பல முட்டாள் தலைவர்கள் சூழ்நிலைகளையும் தேவனின் சத்தத்தையும் புரிந்துகொள்வதில்லை அல்லது பகுத்தறிவதில்லை. குறிப்பாக விஷயங்கள் சாதகமாகவோ அல்லது நினைத்தது போல் இல்லாதபோதும், தன்னை தானே ஆராய்ந்து கொள்வது நல்லது. ஆகாய் தீர்க்கதரிசி மக்கள் தங்கள் வழிகளைக் சிந்தித்துப் பார்க்கும்படி கூறினார் (ஆகாய் 1:5-7). மாறாக, தேவனுடைய எச்சரிப்புகளைப் புறக்கணிப்பதன் மூலம் அவர்கள் தங்கள் பாவங்களைச் சேர்த்துக்கொள்கிறார்கள்.
தேவ அன்பு:
தேவன் தம் மக்களை நேசித்தார், ஆனால் மக்கள் நேர்மறையாக பதிலளிக்கவில்லை. யூதா ராஜ்யம் தொடர்ந்து தேவனுக்கு எதிராக கலகம் செய்தது. முதலில், தேவன் அவர்களைக் கைவிடவில்லை, சிரத்தையுடன் இருந்தார். அவர் அலைகளைப் போல, அவருடைய தூதர்கள் மற்றும் தீர்க்கதரிசிகளை அனுப்பினார். இரண்டாவதாக, தேவன் தம்முடைய மக்கள் மீது இரக்கம் கொண்டிருந்தார், அதைத் தம் பிரதிநிதிகள் மூலம் காட்டினார். மூன்றாவதாக, வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தையும் பரிசுத்த நகரத்தையும் பெற்ற மக்கள் அவற்றை இழந்துவிடக்கூடாது என்பதில் தேவன் அக்கறை கொண்டிருந்தார். இருப்பினும், அவர்கள் அவருடைய தூதர்களை கேலி செய்தும், தீர்க்கதரிசிகளை நிராகரிப்பதன் மூலமும் பிரதியுத்ரம் அளித்தனர் (2 நாளாகமம் 36:15-16).
கேலி கிண்டலுக்கு ஆளான தூதர்கள்:
தூதுவர்களை கேலி செய்வது என்பது உண்மையாக யார் அந்த செய்தியை அனுப்பினாரோ அவரைக் கேலி செய்வதாகும். அவர்களுக்கு தேவன் மீது பயம் இல்லாததால், தேவனின் தூதர்களை அவர்கள் மதிக்கவில்லை. மற்றவர்களை கேலி செய்வதும், ஏளனம் செய்வதும், கிண்டல் செய்வதும் என்பது தூதர்களை அனுப்பிய தேவனை அவமானப்படுத்துவதாகும். தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் தூதர்களை கேலி செய்வதில் துணிச்சலாக இருந்தனர்.
வார்த்தையை நிராகரித்தல்:
தேர்ந்தெடுக்கப்பட்ட தேசம் தொடர் குற்றவாளிகள். அவர்கள் மீண்டும் மீண்டும் தேவனுடைய வார்த்தையை நிராகரித்தனர். உண்மையில், மோசே பத்துக் கட்டளைகளை அவர்களிடம் கொண்டு வந்தபோது, அவர்கள் ஏற்கனவே ஆரோன் தலைமையிலான சிலைகளை வணங்குவதன் மூலம் அதை நிராகரித்தனர். இது ஆசாரியர்களால் படிக்கப்படவில்லை, மன்னர்களால் நகலெடுக்கப்பட்டது, ஆலயத்தில் பிரசங்கம் செய்யப்பட்டது, கிராமங்கள் மற்றும் நகரங்களில் கற்பிக்கப்பட்டது. மக்கள் தேவனின் வார்த்தையை நிராகரித்தால், அவர் அவர்களை நிராகரிப்பார், அதுமாத்திரமல்ல ஆபத்தான மற்றும் பயமான விஷயம் என்னவென்றால், அவர்களின் பிள்ளைகளையும் அல்லவா தேவன் மறந்துவிடுவார் (ஓசியா 4:6).
தீர்க்கதரிசிகளை நிராகரித்தல்:
தீர்க்கதரிசிகளை நிராகரிப்பதிலும், எதிர்ப்பதிலும், கொலை செய்வதிலும் இஸ்ரவேல் நிபுணத்துவம் பெற்றிருந்தது. அவர்களின் முன்னோர்களால் கொல்லப்பட்ட தீர்க்கதரிசிகளுக்கு அடுத்த தலைமுறையினர் கல்லறைகளைக் கட்டினார்கள் (லூக்கா 11:47). தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகளை அனுப்பி, சத்தியத்தை அறிவிக்கவும், மனந்திரும்பி, தேவனோடு ஒப்புரவாகவும் மக்களை அழைக்கிறார். அவர்கள் ஆமோஸையும் மற்ற தீர்க்கதரிசிகளையும் நீங்கள் யார்? உங்களை அனுப்பியது யார்? யூதாவுக்குச் சென்று அங்கே தீர்க்கதரிசனம் சொல்லுங்கள், பெத்தேலில் இனி தீர்க்கதரிசனம் சொல்லாதீர்கள் என்றார்கள் (ஆமோஸ் 7: 10-17).
இன்று தேவனுடைய வார்த்தையை நிராகரிக்கும் முட்டாளா நான்?
Author: Rev. Dr. J .N. மனோகரன்