஒரு காவலாளிக்கு கூர்மையான பார்வை இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இந்த தலைவர்கள் பார்வையற்றவர்களாக இருந்தனர்.   அவர்கள் சாத்தானை தங்கள் பார்வையை மழுங்கடிக்க அனுமதித்தார்கள், அவர்களால் மக்களை நீதியின் பாதையில் நடத்த முடியாது. 

அறியாமை:  
அவர்கள் தேவனையோ அவருடைய பிரமாணங்களையோ அறியாத ஆவிக்குரிய அறிவற்றவர்களாக இருந்தனர்.  கர்த்தரை நேசிப்பவர்கள், அவருடைய விருப்பத்தை அல்லது சித்தத்தை அறிந்து அதன்படி வாழ்வார்கள்.

தூக்கம்: 
விழிப்புடன் இருப்பதற்குப் பதிலாக, அவர்கள் படுத்துக்கொண்டு, இனிமையான கனவுகளுடன் ஆழ்ந்த உறக்கத்தை விரும்பினர். காவலாளியாக, அவர்கள் ஆபத்திலும் இருளிலும் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.  அவர்கள் பலரை  தவறாக அல்லவா வழி நடத்துவார்கள்.   

ஊமையான நாய்கள்: 
வரவிருக்கும் ஆபத்தை எச்சரிக்கவும், அத்தகைய தாக்குதல்களை எதிர்கொள்ள மக்களை தயார்படுத்தவும் கண்காணிப்பு கோபுரத்தின் உச்சியில் காவலாளி இருக்க வேண்டும்.  இருப்பினும், இஸ்ரவேலின் தலைவர்கள் குரைக்க முடியாத ஊமை நாய்களாக இருந்தனர்.   ஒருவேளை, அவர்கள் ஆபத்தை பார்த்தார்கள் ஆனால் மக்களுக்கு தெரிவிக்கவில்லை. 

பேராசை நாய்கள்:  
தலைவர்கள் பேராசை பிடித்த நாய்களைப் போன்றவர்கள், அவர்களுக்கு போதும் என்ற திருப்தியான மனதே இல்லை என்று ஏசாயா அறிவித்தார்.  தெய்வபக்தியும் மனநிறைவும் இல்லாமல், அவர்கள்  அழிந்துபோகும் உலக செல்வத்தைப் பின்தொடர்ந்து பொருள்முதல்வாதிகளாக இருந்தனர்.

சுய லாபம்:  
செல்வம், புகழ், அதிகாரம், பதவி ஆகியவற்றின் தனிப்பட்ட ஆதாயமே அவர்களின் இலக்குகளாக இருந்தன.  அவர்கள் தங்கள் சொந்த குடும்பத்தை வளர்த்துக் கொண்டனர் மற்றும் சமூகத்தில் மற்றவர்களைப் புறக்கணித்தனர்.  மக்கள் நலன், யாருக்காக பொறுப்பேற்றார்களோ அவர்களை மறந்துவிட்டார்கள்.

குடி: 
இந்தத் தலைவர்கள் மது அருந்தி, போதையில் மூழ்கி, சிறந்த எதிர்காலத்தைக் கனவு காண்பதில் ஆர்வம் காட்டினர்.  அவர்கள் செல்வாக்கு, அதிகாரம் மற்றும் ஆடம்பரமான செழிப்புடன் கூட குடிபோதையில் இருந்தனர்.  

நான் நிதானமான, விழிப்புடனான, புத்திசாலித்தனமான மற்றும் செயலூக்கமுள்ள காவலாளியாக இருக்கிறேனா? சிந்திப்போம். 

 Author: Rev. Dr. J .N. மனோகரன்

 



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download