ஆமோஸ் 7:10-17

7:10 அப்பொழுது பெத்தேலில் ஆசாரியனான அத்சியா இஸ்ரவேலின் ராஜாவாகிய எரொபெயாமுக்கு அனுப்பி: ஆமோஸ் இஸ்ரவேல் வம்சத்தாரின் நடுவே உமக்கு விரோதமாகக் கட்டுப்பாடு பண்ணுகிறான்; தேசம் அவன் வார்த்தைகளையெல்லாம் சகிக்கமாட்டாது.
7:11 எரோபேயாம் பட்டயத்தினால் சாவான் என்றும், இஸ்ரவேல் தன்தேசத்திலிருந்து சிறைபிடித்துக்கொண்டுபோகப்படுவான் என்றும் ஆமோஸ் சொல்லுகிறான் என்று சொல்லச்சொன்னான்.
7:12 அமத்சியா ஆமோசை நோக்கி: தரிசனம் பார்க்கிறவனே, போ; நீ யூதாதேசத்துக்கு ஓடிப்போ, அங்கே அப்பம் தின்று, அங்கே தீர்க்கதரிசனம் சொல்லு.
7:13 பெத்தேலிலே இனித் தீர்க்கதரிசனம் சொல்லாதே; அது ராஜாவின் பரிசுத்த ஸ்தலமும் ராஜ்யத்தின் அரமனையுமாயிருக்கிறது என்றான்.
7:14 ஆமோஸ் அமத்சியாவுக்குப் பிரதியுத்தரமாக: நான் தீர்க்கதரிசியுமல்ல, தீர்க்கதரிசியின் புத்திரனுமல்ல; நான் மந்தை மேய்க்கிறவனும், காட்டத்திப்பழங்களைப் பொறுக்குகிறவனுமாயிருந்தேன்.
7:15 ஆனால் மந்தையின் பின்னாலே போகிறபோது என்னைக் கர்த்தர் அழைத்து, நீ போய் என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லு என்று கர்த்தர் உரைத்தார்.
7:16 இப்போதும் நீ கர்த்தருடைய வார்த்தையைக் கேள்; இஸ்ரவேலுக்கு விரோதமாய்த் தீர்க்கதரிசனம் சொல்லாதே, ஈசாக்கின் வம்சத்தாருக்கு விரோதமாக ஒன்றையும் சொல்லாதே என்று சொல்லுகிறாயே.
7:17 இதினிமித்தம்: உன் பெண்ஜாதி நகரத்தில் வேசியாவாள்; உன் குமாரரும் உன் குமாரத்திகளும் பட்டயத்தால் விழுவார்கள்; உன் வயல் அளவு நூலால் பங்கிட்டுக்கொள்ளப்படும்; நீயாவெனில் அசுத்தமான தேசத்திலே செத்துப்போவாய்; இஸ்ரவேலும் தன் தேசத்திலிருந்து சிறைபிடிக்கப்பட்டுக் கொண்டுபோகப்படுவான் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.




Related Topics



முட்டாள் தலைவர்கள்-Rev. Dr. J .N. மனோகரன்

பல முட்டாள் தலைவர்கள் சூழ்நிலைகளையும் தேவனின் சத்தத்தையும் புரிந்துகொள்வதில்லை அல்லது பகுத்தறிவதில்லை.  குறிப்பாக விஷயங்கள் சாதகமாகவோ அல்லது...
Read More



அப்பொழுது , பெத்தேலில் , ஆசாரியனான , அத்சியா , இஸ்ரவேலின் , ராஜாவாகிய , எரொபெயாமுக்கு , அனுப்பி: , ஆமோஸ் , இஸ்ரவேல் , வம்சத்தாரின் , நடுவே , உமக்கு , விரோதமாகக் , கட்டுப்பாடு , பண்ணுகிறான்; , தேசம் , அவன் , வார்த்தைகளையெல்லாம் , சகிக்கமாட்டாது , ஆமோஸ் 7:10 , ஆமோஸ் , ஆமோஸ் IN TAMIL BIBLE , ஆமோஸ் IN TAMIL , ஆமோஸ் 7 TAMIL BIBLE , ஆமோஸ் 7 IN TAMIL , ஆமோஸ் 7 10 IN TAMIL , ஆமோஸ் 7 10 IN TAMIL BIBLE , ஆமோஸ் 7 IN ENGLISH , TAMIL BIBLE AMOS 7 , TAMIL BIBLE AMOS , AMOS IN TAMIL BIBLE , AMOS IN TAMIL , AMOS 7 TAMIL BIBLE , AMOS 7 IN TAMIL , AMOS 7 10 IN TAMIL , AMOS 7 10 IN TAMIL BIBLE . AMOS 7 IN ENGLISH ,