மையமான சிலுவை

சிலுவை உலகம் மற்றும் மனிதகுலத்தின் மையம்.  இந்த சத்தியத்தைப் பற்றி சிந்திக்கவும் தியானிக்கவும் புனித வெள்ளி சரியான நேரம்.

1) மனிதகுலத்தின் வரலாறு:
சிலுவை மனிதகுல வரலாற்றைப் பிரிக்கிறது. அவருடைய மரணம் மற்றும் உயிர்த்தெழுதலுக்கு முன்பு இருந்த அனைத்தும் பழைய உடன்படிக்கை காலத்திற்கு சொந்தமானது மற்றும் அதற்குப் பின் உள்ளவை அனைத்தும் புதிய உடன்படிக்கை.

2) மனிதகுலத்தின் மத்தியில்:
உண்மையில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து யூதர்கள் (மதத் தலைவர்கள் உட்பட பரிசேயர்கள் மற்றும் பிறர்) மத்தியில் சிலுவையில் அறையப்பட்டார், சிரேனே ஊரைச் சேர்ந்த ஆப்பிரிக்க ஜனங்கள், ரோமானிய வீரர்கள்;  ஆண்கள் மற்றும் பெண்கள் (மரியாள் மற்றும் பலர்);  படித்தவர்கள் மற்றும் படிக்காதவர்கள், குற்றவாளிகள் மற்றும் அப்பாவிகள், கேலி செய்தவர்கள், அவரை வெறுத்தவர்கள் மற்றும் அவரை நேசிப்பவர்கள் என சுற்றி இருந்தார்கள்.  கர்த்தராகிய இயேசு அனைத்து மனிதகுலத்திற்காகவும் மரித்தார்.

3) மனித மற்றும் தெய்வீக குரல்:
சிலுவை அருகில் பலர் பேசினர், ஏளனம் செய்தனர், கிசுகிசுத்தனர், கதறினார்கள், புலம்பினார்கள். அங்கு  ஒரு தெய்வீகக் குரலும் இருந்தது, கர்த்தர் பிதாவிடம் பேசினார், இது கேட்பவர்களுக்கு புரியவில்லை  (மத்தேயு 27:46). 

4) கேலி செய்தல் மற்றும் நம்புதல்:
இரண்டு திருடர்களுக்கு நடுவே ஆண்டவர் சிலுவையில் அறையப்பட்டார். இடதுபுறம் இருப்பவர், ஏளனம் செய்தார். வலதுபுறம் இருப்பவர், இயேசுவை நம்புகிறார்.

5) மத்தியஸ்தர் அல்லது கைவிடப்பட்டவர்:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தேவனுக்கும் மனிதர்களுக்கும் இடையில் மத்தியஸ்தராக இருக்கிறார்.  அவர் மனிதகுலத்திற்கு தேவனின் அன்பையும் நீதியையும் பிரதிநிதித்துவப்படுத்தினார் மற்றும் தேவ கோபாக்கினையைச் சுமந்து மரணத்தை ருசித்து பரலோகத் தந்தைக்கு ஒரு தியாக பலியைச் செய்தார் (மத்தேயு 27:46-49; மத்தேயு 27:44; லூக்கா 23:39-41; 1 தீமோத்தேயு 2:15)

6) மதம் மற்றும் ஆன்மீகம்:
யூத மதத்தின் மதத் தலைவர்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைக் கொலை செய்ததின் மூலம் கடவுளின் வேலையைச் செய்ததாக தங்களைத் தாங்களே பாராட்டிக் கொண்டனர்.  யோவான், மரியாள், யாக்கோபின் தாய் மற்றும் அவரது வலதுபுறத்தில் உள்ள திருடன் போன்ற சாதாரண மக்கள் கர்த்தராகிய இயேசுவை இரட்சகராகவும் ராஜாவாகவும் உணர முடியும்.  சிலுவையில் அறையப்படுவதற்குப் பொறுப்பான காவலர்களும் அல்லது நூற்றுக்கதிபதியும்  மெய்யாகவே ஆண்டவராகிய இயேசு தேவ குமாரன் என்று அறிவித்தார்கள் (மத்தேயு 27:54).

 7) மனித அதிகாரம் மற்றும் தேவ வல்லமை:
மேசியாவான கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை கொல்ல மனித அரசியல் அதிகாரம் பயன்படுத்தப்பட்டது, ஆனால் தேவன் அதை பாவம், மரணம் மற்றும் சாத்தானை தோற்கடிக்க நியமித்தார்.  மிருகத்தனமான அரசியல் அதிகாரம் உட்பட எந்த சக்தியும் தேவனையோ அல்லது அவருடைய ராஜ்யத்தையோ அல்லது அவருடைய நோக்கத்தையோ தோற்கடிக்க முடியாது என்பதை உயிர்த்தெழுதல் நிரூபித்தது.

 அவருடைய சரீர வழியாகப் படைக்கப்பட்ட வழியில் நான் பிரவேசித்துள்ளேனா?  (எபிரெயர் 10:20)

 Author: Rev. Dr. J. N. Manokaran



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download