மந்தை மீது சிந்தை

1. மந்தைக்கு மாதிரியாக இருங்கள்
1பேதுரு 5:1-4  தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாய மாய் அல்ல, மனப்பூர்வமாயும்... உற்சாக மனதோடும், மந்தைக்கு மாதிரிகளாகவும் கண்காணிப்பு செய்யுங்கள்.
1தீமோத்தேயு 4:12 விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு.
1பேதுரு 2:21 அடிச்சுவடுகளைப் பின்பற்ற மாதிரியைக் காண்பித்தார். 

2. மந்தைக்கு எச்சரிக்கையாக இருங்கள்
அப்போஸ்தலர் 20:28-30 தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்

3. மந்தைக்குக் காவலாக இருங்கள்
யோவான் 10:1-5 (1-16) ஆட்டுத்தொழுவத்துக்குள் வேறுவழியாய் ஏறுகி றவன் கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறான். வாசல் வழியாய்ப் பிரவேசிக்கிறவனோ ஆடுகளின் மேய்ப்பனாயிருக்கிறான். 
எசேக்கியேல் 34:1-17 மந்தையை விசாரிக்கவேண்டும், மடக்கவேண்டும், மேய்க்கவேண்டும், திடப்படுத்தவேண்டும், நியாயந்தீர்க்கவேண்டும்.   

4. மந்தையின்மேல் கவனமாக இருங்கள்
நீதிமொழிகள் 27:23 உன் ஆடுகளின் நிலைமையை நன்றாய் அறிந்து கொள்; உன் மந்தைகளின்மேல் கவனமாயிரு.
ஏசாயா 40:11 மேய்ப்பனைப்போல தமது மந்தையை மேய்ப்பார்; ஆட்டுக் குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து, தமது மடியிலே சுமந்து, கறவலாடுகளை மெதுவாய் நடத்துவார் ஏசாயா 31:10; எசேக்கியேல் 34:12

5. மந்தையைக் கைவிடாமல் இருங்கள்
சகரியா 11:17 மந்தையைக் கைவிடுகிற அபத்தமான மேய்ப்பனுக்கு ஐயோ! பட்டயம் அவன் புயத்தின்மேலும் அவன் வலது கண்ணின்மேலும் வரும்; அவன் புயமுழுவதும் சூம்பிப்போகும்; அவன் வலது கண் முற்றிலும் இருள் அடையும் என்றார்.  
எரேமியா 10:21 மேய்ப்பர்கள் மிருககுணமுள்ளவர்களாகி, கர்த்தரைத் தேடாமற்போனார்கள்; அவர்கள் மந்தையெல்லாம் சிதறடிக்கப்பட்டது.

Author: Rev. M. Arul Doss .



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download