யோசேப்பு; தார்மீக விழுமியங்களில் தனித்துவமானவன்

கூட்டத்தைப் பின்தொடர்வது எளிது.  மோசமான முன்மாதிரிகளைத் தேர்ந்தெடுத்து பலர் தவறு செய்கிறார்கள்.  சமகால போக்குகள் ஒரு சீஷனை வேதாகம மதிப்புகளை சமரசம் செய்ய கட்டாயப்படுத்துகின்றன.  ஆம், சோதனை வீரியமாக தான் உள்ளது, ஆனால் சீஷர்கள் ஜெயங்கொள்பவர்களாக இருக்க அழைக்கப்பட்டுள்ளனர்.

ரூபனின் தோல்வி:
யாக்கோபு குடும்பத்தில் மூத்தவனான ரூபன் தனது  வாழ்வில் ஒழுக்கத்தை கடைப்பிடிப்பில் தோல்வியடைந்தான். "இஸ்ரவேல் அந்தத் தேசத்தில் தங்கிக் குடியிருக்கும்போது, ரூபன் போய், தன் தகப்பனுடைய மறுமனையாட்டியாகிய பில்காளோடே சயனித்தான்" (ஆதியாகமம் 35:22). இந்த விபச்சாரம் ரூபனுக்கான முதற்பேறான உரிமைகளை நிராகரித்து யோசேப்புக்கு வழங்கச் செய்தது (ஆதியாகமம் 49:4; 1 நாளாகமம் 5:1).

 யூதாவின் தோல்வி:
யூதாவின் மூத்த மகன் ஏர் இறந்தபோது, வழக்கப்படி ​​அவனுடைய மனைவியான தாமார் ஓனானுக்குக் கொடுக்கப்பட்டாள்.  அவன் யூதமுறைப்படியான திருமண ஏற்பாட்டின்கீழ் தன் கடமையைச் செய்ய மறுத்துவிட்டான், கர்த்தர் அவனைத் தண்டித்தார்.  யூதா தனது மூன்றாவது மகன் சேலாவை தாமாருக்குக் கொடுக்கவில்லை, அவன் வாலிபப் பருவத்தினன் என்றும் அவன் பெரியவன் ஆன பின்பு கொடுப்பதாகவும் கூறினான்.  அவன் பெரியவன் ஆன பின்பும் ​​யூதா சேலாவை தாமாருக்கு மணமுடிக்கவில்லை.  வழக்கத்திற்கு மாறாக, தாமார் ஒரு விபச்சாரி போல் அலங்காரம் செய்து யூதாவை மயக்கி, யூதா தனது மருமகள் என்பதை அறியாதபடி ஒரு குழந்தையைப் பெற்றாள் (ஆதியாகமம் 38:13-19).

யோசேப்பின் ஜெயம்:
"போத்திபார் தனக்கு உண்டானதையெல்லாம் யோசேப்பின் கையிலே ஒப்புக்கொடுத்துவிட்டு, தான் புசிக்கிற போஜனம் தவிர தன்னிடத்திலிருந்த மற்றொன்றைக்குறித்தும் விசாரியாதிருந்தான்" என்பதை போத்திபாரின் மனைவி அறிந்தாள். (ஆதியாகமம் 39:6). போத்திபார் ஒரு அண்ணகன் (இனப்பெருக்கம் செய்ய முடியாத ஒரு மனிதன்)
என்று சில அறிஞர்கள் நினைக்கிறார்கள்.  எனவே, அவள் வீட்டுத் தலைமைத் தளபதியாக இருந்த யோசேப்பு (வாடகை தந்தை) மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்பட்டாள். தேவனுக்கு முன்பாகவும், போத்திபார் மற்றும் அவளுக்கு எதிராகவும் பாவம் செய்ய முடியாது என்று யோசேப்பு அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டான் (ஆதியாகமம் 39:11-12). இந்த விஷயம் போத்திபாருக்கு அறிவிக்கப்பட்டபோது, ​​அவன் கோபமடைந்தான், ஆனால் யோசேப்பை தூக்கிலிடவில்லை அல்லது அவனை காயப்படுத்தவில்லை  (ஆதியாகமம் 39:19). அவன் சிறையில் தள்ளப்பட்டான்.  அவன் வாடகைத் தந்தையாக இருக்க மறுத்ததற்கு இது தண்டனை என்று சில அறிஞர்கள் கருதுகின்றனர்.

 துன்பத்தை அனுபவிக்க விருப்பம்:
 யோசேப்பு சோதனைகளுக்கு அடிபணிவதை விட பாவத்தை மறுப்பதன் மூலம் துன்பப்படுவதற்கு தயாராக இருந்தான். "தீமைசெய்து பாடனுபவிப்பதிலும், தேவனுக்குச் சித்தமானால், நன்மை செய்து பாடனுபவிப்பதே மேன்மையாயிருக்கும்" (1 பேதுரு 3:17). பாவங்களின் விளைவுகள் நித்தியமானவை, அதே சமயம் யோசேப்பின் தண்டனையும் சிறைவாசமும் இவ்வுலக வாழ்க்கைக்கு வரம்புக்குள்ளானது. யோசேப்பு தனது சகோதரர்களிடமிருந்து வேறுபட்டவன்.  அவன் தனது சகோதரர்களின் உதாரணங்களையோ அல்லது கலாச்சார ரீதியாக அனுமதிக்கும் பிறழ்வுகளையோ பின்பற்றவில்லை.

 பரிசுத்தம் என் இலக்குவாசகமா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download