ஒரு அரசியல்வாதிக்கு நாட்டின் ஜனாதிபதி பதவி வழங்கப்பட்டது. அவர் பணிவாக மறுத்துவிட்டார்; "எனக்கான அளவு என்ன என்று எனக்குத் தெரியும்" என்றார். இது சரீர அளவைப் பற்றியது அல்ல, ஆனால் அவரது அந்தஸ்து மற்றும் அழைப்பு பற்றி இருக்கலாம். உச்சியை அடைய நினைப்பவர்கள், நேர்மையான அல்லது நேர்மையற்ற முறையில் உச்சியை அடைய விரும்புகிறார்கள். யோவான் ஸ்நானகனை நாம் எடுத்துக் கொண்டேமேயானால், தான் யார், தான் யார் அல்ல என்பதில் மிகத் தெளிவாக இருந்தான் (யோவான் 1:20-23). அது மாத்திரமல்ல தான் கிறிஸ்து அல்ல என்றும் மறுதலியாமல் அறிக்கையிட்டான். ஆனால், தான் வனாந்தரத்தில் கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன் என்றான்.
நான் யார்:
சிந்திக்கும் மனிதனைத் தொந்தரவு செய்யும் கேள்வியா இது? ஒரு இளம் தந்தை தனது மகனுக்குத் தமிழ் மொழியில் தாலாட்டுப் பாடுகிறார்: “ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ? நான் பிறந்த காரணத்தை
நானே அறியும் முன்னே
நீயும் வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே". ஆம், பலரும் தாங்கள் யார் என்று தெரியாமலே மரண தருவாயிற்கே வந்து விடுகிறர்கள்!
நான் யார் இல்லை:
அவர்கள் யார் என்று மக்களுக்குத் தெரியாதபோது, நமது கலாச்சாரம்/குடும்பம்/சமூகம் என அவர்களுக்கு எதை கூறுகிறார்களோ அதையே அவர்களும் கருதுகிறார்கள், அது உண்மையா? ரெகொபெயாமைப் போன்ற திறமையற்ற நபர் சாலொமோனுக்குப் பிறகு ராஜாவாக முடியும். யெப்தாவின் தாய் ஒரு பரஸ்திரீ, அவன் சமூகத்தால் கேலி செய்யப்பட்டான். அவன் சில உதவாத நண்பர்களைக் கூட்டி அவர்களின் தலைவரானான். இஸ்ரவேலின் மூப்பர்கள் அவனுக்கு தலைமை தாங்கினார்கள் (நியாயாதிபதிகள் 11:1-11).
அடையாளம் மற்றும் கண்ணியம்:
சிருஷ்டிகரான தேவனோடு சரியான உறவுக்கு வரும்போதுதான் ஒரு நபர் தான் யார் என்பதை உணர முடியும். ஒருவன் பாவத்திலிருந்து மனந்திரும்பி, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தன்னுடைய பாவங்களுக்காக சிலுவையில் மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார் என்பதை ஏற்றுக்கொண்டால் அந்நபர் தேவனின் பிள்ளையாக மாறுகிறார்கள் (யோவான் 1:12). இது ஒரு நபருக்கு உண்மையான அடையாளத்தையும் கண்ணியத்தையும் தருகிறது.
அர்த்தமும் நோக்கமும்:
பவுல் விவரிப்பது போல் உலகில் இரண்டு தெரிவுகள் உள்ளன, மூன்றாவது தெரிவு என்று ஒன்று இல்லவே இல்லை. ஒரு நபர் பாவம் மற்றும் சாத்தானால் ஆதிக்கம் செலுத்தப்படலாம், அப்படி ஆகும்போது அந்நபர் அநீதியின் கருவியாக மாறுகிறார்கள். மாறாக, தேவனிடம் தங்களை அர்ப்பணிக்கும் போது, அந்த நபர் தேவனால் பயன்படுத்தப்படும் நீதியின் கருவியாக மாறுவதைத் தேர்ந்தெடுக்கிறார் (ரோமர் 6:12-14). உலகில் உள்ள மக்கள் நம்மைப் பயன்படுத்தவும், நம்மை ஒன்றுமில்லாமல் செய்து அப்புறப்படுத்தவும்/அழிக்கவும் விரும்புகிறார்கள். ஆனால், தேவன் ஒருவரைப் பயன்படுத்தும்போது, அது ஒரு மகிமையான அனுபவம் என்பதை உணர்வோம்.
கிறிஸ்துவில் எனக்கு அடையாளமும், அர்த்தமும், நோக்கமும் உள்ளதா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்