சில ஐடி நிறுவனங்கள் சில ஊழியர்களின் சேவையை நிறுத்தியுள்ளன. காரணம் அவர்கள் ரகசியமாக Moonlighting செய்து கொண்டிருந்தார்கள். Moonlighting என்ற சொல்லுக்கு முதன்மை வேலையைத் தவிர, முதலாளிக்குத் தெரியாமல் மற்றொரு வேலையை மேற்கொள்வது என்று பொருள். சந்தையில் போட்டியின் காரணமாக ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேலைகள் நடைபெறும். ஆனால் இரண்டு நிறுவனங்களுக்கு சேவை செய்ய முடியாது என்று ஐடி நிறுவன அதிபர்கள் தெளிவாக கூறிவிட்டனர். இயேசுவும் தம் சீஷர்களிடம் "எந்த ஊழியக்காரனும் இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்யக்கூடாது; ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான், அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைபண்ணுவான். தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களாலே கூடாது" (லூக்கா 16:13) என்று கூறியுள்ளார்.
வேடமிட்ட சாத்தான்
உலகில் சாத்தான் தந்திரமாக செயல்படுகிறான். அவன் தன்னை தேவனுக்கு மாற்றாக காட்டவில்லை. அவன் உலகில் உள்ள மற்றபிற விஷயங்களைப் பயன்படுத்துகிறான், மேலும் அதற்கு பின்னால் ஒளிந்து கொள்கிறான். அதாவது பணம் அல்லது செல்வம் அவனுக்கு மிகவும் பிடித்த ஒன்று. அவன் அத்தகைய வடிவங்களில் தன்னை வெளிப்படுத்துகிறான். மக்களுக்கு தெரிவு செய்ய இடம் கொடுத்தால், அவர்கள் பெரும்பாலும் தவறான தெரிவையே செய்கிறார்கள். "பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்" (1 தீமோத்தேயு 6:10).
இருவரிடமும் உண்மையாகவா?
ஒரே நேரத்தில் இருவரிடமும் விசுவாசமாகவோ அல்லது அர்ப்பணிப்புடன் இருக்க முடியாது. உயர்ந்த விசுவாசத்தின் படி முன்னுரிமைகள் தீர்மானிக்கப்படுகின்றன. இரண்டு போட்டியிடும் நிறுவனங்களுக்கு இடையே முன்னுரிமைகள் அல்லது நேரம் அல்லது ஆற்றலைப் பிரிப்பது சாத்தியமில்லை. ஒரு சீஷன் தேவ ராஜ்யத்தை தனது முன்னுரிமையாகக் கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது (மத்தேயு 6:33).
அன்பும் வெறுப்பும்
இரண்டு எஜமானர்களுக்கு சேவை செய்யும் முயற்சி, பேரழிவில் முடிகிறது. அந்த நபர் ஒருவரை நேசிப்பதும் மற்றொருவரை வெறுப்பதும் என முடிவடையும். இருவரையும் மகிழ்விக்க விரும்பி, இருவருக்குமே நியாயம் செய்ய முடியவில்லை. எனவே, ஒருவரை நேசிப்பதும் மற்றவரை வெறுப்பதுமாக முடிவடையும். இச்சூழலில் செல்வத்தை நேசிப்பது இயல்பான தெரிவு ஆக இருக்கிறது, இதன் விளைவாக அது உடனடியாகத் தோன்றி மனநிறைவை அளிக்கிறது.
சேவை
வேலை செய்வது என்பது சுதந்திரமாக அல்லது கொடுங்கோன்மையாகவும் இருக்கலாம். தேவனை அறிந்து சேவிப்பது அல்லது பணி செய்வது உண்மையான சுதந்திரம். ஆனால் பணத்திற்காக வேலை செய்வது என்பது கொடுங்கோன்மை, அடக்குமுறை மற்றும் சுரண்டலின் கீழ் இருக்க வேண்டும். செல்வம் அல்லது காசு பணம் போல் மாறுவேடமிட்டு இருக்கும் சாத்தானுக்கு சேவை செய்வது என்பது நித்திய மரணம் அல்லது இரண்டாவது மரணம், அதாவது நரகத்தைத் தெரிவு செய்வதாகும்.
ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனமே தனது தொழிலாளர்களை இரண்டு நிறுவனங்களுக்குச் சேவை செய்ய அனுமதிக்க முடியாது என்றால், தேவன் எப்படித் தம் மக்களை தன்னையும் சாத்தானையும் சேவிக்க அனுமதிப்பார்?
நான் தேவனுக்கு சேவை செய்கிறேனா அல்லது செல்வத்தை சேவிக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்