பெரும்பாலான திருவிழாக்கள் விருந்துகளை முக்கிய அம்சமாக கொண்டுள்ளன. அனைத்து கொண்டாட்டங்களும் நல்ல உணவுடன் நிறைவடையும். இப்போதெல்லாம் துக்க நிகழ்வுகள் கூட விருந்துடன் முடிக்கப்படுகின்றன, அதனால் பாதிக்கப்பட்டவர்கள் சோகமாக இருக்கக்கூடாது. விருந்துகளின் போது சில தவறான நிர்வாகத்தினாலும் அல்லது சண்டைகளினாலும் விருந்து கசப்புடன் முடிவடையும். ஆனால் தாவீது கூறுகிறார்; “அவர்களுக்குத் தானியமும் திராட்சரசமும் பெருகியிருக்கிற காலத்தின் சந்தோஷத்தைப்பார்க்கிலும், அதிக சந்தோஷத்தை என் இருதயத்தில் தந்தீர்” (சங்கீதம் 4:7). அதாவது விருந்து மற்றும் பண்டிகை காலங்களில் மட்டும் அவர் மகிழ்ச்சியில் திளைக்கவில்லை; அது அவரது வாழ்வில் நிரந்தர அம்சமாக இருந்தது என்பது அதன் அர்த்தம்.
தேவனுடைய ராஜ்யம்:
தேவனுடைய ராஜ்யம் சாப்பிடுவதும் குடிப்பதும் அல்ல, அதாவது விருந்தில் அல்ல என்பதாக பவுல் எழுதுகிறார். பண்டைய மன்னர்கள் ஆறு மாதங்கள் கூட நீடிக்கும் விருந்துகளை கொண்டாடியது எதை குறிக்கிறது என்றால், உலக ராஜ்யத்திற்கு அவர்கள் அளித்த முன்னுரிமையைக் காட்டுகிறது (எஸ்தர் 1:4-5). முதலாவது, பரிசுத்த தேவனுக்கு முன்பாக நிற்க கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் அருளப்பட்ட நீதி. இந்த நீதியான நிலை ஒரு நபரை பரிசுத்தமான மற்றும் நீதியான வாழ்க்கையை நடத்த தூண்டுகிறது. அவர்கள் சரியான முன்னுரிமைகளைக் கொண்டிருப்பதால் அவர்கள் தேவனால் ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள் மற்றும் மக்களால் அங்கீகரிக்கப்படுகிறார்கள். இரண்டாவது , இரட்சிப்பின் இந்த உறுதி, தேவன் முன் கிடைத்த அங்கீகாரம் (அந்தஸ்து) விசுவாசிக்கு அமைதியை அளிக்கிறது. மனதில் சந்தேகமோ குற்ற உணர்ச்சியோ குழப்பமோ ஆளுகை செய்வது அல்ல, ஆனால் மனித புரிதலுக்கு அப்பாற்பட்ட சமாதானம் கிடைக்கிறது. மூன்றாவது, நீதி மற்றும் சமாதானத்தின் இயல்பான விளைவாக, பரிசுத்த ஆவியில் ஒரு அளவுகடந்த அமைதலான ஒரு மகிழ்ச்சி சந்தோஷம் எப்போதும் இருக்கிறது (ரோமர் 14:17-20).
மனதில் மகிழ்ச்சி:
தாவீது தனது வாழ்க்கையில் பல குழப்பங்களை சந்தித்தார். ஆனாலும், அவர் உள்ளத்தில் மகிழ்ச்சியை அனுபவித்தார். கொண்டாட்டம், உணவு மற்றும் திராட்சை மது ஆகியவற்றில் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்கும் தேவபக்தியற்ற மக்களைப் போலல்லாமல், தேவபக்தியுள்ள தாவீது தனது இருதயத்தில் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார். இது தாவீதுக்கும் அனைத்து விசுவாசிகளுக்கும் தேவன் கொடுத்த மாபெரும் பரிசு. இதனால் தான் சிறையிலிருந்து பிலிப்பி பட்டணத்திலுள்ள விசுவாசிகளிடம் பவுல் தைரியமாகச் சொல்ல முடிந்தது; “கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்” (பிலிப்பியர் 4:4). ஆம், கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிப்போம்.
தூக்கமும் பாதுகாப்பும்:
தேவனின் முகம் தாவீதின் மீது நன்மைக்காக ஒளிர்கிறது. இந்த மகிழ்ச்சியின் காரணமாக, அவர் இனிமையான மற்றும் ஆழ்ந்த தூக்கத்தை அனுபவிக்கிறார். அவர் படுக்கையில் தூக்கமின்றி புரண்டு புரண்டு படுப்பது என்பது அரிது. தேவனின் பாதுகாப்பு மற்றும் அவரது இதயத்தில் மகிழ்ச்சியின் உறுதி அவருக்கு நன்றாக தூங்க உதவியது (சங்கீதம் 4:7-8). நம்மைக் கவனித்துக்கொள்ளும் கர்த்தர் உறங்குவதுமில்லை, தூங்குவதுமில்லையே (சங்கீதம் 121:4).
எனக்கு மிகுந்த மகிழ்ச்சி உண்டா? நான் கர்த்தருக்குள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறேனா? சிந்திப்போம்.
Author: Rev. Dr. J .N. மனோகரன்