பார்வோன் நேகோவின் உதவியுடன் யோயாக்கீம் யூதாவின் ராஜாவானான் (2 நாளாகமம் 36:1-4). பார்வோன் நேகோ பாபிலோன் மீது படையெடுத்தான். இளம் நேபுகாத்நேச்சார் எகிப்தியர்களை கர்கேமிசிலே தோற்கடித்தான், பின்னர் சீனாய் மீது எகிப்திய சேனையை பின்தொடர்ந்தான். பாபிலோனுக்குத் திரும்பும் வழியில், கிமு 605 மே அல்லது ஜூன் மாதத்தில் எருசலேமைக் கைப்பற்றினான். கிமு 597 இல், கர்த்தர் யோயாக்கீமை நேபுகாத்நேச்சாரின் கைகளில் கொடுத்தார். இதில் யோயாக்கீம், எசேக்கியேல் மற்றும் பலர் நாடு கடத்தப்பட்டனர் (2 இராஜாக்கள் 24:14-16). பின்னர் கிமு 587 இல் மேலும் ஒரு படையெடுப்பு நடந்தது, அதில் எருசலேம் வீழ்ச்சியடைந்தது. இரண்டு பெரிய பாவங்களுக்காக; அதாவது அநீதியான காரியங்கள் தவிர, சிலை வழிபாட்டிற்காகவும் மற்றும் ஓய்வுநாளைக் கடைப்பிடிப்பதைப் புறக்கணித்ததற்காகவும் தேவன் தண்டித்தார் (லேவியராகமம் 25:1-7; 26:2-35). தாவீதின் முடியாட்சி முடிவுக்கு வந்தது. எருசலேமில் ஆலய வழிபாடும் பலியும் முடிவடைந்தது.
1) உருவ வழிபாட்டில் இருந்து விடுதலை:
யூதர்கள் உருவ வழிபாட்டிலிருந்து முற்றிலும் குணமடைந்தனர்.
2) ஒருங்கிணைப்பு:
எகிப்தின் அடிமைத்தனத்தைப் போலவே, பாபிலோனிலும், அவர்கள் கஷ்டங்களையும் தனிமைப்படுத்தலையும் சகித்தார்கள். அதில் அவர்கள் நெருக்கமாகவும், ஒற்றுமையாகவும், வலுவாகவும் வளர்ந்தார்கள்.
3) ஜெப ஆலயங்கள்:
முறையான யூத வழிபாடு ஜெப ஆலயங்கள் என்று அழைக்கப்படும் இடங்களில் நடந்தது. சிறுபிள்ளைகளும் அங்கு கல்வி கற்றனர். யூதர்கள் தங்கள் நம்பிக்கையையும் கலாச்சார அடையாளத்தையும் தக்க வைத்துக் கொள்ள இது (ஜெப ஆலயங்கள்) உதவியது. அவர்கள் பலிகளை ஜெபங்கள், வேதாகம வாசிப்பு மற்றும் வழிபாட்டுடன் மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. யூத புலம்பெயர்ந்தோரிடையே உள்ள இந்த ஜெப ஆலயங்கள் ரோமானியப் பேரரசு முழுவதும் பவுலின் நற்செய்திக்கான ஒரு கருவியாக அல்லது விசைமூலமாக மாறியது எனலாம். ஜெப ஆலயங்களின் வழிபாட்டு முறை சபை ஆராதனைக்களுக்கான வார்ப்புருவாக (template) மாறியது.
4) மத குழுக்கள்:
ஆதிக்கம் செலுத்தும் மதக் குழுக்கள்: வேதபாரகர்கள், பரிசேயர்கள், சதுசேயர்கள் மற்றும் பிறர் தோன்றினர்.
5) வேதம்:
உண்மையில், தோரா ஆவிக்குரிய வாழ்க்கையின் மையமாக மாறியது. முன்பு அது எருசலேமில் உள்ள ஆலயமாக இருந்தது, இப்போது மையமாக வேதம் நிறுவப்பட்டது. யூதவேத கட்டளைப்பகுதியை வேதபாரகர்களும் (தேவனின் பிரமாணங்கள் - வாய்வழி பாரம்பரியம்) மற்றும் பாபிலோனிய டால்முட் மற்றும் பிற பொதுவான இலக்கியங்களை உருவாக்கிய கெமேரா (விளக்கவுரை) ஆகியவற்றையும் உருவாக்கினர். கெமேரா (ஆரம்பத்தில் டால்மூட் என்றழைக்கப்பட்டது; மிஷ்னாவுக்கு கொடுத்த விளக்கவுரைகளின் ஒரு தொகுப்பு).
6) கற்பித்தல்:
எஸ்றா போன்ற போதகர்கள் தோன்றினர், படித்தவர்கள், புரிந்துகொண்டு, விளக்கங்கள் எழுதி, விண்ணப்பித்து, தேவக் கட்டளைகள் மற்றும் தரங்களின்படி வாழக் கற்றுக் கொடுத்தார்கள்.
7) ஓய்வுநாள் அனுசரிப்பு:
யூதர்கள் ஓய்வுநாளைத் தீவிரமாகக் கடைப்பிடிக்கத் தொடங்கினர், இன்றுவரை தொடர்ந்து வருகிறார்கள்.
இஸ்ரவேல் தேசத்தை அசைக்கவும், திகைப்பிற்குள்ளாக்கவும் (சரிசெய்வதற்கான அதிர்ச்சி), வடிவமைக்கவும், மேசியா வருவதற்கும், சபை சகாப்தம் தொடங்குவதற்கும் தேவன் இதைப் பயன்படுத்தினார்.
தேவன் தம் மக்களை வடிவமைக்க அவர்களை தண்டிக்கிறார் என்பதை நான் உணர்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்