ஒரு கிறிஸ்தவ தலைவர் ரயிலில் ஏறினார். அவர் வயதானவராக இருந்ததால், சக பயணிகள் மிகவும் ஒத்துழைப்பவர்களாகவும் நட்பாகவும் இருந்தனர். அது ஒரு முதல் வகுப்பு, பயணத்தின் போது ஒருவர் எங்கே பயணம் செல்கிறீர்கள் என்று கேட்டார், அதற்கு அவர், நான் இந்த இடத்திற்கு போகிறேன் என்பதாக பதிலளித்தார்; “முட்டாள்கள் மட்டுமே அங்கு செல்கிறார்கள் அல்லது கிறிஸ்தவர்கள் மட்டுமே அங்கு செல்கிறார்கள். அதில் நீங்கள் யார்?" என்றார். அதற்கு அவர் பதிலுரையாக; "நான் இரண்டும் தான்" என்றார். ஆம், உலகம் சீஷர்களை முட்டாள்கள் அல்லது பைத்தியக்காரர்கள் என்று பெஸ்து பவுலை அழைத்ததைப் போல புரிந்துகொள்கிறது (அப்போஸ்தலர் 26:24-26). உண்மையில், பவுல் இந்த இரண்டு சொற்களையும் தேவன் மீதான தன் அர்ப்பணிப்புக்கான பாராட்டு கிடைத்தது போல் எடுத்துக் கொண்டார். பேலிக்ஸ் அவரைக் கைதியாக விட்டுச் சென்றதால், பெஸ்து பவுலை அகிரிப்பா ராஜாவிடம் அழைத்துச் சென்றான். பவுலின் குற்றத்தை பெஸ்துவால் புரிந்துகொள்ள முடியவில்லை. எனவே அகிரிப்பா பவுலைக் கேட்க ஒப்புக்கொண்டார். பவுலின் சாட்சியம், வாதம் மற்றும் கண்ணியமான அறிக்கையைக் கேட்டு, பெஸ்து எரிச்சலடைந்தான். பின்பதாக பெஸ்து உரத்த சத்தமாய்: பவுலே, நீ பிதற்றுகிறாய், அதிகக்கல்வி உனக்குப் பயித்தியமுண்டாக்குகிறது என்றான்.
1) மகிழ்ச்சி:
ஒரு கைதி எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும்? ஒரு கைதியாக பவுல் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறினாரே (அப்போஸ்தலர் 26:2). பைத்தியக்காரனால் மட்டுமே சிறையில் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று பெஸ்து முடிவு செய்தான். சிறைச்சாலைக்கு உள்ளேயும் வெளியேயும் எப்பொழுதும் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருக்க முடியும் என்பதை பவுல் அறிந்திருந்தான் (பிலிப்பியர் 4:4).
2) நம்பிக்கை:
மரித்தவர்களை உயிர்ப்பிக்க தேவனால் முடியும் என்று பவுல் வலியுறுத்தினார் (அப்போஸ்தலர் 26:8,23). கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உயிருடன் இருக்கிறார். மேலும் மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையின் நம்பிக்கையைப் பற்றியும், அந்த உண்மையைப் பவுல் உறுதியாகக் கூறியதைக் குறித்தும் பெஸ்து குழப்பமடைந்தான்.
3) பரலோக தரிசனம்:
பவுல் தனது வாழ்க்கை திசையை மாற்றிய பரலோக தரிசனத்தைப் பற்றி பேசினார். பரலோகத்தைப் பற்றியே மக்களால் நம்பவே முடியாத நிலையில், பரலோக தரிசனம் என்பது எப்படி இருக்கும். அத்தகைய தரிசனம் ஒருவரின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றும்? ஆக பெஸ்து முற்றிலும் குழப்பமடைந்தான்.
4) அதிக முன்னுரிமை:
பவுலின் முன்னுரிமை நற்செய்தியைப் பிரசங்கிப்பதே என்பதை பெஸ்து புரிந்துகொண்டான். அவர் கைதியாக இருப்பதைப் பற்றி அவன் கவலைப்படவில்லை, அவரது விடுதலைக்காகவும் மன்றாடவில்லை (அப்போஸ்தலர் 26:22).
5) மனிதநேயம் :
நம்பிக்கையின் நற்செய்தி யூதர்கள் மற்றும் புறஜாதிகளுக்கு, அதாவது அனைத்து மனிதகுலத்திற்கும் என்று பெஸ்து கவனித்தான் (அப்போஸ்தலர் 26:23). ரோமானியப் பேரரசு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அனைவரையும் ஒன்றாக வைத்திருக்க போராடிக்கொண்டிருந்தது, சபை எவ்வாறு ஒரே அமைப்பாக இருக்க முடியும்?
உலகம் என்னை கிறிஸ்துவுக்காக முட்டாள் என்று சொல்கிறதா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்