ஆதியாகமம் 38:13-19

38:13 அப்பொழுது: உன் மாமனார் தம்முடைய ஆடுகளை மயிர்க்கத்தரிக்கத் திம்னாவுக்குப் போகிறார் என்று தாமாருக்கு அறிவிக்கப்பட்டது.
38:14 சேலா பெரியவனாகியும் தான் அவனுக்கு மனைவியாகக் கொடுக்கப்படவில்லை என்று அவள் கண்டபடியால், தன் கைம்பெண்மைக்குரிய வஸ்திரங்களைக் களைந்துபோட்டு, முக்காடிட்டுத் தன்னை மூடிக்கொண்டு, திம்னாவுக்குப் போகிற வழியிலிருக்கிற நீரூற்றுகளுக்கு முன்பாக உட்கார்ந்தாள்.
38:15 யூதா அவளைக் கண்டு, அவள் தன் முகத்தை மூடியிருந்தபடியால், அவள் ஒரு வேசி என்று நினைத்து,
38:16 அந்த வழியாய் அவளிடத்தில் போய், அவள் தன் மருமகள் என்று அறியாமல்: நான் உன்னிடத்தில் சேரும்படி வருவாயா என்றான்; அதற்கு அவள்: நீர் என்னிடத்தில் சேரும்படி, எனக்கு என்ன தருவீர் என்றாள்.
38:17 அதற்கு அவன்: நான் மந்தையிலிருந்து ஒரு வெள்ளாட்டுக் குட்டியை அனுப்புகிறேன் என்றான். அதற்கு அவள்: நீர் அதை அனுப்புமளவும் ஒரு அடைமானம் கொடுப்பீரா என்றாள்.
38:18 அப்பொழுது அவன்: நான் உனக்கு அடைமானமாக என்ன கொடுக்கவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவள்: உம்முடைய முத்திரை மோதிரமும் உம்முடைய ஆரமும் உம்முடைய கைக்கோலும் கொடுக்கவேண்டும் என்றாள். அவன் அவைகளை அவளுக்குக் கொடுத்து, அவளிடத்தில் சேர்ந்தான்; அவள் அவனாலே கர்ப்பவதியாகி,
38:19 எழுந்துபோய், தன் முக்காட்டைக் களைந்து, தன் கைம்பெண்மைக்குரிய வஸ்திரங்களை உடுத்திக்கொண்டாள்.




Related Topics



யோசேப்பு; தார்மீக விழுமியங்களில் தனித்துவமானவன்-Rev. Dr. J .N. மனோகரன்

கூட்டத்தைப் பின்தொடர்வது எளிது.  மோசமான முன்மாதிரிகளைத் தேர்ந்தெடுத்து பலர் தவறு செய்கிறார்கள்.  சமகால போக்குகள் ஒரு சீஷனை வேதாகம மதிப்புகளை...
Read More



அப்பொழுது: , உன் , மாமனார் , தம்முடைய , ஆடுகளை , மயிர்க்கத்தரிக்கத் , திம்னாவுக்குப் , போகிறார் , என்று , தாமாருக்கு , அறிவிக்கப்பட்டது , ஆதியாகமம் 38:13 , ஆதியாகமம் , ஆதியாகமம் IN TAMIL BIBLE , ஆதியாகமம் IN TAMIL , ஆதியாகமம் 38 TAMIL BIBLE , ஆதியாகமம் 38 IN TAMIL , ஆதியாகமம் 38 13 IN TAMIL , ஆதியாகமம் 38 13 IN TAMIL BIBLE , ஆதியாகமம் 38 IN ENGLISH , TAMIL BIBLE Genesis 38 , TAMIL BIBLE Genesis , Genesis IN TAMIL BIBLE , Genesis IN TAMIL , Genesis 38 TAMIL BIBLE , Genesis 38 IN TAMIL , Genesis 38 13 IN TAMIL , Genesis 38 13 IN TAMIL BIBLE . Genesis 38 IN ENGLISH ,