1. பறக்கும் கொடி (வெற்றிக்கொடி)
சங்கீதம் 60:4 சத்தியத்தினிமித்தம் ஏற்றும்படியாக, உமக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு ஒரு கொடியைக் கொடுத்தீர்
சங்கீதம் 20:5 நாங்கள் உமது இரட்சிப்பினால் மகிழ்ந்து, எங்கள் தேவனு டைய நாமத்திலே கொடியேற்றுவோம்
உன்னதப்பாட்டு 2:4 என்மேல் பறந்த அவருடைய கொடி நேசமே.
ஏசாயா 5:26; 11:10-12; 49:22; 59:19 ஜாதிகளுக்காக கொடியேற்றுவார்;
ஏசாயா 13:2; 62:10; எரேமியா 4:6; 50:2; 51:12,27 கொடி ஏற்றுங்கள்; யாத்திராகமம் 17:8-16 யேகோவா நீசி
2. படரும் கொடி (செடியின் கொடி)
யோவான் 15:5 நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனி களைக் கொடுப்பான்
ஆதியாகமம் 49:22 யோசேப்பு கனிதரும் செடி; அவன் நீர் ஊற்றண்டை யிலுள்ள கனிதரும் செடி; அதின் கொடிகள் சுவரின்மேல் படரும்
சங்கீதம் 80:8,11 (7-11) நீர் எகிப்தில் இருந்து ஒரு திராட்சக்கொடியைக் கொண்டுவந்து அதை நாட்டினீர்... அது தன் கொடிகளைச் சமுத்திரமட் டாகவும், தன் கிளைகளை நதிமட்டாகவும் பரவவிட்டது.
யோபு 8:16 (7-14) அதின் கொடிகள் அவன் தோட்டத்தின்மேலே படரும்
3. தொடரும் கொடி (தொப்புள் கொடி)
= குழந்தைக்கும் தாய்க்கும் இடையேயான உயிர் பாதை
= குழந்தையை உயிருடன் பாதுகாக்கிறது
= கர்ப்பத்தில் குழந்தையின் முன்னேற்றத்திற்கு உதவிடும்
= குழந்தைக்கு உணவு மற்றும் காற்று (ஆக்ஸிஜன்) கொடுக்கிறது
= தாய்ப்பால் கொடுப்பதற்கு இது தயார்படுத்தும்
= தனித்துவமானது, ஒவ்வொரு கருவிற்கும் இது வேறுபடும்
= கருவை விட்டு வெளியேறிய பிறகும் உயிருடன் இருக்கும்
= தொப்புள்கொடி பிறக்காமல் பிரசவம் முழுமை அடையாது
தொப்புகொடி உறவாக ஆதாம் தொட்டு இன்றுவரை கர்த்தரின்
அன்பு நம்மைத் தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கிறது.
Author: Rev. M. Arul Doss .