நீதிமொழிகள் 2:6 கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும்.
1கொரிந்தியர் 1:24,31 எவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களுக்குக் கிறிஸ்து தேவபெலனும் தேவஞானமுமாயிருக்கிறார்.
ஏசாயா 11:2 ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவியானவர் அவர்மேல் தங்கியிருப்பார்.
1. பயப்படுகிறவனுக்குத் தருகிறார்
யோபு 28:28 இதோ, ஆண்டவருக்குப் பயப்படுவதே ஞானம்; பொல்லாப்பை விட்டு விலகுவதே புத்தி என்றார்
சங்கீதம் 110:10; நீதிமொழிகள் 1:7; நீதிமொழிகள் 9:10; நீதிமொழி கள் 15:33 கர்த்தருக்குப் பயப்படுவதே ஞானத்தின் ஆரம்பம்.
2. நல்லவனுக்குத் தருகிறார்
பிரசங்கி 2:16 தேவன் தமது பார்வைக்கு நல்லவனாயிருக்கிறவனுக்கு ஞானத்தையும் அறிவையும் இன்பத்தையும் அளிக்கிறார்
3. நீதிமானுக்குத் தருகிறார்
நீதிமொழிகள் 2:7 அவர் நீதிமான்களுக்கென்று மெய்ஞானத்தை வைத்து வைத்திருக்கிறார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு அவர் கேடகமா யிருக்கிறார்.
4. கேட்கிறவனுக்குத் தருகிறார்
யாக்கோபு 1:5 உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ள வனாயி ருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்.
இவர்களுக்கு ஞானம் தந்தார்
ஆதியாகமம் 41:39(33-39) யோசேப்பின் ஞானம்
யாத்திராகமம் 35:33(30-33) பெசலேயேலின் ஞானம்
ஆதியாகமம் 41:39(33-39) யோசேப்பின் ஞானம்
தானியேல் 5:11,14 தானியேலின் ஞானம்
Author: Rev. M. Arul Doss