ஒரு கிராமத்தில் ஒரு வயதான பெண்மணியை ஒருவரும் ஏற்றுக் கொள்ளவில்லை, நிராகரிக்கப்பட்டாள் மற்றும் புறக்கணிக்கப்பட்டாள். அப்பெண்மணியின் கண்களுக்கு முன்பதாகவே தங்கள் வீட்டுக் கதவுகளை ஓங்கி அறைந்து சாத்தினர். மிகவும் கவலைப்பட்ட அப்பெண்மணி அருகிலிருந்த அடுத்த கிராமத்திற்கு சென்றாள். அங்கே அவள் அழுது கொண்டே ஓரிடத்தில் அமர்ந்திருந்தாள். அப்போது திடீரென்று, ஒரு அழகான இளைஞன் குதிரையில் சவாரி செய்தபடி அங்கு வந்தான். அப்போது அந்த கிராம மக்கள் அனைவரும் ஓடோடி வந்து அவனை தங்கள் வீடுகளுக்கு அழைத்து சென்று நன்கு கவனித்தனர், அவனுக்கு பரிசுப் பொருட்கள் எல்லாம் அளித்தனர், இந்த விருந்தோம்பலையும் கிடைத்த பரிசுகளை மூட்டைக் கட்டிக் கொண்டிருந்த அந்த இளைஞனையும் பார்த்த அந்த முதியவள் அந்த இளைஞனிடம்; "உன் பெயர் என்ன?" என்று கேட்டாள். அதற்கு அவன்; "என் பெயர் கதை, உங்கள் பெயர் என்ன?" என்றான். அதற்கு அவள்; "என் பெயர் சத்தியம்", என்றாள். அவன், "சரி, நீங்களும் என்னுடன் வாருங்கள், நாம் ஒன்றாக பயணம் செய்யலாம் மற்றும் சத்தியத்தை அறிவிப்போம், பரிசுகளை இருவரும் பாதி பாதியாக பிரித்துக் கொள்ளலாம் என்றான். (இது ரே நியூ, கதை சொல்லி (Orality Consultant) பகிர்ந்த கதை) ஆம், வெறுமனே சத்தியத்தைப் பேசுவது மக்களால் வரவேற்கப்படுவதில்லை. அன்புடன் சத்தியத்தைக் கைக்கொள்ள வேண்டும் என்பதாக எபேசியர் 4:15 நமக்கு தெரிவிக்கின்றது. அன்பில் சத்தியம் (உண்மை) என்றால் கதையோடு சத்தியத்தை எப்படி அறிவிப்பது என்பதான பின்நவீனத்துவ தலைமுறைக்கானது.
1) பேசு:
தேவன் சத்தியத்தை, நற்செய்தியை, தேவ வார்த்தையை எல்லா மனித இனத்திற்கும் சென்று சொல்ல வேண்டும் என்று நம்மை அழைத்துள்ளார். ஆம், நாம் உலகெங்கும் சென்று நற்செய்தியைப் பிரசங்கிக்க வேண்டும் அல்லது சொல்ல வேண்டும் அல்லது கற்பிக்க வேண்டும் (மத்தேயு 28: 18-20).
2) சத்தியம்:
நாம் சத்தியத்தைப் பேச வேண்டும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே சத்தியம், அவருடைய வார்த்தையே சத்தியம் (யோவான் 14: 6; 17:17). பெரும்பாலான மக்களுக்கு உண்மை கசப்பாக இருக்கிறது. மருந்து என்றாலே பெரும்பாலும் கசப்பானது, ஆனால் குணப்படுத்துவதற்கு அது அவசியம். எனவே, மருந்தில் இனிப்பு தடவி வழங்கப்படுகிறது.
3) அன்பு:
அன்புடன் கூட சத்தியத்தை நாம் முன்வைக்கலாம் என்று பவுல் ஆலோசனை அளிக்கிறார். வயதானவர்கள் அல்லது இளைஞர்கள், ஆண்கள் அல்லது பெண்கள் என எல்லா மனிதர்களுக்குமே கதைகள் என்றால் மிகவும் பிடிக்கும். அதுபோல, மக்கள் கதைகளுடன் தங்களை தொடர்புபடுத்திப் பார்க்கிறார்கள் மற்றும் அக்கதையில் வரும் கதாபாத்திரங்களுடன் தங்களை அடையாளம் காண்கிறார்கள். எனவே, மக்கள் கதைகளை ஆர்வத்துடன் கேட்க விரும்புகிறார்கள். அவர்களின் மனம் கதையைப் கேட்பது மட்டுமல்லாமல், அவர்களின் இதயத்தையும் தொடுகிறது. எனவே, ஆண்டவராகிய இயேசு எப்படி உவமைகளைப் பயன்படுத்தினாரோ அதுபோல சத்தியத்தை அறிவிக்க நவீனகால டெக்னாலஜி பயன்படுத்தி சொல்வது அல்லது நல்ல எடுத்துக்காட்டுகளோடு சத்தியத்தை அறிவிப்பது என்பது மூலோபாயமானது (புத்திசாலித்தனமானது).
டிஜிட்டல் உலகில், அதிகமான மக்கள் படிப்பதை விட கேட்பது மற்றும் பார்ப்பதன் மூலம் ஊடகத்துடன் இணைப்புக் கொள்கிறார்கள்.
அன்புடன் சத்தியத்தை பேச நான் முயற்சி செய்கிறேனா?
Author: Rev. Dr. J. N. Manokaran