பல முட்டாள் தலைவர்கள் சூழ்நிலைகளையும் தேவனின் சத்தத்தையும் புரிந்துகொள்வதில்லை அல்லது பகுத்தறிவதில்லை.
சிலுவை என்பது தேவனின் பண்புகள், எண்ணம் மற்றும் நோக்கம் ஆகியவற்றின் மிகப்பெரிய வெளிப்பாடு ஆகும். கிறிஸ்தவ நம்பிக்கையின் மையமானது சிலுவையாகும், அங்கு தேவன் பாவம் நிறைந்த மனிதகுலத்தை சந்தித்தார், மீட்கப்படும் மனிதகுலத்தின் ஒரே நம்பிக்கையாகும்.
பரிசுத்தம்
தேவன் பரிசுத்தமானவர், அவர் பரிசுத்தர் என்று வேதாகமம் மட்டுமே கற்பிக்கிறது (லேவியராகமம் 20:26). எனவே, பரிசுத்த தேவன் பாவத்துடன் ஒப்புரவாக முடியாது. பாவத்தின் அருவருப்பானது தீர்க்கப்பட வேண்டும், பாவிகள் தண்டிக்கப்பட வேண்டும், அவர்களை விடுவிக்க முடியாது. எனவே, உலகத்தின் பாவத்தைச் சுமக்க முன்வந்த தேவகுமாரன் மீது பாவிகளுக்கு எதிரான தேவனின் கோபம் ஊற்றப்பட்டது.
அன்பு
தேவன் மனிதர்களை நேசித்தார். ஆதாமும் ஏவாளும் பாவம் செய்தபோது தேவன் அவர்களை அழித்திருக்க முடியும். மாறாக, தேவன் அவர்களை நேசித்தார் மற்றும் மீட்பிற்கான வழியை உருவாக்கினார். பெண்ணின் விதையாக வந்து சாத்தானின் தலையை நசுக்கக்கூடிய இரட்சகராகிய மேசியாவின் வாக்குறுதியை அவர் வழங்கினார் (ஆதியாகமம் 3:15). இந்த அன்பு வாக்குறுதி சிலுவையில் நிறைவேறியது.
நீதி
தேவனுடைய நீதி சிலுவையில் வெளிப்படுகிறது. தேவன் நீதியுள்ளவர், மனிதகுலத்தின் பாவத்திற்காக ஆண்டவர் இயேசு தண்டிக்கப்படுகிறார். எனவே, மனந்திரும்பி, கர்த்தரை விசுவாசிக்கும் பாவிகள் இனி தண்டிக்கப்பட மாட்டார்கள். கிறிஸ்துவின் இரத்தம் எல்லா பாவங்களிலிருந்தும் நம்மைச் சுத்திகரிப்பது போல, தேவன் பாவிகளை மன்னிக்க உண்மையும் நீதியும் உள்ளவர் (1 யோவான் 1:9-10).
மகத்துவம்
தேவனின் நித்திய ஆட்டுக்குட்டியாகவும், மெல்கிசேதேக்கின் வரிசையில் நித்திய பிரதான ஆசாரியராகவும் இருக்கும் தம்முடைய குமாரனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாக மனிதகுலத்தின் பாவத்திற்குத் தீர்வை உண்டாக்கினாரே, இந்த தேவன் எத்தனை மகத்துவமானவர். இது மனித அறிவுக்கு அப்பாற்பட்ட மர்மம்.
இரக்கம்
தேவன் தனது கிருபையை உலகுக்கு வெளிப்படுத்தினார். ஒருவர் இப்படியாக கூறினார்; தகுதியற்ற, ஒன்றுக்கும் உதவாத மற்றும் நரகத்திற்குத் தகுதியான பாவிகளுக்கு தேவன் இரக்கம் காட்டினார். உண்மையைச் சொல்லப்போனால் நாம் அனைவருமே நித்திய நரகத்திற்கும் அக்கினி கடலுக்கும் உரியவர்களே; ஆனால் தேவ கிருபை விளக்கப்படுவதையும், பிரகடனப்படுத்தப்படுவதையும், பிரச்சாரம் செய்வதையும் நம்மால் காண முடிகிறது.
அருட்பணி
டேவிட் போஷ் எழுதுகிறார்; அருட்பணி என்பது திருச்சபையின் செயல்பாடு மட்டுமல்ல, தேவனின் பண்பு. மனிதர்கள் கடவுளைத் தேடிச் செல்ல வேண்டிய அவசியமில்லை, மாறாக, தேவன் தேடி, வழிதவறிய பாவமுள்ள மனிதர்களைத் தன்னை நோக்கி அழைக்கிறார். கிறிஸ்து சிலுவையில் உயர்த்தப்படும்போது, அவர் மக்களைத் தம்மிடம் சேர்த்துக் கொள்வார் (யோவான் 3:14).
சிலுவையில் காட்டப்படும் தேவனின் பண்புகளை நான் புரிந்துகொண்டேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்